Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சாட்சிகூறுதலை ஆரம்பிக்கவேண்டிய இடம்! , ஏப்ரல் 4

    “அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக் கன்றுகளைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள்.” - சங்கீதம் 144:12.Mar 187.1

    கிறிஸ்துவிற்காக நாம் செய்யும் பணியானது, வீட்டிலுள்ள குடும்பத்தாரிடம் ஆரம்பிக்க வேண்டும். இதைவிட மிகவும் முக்கியமான பணித்தளம் வேறு எதுவும் கிடையாது. தேவனுடைய வாக்குத்தத்தங்களும் அவருடைய கட்டளைகளும் குழந்தையிடத்தில் நன்றியையும் பயபக்தியையும் விழிப்படையச் செய்யத்தக்கதாக, எந்தப் பெற்றோர்களின் ஜீவியங்களானது தெய்வீகத்தின் ஒரு உண்மையான பிரதிபலிப்பாக இருக்கிறதோ, அந்தப் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடையவர்கள். தேவனுடைய அன்பையும் நீதியையும் நீடிய பொறுமையையும், எந்தப் பெற்றோர்களது மென்மையான குணமும் நீதியும் நீடிய பொறுமையையும் செயல்படுத்திக் காட்டுகின்றதோ, அந்தப் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடையவர்கள். எந்தப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் தங்களை நேசிக்கவும் நம்பவும் தங்களுக்குக் கீழ்ப்படியவும் கற்றுக்கொடுத்து, அதன்மூலமாக, பரலோகத்திலிருக்கிற பிதாவை நேசிக்கவும் நம்பும் அவருக்குக் கீழ்ப்படியவும் வேண்டுமென்று கற்றுக்கொடுக்கிறார்களோ, அவர்கள் மகிழ்ச்சியுடையவர்கள். இத்தகைய அன்பளிப்பை ஒரு குழந்தைக்கு வழங்குகின்ற பெற்றோர்கள் எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற செல்வத்தைவிட, மிகவும் அருமையான ஒரு பொக்கிஷத்தை அவனுக்குக்கொடுக்கிறார்கள்; அதாவது, நித்தியத்தைப்போல, அது என்றும் நிலைத்திருக்கும் ஒரு பொக்கிஷமாகும்.Mar 187.2

    ஒவ்வொரு சிறிய குழந்தையும் அவருடைய பிள்ளையாக அவரது குடும்பத்திற்குள் சுவீகாரம்பெற்ற பிள்ளையாக இருக்க வேண்டுமென்று தேவன் விருப்புகிறார். அவர்கள் இளைஞர்களாக இருந்தாலும், அத்தகைய வாலிபர்கள் விசுவாச வீட்டாரின் அங்கத்தினராக இருந்து, மிக அருமையான அனுபவத்தை அடையலாம். இயேசுவிற்காக அன்பிலும், நம்பிக்கையிலும் நிறைந்த இருதயங்களால் அவர்கள் ஈர்க்கப்பட்டு, நிலைத்திருக்கும் எண்ணப்பதிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். நம்பிக்கையோடு அவர்களது இதயங்கள் ஈர்க்கப்பட்டு, இயேசுவின்மீது கொண்ட அன்பினால் அத்தகைய மீட்பருக்காக வாழலாம். கிறிஸ்து அவர்களை சிறிய இறைப்பணியாளர்களாக உருவாக்குவார். பாவமானது துய்த்து மகிழத்தக்கதான ஒரு காரியத்தைத் தோன்றாமல், வெறுத்து விட்டொழிக்கத்தக்கதான ஒரு காரியமாக மாறும்படியாக, அவர்களது சிந்தனையோட்டம் முழுவதுமே மாற்றமடையலாம்.Mar 187.3

    பெற்றோர்கள் தங்களது முன்மாதிரியின்மூலமாகவும் நல்லொழுக்கப் போதனைகளின்மூலமாகவும் மனந்திரும்பாதவர்களுக்காக, ஊழியஞ் செய்யவேண்டுமென்று தங்களது பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டும். பிள்ளைகளும் முதியோர்களிடமும் துன்பத்தில் இருப்பவரிடமும் பரிவு காட்டத்தக்கதாகவும், மேலும் ஏழைகள் மற்றும் கடும் வேதனையிலிருப்போர்களுடைய பாடு, துன்பங்களை இலகுவாக்க அவர்கள் நாடி உழைக்கும் அளவிற்கு, அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்… பிள்ளைகள் தேவனோடு உடன் வேலையாட்களாக இருக்கத்தக்கதாக, அவர்களது சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவின் ஊழியம் முன்னேறுவதற்காகவும், மற்றவர்களுடைய நன்மைக்காகவும், சுயமறுப்பும் தியாகமும் அவர்களது மனதிலே ஆழமாகப் பதியவைக்கப்பட வேண்டும்….Mar 188.1

    பூமியிலுள்ள குடும்பங்களனைத்தும், பரலோகக் குடும்பத்திற்கான ஒரு அடையாளமாக இருக்கவேண்டுமென்று தேவன் திட்டமிடுகிறார். தேவனுடைய திட்டத்திற்கு இசைந்தாற்போல் கிறிஸ்தவக் குடும்பங்கள் நிலைநாட்டப்பட்டு நடத்தப்படுமானால் கிறிஸ்தவக் குணம் அமைவதற்கும், தேவனுடைய ஊழியத்தின் முன்னேற்றத்திற்காகவும், மிகவும் ஆற்றல்வாய்ந்த முகவர்களைப்போல இருக்கமுடியும்.⋆Mar 188.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 188.3

    “…உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவ மரக்கன்றுகளைப்போல் இருப்பார்கள்.” - சங்கீதம் 128:3.Mar 188.4