Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரீட்சைக்கு நிற்கத்தக்கதாக பரிசுத்தவான்கள் கொண்டுவரப்படுதல்!, ஜூலை 20

    அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: ” கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?” என்பார்கள். அப்பொழுது, நான்: ” ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.— மத்தேயு 7:22,23.Mar 401.1

    நாம் ஏமாற்றப்பட அவசியமில்லை. சாத்தான் மிக நெருக்கமாகத் தொடர்புகொண்டுள்ள அற்புதமான காட்சிகள் வெகு சீக்கிரத்தில் நமக்கு முன்பாக நடைபெறும். சாத்தான் அற்புதங்களைச் செய்வான் என்று தேவனுடைய வார்த்தை உறுதியாகக் கூறுகின்றது. மக்களை வியாதிப்படச் செய்வான்: பின்னர், சாத்தானிய வல்லமையின்மூலம் திடீரென அந்த வியாதியை அகற்றிப்போடுவான். அதற்குப்பிறகு, அவர்கள் குணமாக்கப்பட்டவர்களாகக் கருதப்படுவார்கள். இத்தகைய பகிரங்கமாகத் தெரிகின்ற குனமாகுதலானது, ஏழாம்நாள் வருகை சபையினரை சோதனைக்குள் கொண்டுவரும். அதிகமான வெளிச்சத்தைப் பெற்றிருந்தவர்கள், அந்த வெளிச்சத்திலே நடக்கத் தவறிவிட்டார்கள்; ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவோடு ஒன்றாக ஐக்கியப்படவில்லை.Mar 401.2

    மிகுந்த துன்பத்திலும், தேவனுடைய உறுதியான வாக்குத் தத்தங்களுக்காக, நமது மக்கள் அழுதுமன்றாடி ஜெபித்துக்கொண்டிருப்பதை நான் கண்டேன். நம்மைச் சுற்றிலுமிருந்த துன்மார்க்கர் நம்மைக் கேலிசெய்து, நம்மை அழித்துப்போட்டுவிடுவதாக பயமுறுத்திக்கொண்டிருந்தார்கள். நமது நலிந்த நிலைபற்றியும், நமது குறைவான எண்ணிக்கைபற்றியும், பரிகாசஞ்செய்து கொண்டிருந்தார்கள். நம்மை அதிக வேதனைப்படுத்தத்தக்கதான வார்த்தைகளால் அலைக்கழித்துக்கொண்டிருந்தார்கள். உலகத்தார் அனைவரினின்று பிரிந்து, ஒரு தனித்த, சுயாதீன நிலையில் நாங்கள் இருப்பதாக, நம்மைக் குற்றஞ்சாட்டினார்கள். நாங்கள் வாங்கவும் விற்கும் கூடாதபடி எங்களது வாய்ப்புவளங்களையெல்லாம் துண்டித்துப்போட்டார்கள். எங்களது இழிந்த தரித்திர நிலையையும் நோயுற்ற பாதிக்கப்பட்ட நிலையையும் சுட்டிக்காட்டினார்கள். இந்த உலகின் உதவியின்றி எப்படி நாம் வாழமுடியும் என்பதை அவர்களால் காணமுடியவில்லை, நாங்கள் உலகின் மீது சர்ர்ந்திருந்தோம்: உலகின் பழக்கவழக்கங்கள், நடைமுறைகள், சட்டங்கள் ஆகியவற்றிற்கு நாங்கள் கண்டிப்பாக ஒத்துப்போகவேண்டும்; அல்லது அதைவிட்டு வெளியே போய்விட வேண்டும். ஆண்டவரால் ஆதரிக்கப்பட்டவர்களாக இந்த உலகத்தில் நாங்கள் மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்போமானால், தோற்றங்கள் எல்லாம் எப்படி பயங்கரமான விதத்தில் எதிராக இருந்தன; அவர்களிடம் சத்தியம் இருப்பதாக உறுதிபடக் கூறினார்கள். அவர்கள் மத்தியிலே அற்புதங்களும் காணப்பட்டன, பரலோகத்தின் தூதர்கள் அவர்களோடு பேசினார்கள்; அவர்களோடு நடந்தார்கள்; அந்த மாபெரும் வல்லமை, அற்புதங்கள், அடையாளங்கள் அவர்கள் மத்தியிலே செய்யப்பட்டன. அவர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த இம்மைக்குரிய ஆயிரமாண்டு அரசாட்சி அதுவாகும். முழு உலகமும் மனந்திருப்பப்பட்டு, ஞாயிறு சட்டத்தோடு இணைந்து சென்றது; ஆனால், இந்தச் சிறிய-நலிந்த கூட்டம் நாட்டின் சட்டங்களை எதிர்த்து நிற்கின்றது. தேவனுடைய கட்டளைகளுக்குக் கிழ்ப்படிந்து, இந்த பூமி முழுவதிலும் தாங்கள் மாத்திரமே சரியானவர்கள் என்று உரிமை கோரியது.Mar 401.3

    அற்புதங்களைச் செய்வதினால், தேவனுடைய மக்கள் தங்கள் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள், அந்த நபர் செய்கின்ற எந்த அற்புதமானாலும், அதை சாத்தானுங் கூட போலியாகச் செய்து காட்டிவிடுவான்..”எழுதப்படிருக்கிறதே” என்ற ஜீவனுள்ள வார்த்தையின்படி நிற்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.⋆Mar 402.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 402.2

    “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இறங்குகிறார்.” — சங்கீதம் 103:13.Mar 402.3