Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உலகத்திற்கு தேவைப்படுகின்ற சாட்சி! , ஏப்ரல் 16

    “எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே.” - 2 கொரிந்தியர் 3:2Mar 211.1

    குணத்தில் முற்றிலும் ஏற்படும் மாற்றமே, கிறிஸ்துவின் அன்பு உள்ளே நிலைபெற்றிருக்கிறது என்பதை உலகத்திற்கு ஒரு சாட்சியாக இருக்கிறது. குறைவுள்ள குணமுடையோர்மீது கிருபையின் மீட்பின் வல்லமையானது செயல் புரிந்து, ஒரே சீரான நிலையில் ஏராளமான கனிகளைக் கொடுத்து விருத்திசெய்யும் நிலையை, அவரது மக்கள் ஏற்படுத்திக்காட்ட வேண்டுமென்று ஆண்டவர் எதிர்பார்க்கிறார்.Mar 211.2

    தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றத்தக்கதாக, செய்யப்பட வேண்டிய ஆயத்த வேலை ஒன்று உண்டு. விலகிச்செல்வதற்கு வேராக அமைந்துள்ள தன்னநலத்தை, நமது இதயங்களைவிட்டு வெளியேற்றி, வெறுமையாக்கவேண்டுமென்று ஆண்டவர் நம்மை வேண்டுகிறார். மிக அதிகமான அளவில் அவரது பரிசுத்த ஆவியை நம்மீது பொழியவேண்டுமென்று அவர் ஏங்குகின்றார். சுயத்தைத் துறப்பதின்மூலம், பாதையைத் தெளிவாக்கவேண்டுமென்று அவர் நம்மிடம் கேட்கிறார். சுயத்தை தேவனிடத்தில் சரணடையச்செய்யும் பொழுது,நம்முடைய கிறிஸ்தவத்தன்மையற்ற குணமானது, மற்றவர்களது வழியிலே, நாம் போட்டிருக்கின்ற இடறுதலிற்கான கற்களைக் காணும்படியாக,நமது கண்களைத் திறக்கும். இவைகளையெல்லாம் அகற்றவேண்டுமென்று தேவன் நம்மிடம் வேண்டுகின்றார். “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஜெபம்பண்ணுங்கள்” என்று அவர் கூறுகிறார் — யாக்கோபு 5:16Mar 211.3

    தாவீது தனது பாவத்தை அறிக்கைசெய்தபின், அவனுக்குக் கிடைத்த மன்னிப்பின் நிச்சயத்தை, நாமும் பெற்றுக்கொள்ளலாம். பின்வரும் வசனங்களில் தாவீது இவ்வாறு ஜெபிக்கிறான்: “உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்” -சங்கீதம் 51:12, 13.Mar 211.4

    உள்ளத்திலே தேவ கிருபையானது ஆளுகைசெய்யும்பொழுது, விசுவாசம், தைரியம், கிறிஸ்து காட்டுவதுபோன்ற அன்பு ஆகியவை நிறைந்த சூழ்நிலை ஆத்துமாவைச் சுற்றிலும் காணப்படும். ஆவிக்குரிய எழுச்சியூட்டும் ஒரு சூழ்நிலை இருக்கும். அதை சுவாசிக்கும் அனைவருக்கும் அதை உணர்வார்கள்… கிறிஸ்துவின் மன்னிக்கும் அன்பிலே பங்காளியாயிருக்கும் ஒவ்வொருவரும் ஆவியானவரால் மேம்படுத்தப்பட்டு, சத்தியத்திற்கு மனந்திரும்பி, இத்தகைய அருமையான ஆசிர்வாதங்களுக்காக, தாங்கள் தொடர்புகொள்ளத்தக்கதாக வாய்ப்பைப்பெற்ற ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் கடன்பட்டிருக்கிறார்கள். அபிஷேகம்பெற்ற போதகர்களால் சந்திக்கக்கூடாமலிருக்கும் ஆத்துமாக்களைச் சென்றடைய, ஆண்டவர் இருதயத்தில் தாழ்மையுள்ளவர்களைப் பயன்படுத்துகிறார். கிறிஸ்துவின் மீட்பின் கிருபையை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகளைப் பேசத்தக்கதாக, அவர்கள் தூண்டப்படுவார்கள்.Mar 212.1

    அவர்கள மற்றவர்களை ஆசீர்வதிக்கும்போது, தாங்களும் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். அதிகப்படியான கிருபையை அளிக்கும் சந்தர்ப்பத்தை அவர் நம்க்குத் தருகிறார். தேவனுடைய செயல்துணையானது, அவர் வழங்கியிருக்கும் தாலந்துகள் மற்றும் வாய்ப்புநலனகளோடு செயல்புரியும்போது, நம்பிக்கையும் விசுவாசமும் உறுதியடையும். ஊழியஞ்செய்யத்தக்கதாக அந்த நபர் தெய்வீக செயல்துணையைப் பெற்றுக்கொள்வார்.⋆Mar 212.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 212.3

    “உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கு.” - சங்கீதம் 119:130.Mar 212.4