Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இரட்டிப்பான ஓர் வாழ்க்கை! , ஏப்ரல் 27

    “…எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது.” - 1 யோவான் 1:3.Mar 233.1

    தேவனோடு நாம் கொள்ளும் ஆன்மிக உறவின்மூலமாக செயல்முறைசார்ந்த பயன்களைவிட, நம்முடைய ஊழியத்திற்கு அதிகம் தேவையானது எதுவுமில்லை. நமது அன்றாட வாழ்க்கையிலே நாம் மீட்பரிலே இளைப்பாறுதலையும் சமாதானத்தையும் பெற்றிருக்கின்றோம் என்பதை நாம் காட்டவேண்டும். அவரது சமாதானம் நமது இதயத்தில் இருக்குமானால், அது நமது முகத்தோற்றத்திலே வெளிப்படையாகப் பிரகாசிக்கும். தேவனோடு கொள்ளும் உறவானது, நமது குணத்தையும் வாழ்க்கையையும் உயர்ந்த தகுதியுடையதாக மாற்றும். இயேசுவின் முதல் குழுவிலிருந்த சீடர்கள், இயேசுவோடு இருந்தவர்கள் என்று அறியப்பட்டிருந்ததுபோல, நம்மைப்பற்றியும் மக்கள் அறிந்துகொள்வார்கள். இக்காரியமானது ஊழியர்களுக்கு வேறு எதுவும் கொடுக்கக்கூடாத வல்லமையைல் கொடுக்கும். இந்த வல்லமையை இழந்துவிடத்தக்கதான நிலைக்குத் தன்னை அனுமதித்துவிடக்கூடாது. நாம் ஒரு இரட்டிப்பான வாழ்க்கை வாழவேண்டும். அதாவது சிந்தனையும் செயலுமுள்ள வாழ்வு, மற்றும் மெளனமாக ஜெபித்தல், ஊக்கமாக உழைத்தல் என்பவைகள் நிறைந்த ஒரு வாழ்வே அதுவாகும்.Mar 233.2

    தேவன் கொடுக்கும் பயிற்சிக்கடியிலிருக்கும் அனைவரும் தங்களது சொந்த இதயஙகளோடும், இயற்கியோடும், தேவனோடும் அமைதியான மணிவேளையைச் செலவிடவேண்டியது அவசியமாகும்…நமது இதயத்தோடு அவர் பேசுவதை தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொருவரும் கேட்கவேண்டும். அனைத்து குரல்களின் ஓசையும் அடங்கிய பின்னர், அமைதியான நிலையில், அவருக்கு முன்பாக நாம் காத்திருக்கவேண்டும். ஆத்துமாவில் நிலவுகின்ற அமைதியானது, தேவனுடைய குரலை மிகத்தெளிவாகக் கேட்கும் படிச்செய்கிறது. நீங்கள் அமர்ந்திருந்து, “நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” என்று அவர் நம்மிடம் வேண்டுகிறார் - சங்கீதம் 46:10. தேவனுக்காகச் செய்யப்படும் அனைத்து ஊழியங்களுக்கும் இதுவே பயன் தரும் ஒரு ஆயத்தமாகும் துரிதகதியில் இயங்கிக்கொண்டிருக்கும் கூட்டத்திற்கு மத்தியிலே, வாழ்க்கையில் மும்முரமான செயல்பாடுகளின் சிரமங்களுக்கு மத்தியிலே, இவ்வாறு மறுமலர்ச்சியைப் பெறுகின்றவரைச் சுற்றிலும் வெளிச்சம், சமாதானம் ஆகிய சூழ்நிலைகள் காணப்படுகிறது. உடலிற்கும், மனதிற்கும் ஒரு புதிய சக்தியை நன்கொடையாக அந்த நபர் பெற்றுக்கொள்கிறார். அவரது வாழ்ககை ஒரு நறுமணத்தைப் பரப்பும். மனிதரின் இதயங்களை சென்றைடையத்தக்கதாக, ஒரு தெய்வீக வல்லமையை வெளிப்படுத்தும்.Mar 233.3

    தேவனோடு பக்தியுடன் தொழுகை நடத்தும் வேளைகளில்கூட, அவரோடு உண்மையாக ஆன்மீகத் தொடர்புகொள்வதின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள, அநேகர் தவறிவிடுகிறார்கள். அவர்கள் மிகவும் அவசரமாக காரியங்களைச் செய்கிறார்கள். துரிதமாக அடியெடுத்துவைத்து, கிறிஸ்துவின் அன்பின் பிரசன்னத்தின் சூழலிலே அந்தப் பரிசுத்த சூழ்நிலையிலே ஒருவேளை, ஒருகணம் நின்றுவிட்டு, கடந்துசெல்கிறார்கள். ஆலோசனைக்காக அங்கு காத்திருப்பதில்லை. தெய்வீகப் போதகரிடத்தில் தங்கிக் காத்திருக்க நேரமில்லை. தங்களது பாரங்களோடு தங்களது வேலைக்கு திரும்பிச்செல்கிறார்கள்.Mar 234.1

    இத்தகைய ஊழியர்கள், வல்லமையின் இரகசியத்தைக் கற்றுக் கொள்ளும்வரை, ஒருபொழுதும் உயர்ந்த வெற்றியைப் பெற்றுக் கொள்ளமுடியாது. தங்களின் உடலின், உள்ளத்தின் ஆவிக்குரிய சக்திகளைப் புதுப்பித்துக்கொள்ளத்தக்கதாக சிந்திப்பதற்கும், ஜெபிப்பதற்கும், தேவனிடத்தில் காத்திருப்பதற்கும் கண்டிப்பாக தங்களுக்காக நேரத்தை ஒதுக்கிவைக்க வேண்டும். ஆவியானவர் வழங்குகின்ற. இந்த உயர்த்துகின்ற செல்வாக்கானது அவர்களுக்குத் தேவை. அதைப் பெற்றுக்கொள்ளுப்பொழுது, அவர்கள் புதிய ஜீவனால் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள்.⋆Mar 234.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 234.3

    “கர்த்தருகுத் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து; கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.” - ஏசாயா 40:31Mar 234.4