Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உடல் ஆரோக்கியமும் மேன்மையான சிந்தனையும்! , மார்ச் 14

    “பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி..” — 1 பேதுரு 2:11 Mar 145.1

    மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனத்தை அநேகர் ஒரு இழிவான சிற்றின்பப் பழக்கத்திற்கு எதிரான எச்சரிப்பு என்றே கருதுகின்றனர்; ஆனால் இந்த வசனத்திற்கு ஒரு விரிவான பொருளுண்டு. ஒவ்வொரு கேடுபயக்கும் பசிநாட்டத்தையும் அல்லது இச்சையையும் தடைசெய்கிறது. ஒவ்வொரு முரண்பாடான கோணலான நாட்டமும், போராடுகிற ஒரு இச்சையாக மாறுகிறது. பசியின்மேலுள்ள ஒரு நாட்டமானது, ஒரு நல்ல நோக்கத்திற்காக நமக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. கோணலாக்கப்பட்டு சாவைக் கொடுக்கக்கூடியதாக இவ்வாறு, ” ஆத்துமாவிற்கு எதிராகப் போரிடுகின்ற இச்சைகளாக” இழிநிலை அடையாதபடி நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பேதுருவின் எச்சரிப்புரையானது வெறியை ஊட்டுகின்ற ஊக்கிகள் மற்றும் மயக்க மருந்துகள் அனைத்திற்கும் எதிரான கடிந்துரையாகவும், நேரடியாக மனதில் பதியும்படியாகக் கேடுபயக்கின்ற, ஒரு செல்வாக்கை ஏற்படுத்துகின்ற இச்சைகளாக வகுக்கப்பட்டிருக்கிறது.Mar 145.2

    தேவபக்தியோடு இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளுகிற எவரும் தங்களது உடலின் ஆரோக்கியத்தைப்பற்றி அக்கறையற்றவர்களாக, தன்னடக்கமின்மை என்பது ஒரு பாவமில்ல என்றும், அது தங்களது ஆவிக்குரிய வாழ்க்கையைப் பாதிக்காது என்றும் தங்களைப் பாராட்டிக்கொள்ள வேண்டும். உடலின் தன்மைக்கும், ஒழுக்கநிலைக்குமிடையே நெருக்கமான ஒரு உணர்ச்சி ஒருமைப்பாடு உண்டு. ஒழுக்கத்தின் படித்தரமானது, உடல்சார்ந்த பழக்க வழக்கங்களால் உயர்வடையலாம் அல்லது இழிநிலை அடையலாம். மிகச் சிறந்த உணவானாலும் அதை மிதமிஞ்சி உண்ணும்பொழுது, ஒழுக்க உணர்வுகளிலே நோய்சார்ந்த ஒரு நிலையை உருவாக்கும். உண்ணப்படும் ஆகாரமானது மிகச்சிறந்த, உடல்நலத்திற்கு ஏற்ற ஆகாரமாக இல்லாவிடில், அதின் விளைவு மேலும் அதிகக் கேடுபயக்கக்கூடியதாகவே இருக்கும். உடல்நலத்திற்கு ஏற்ற செயலை மனித உடலில் மேம்படுத்தாத எந்தப் பழக்கமும், மிக உயர்வான-மேன்மையான சக்திகளை இழிநிலையடையச்செய்துவிடுகிறது.. இன்சுவைக் கவர்ச்சியில் திளைப்பதானது, மிருக வெறியைப் பலப்படுத்தி, உள்ளத்தின் மற்றும் ஆவிக்குரிய சக்திகளுக்குமேலாக உயர்ந்த, அவைகளை அடக்கியாள்கிறது.Mar 145.3

    பசி ஆர்வத்தில் திளைப்பவர்களுக்கான சோதனையின் வலிமையானது, வனாந்தரத்தில் நமது மீட்பர் மேற்கொண்ட நீண்ட உபவாசத்தின்போது, அவர் அடைந்த, விவரிக்கமுடியாத கடுந்துயரை வைத்துத்தான் அளவிடப்பட வேண்டும். முரண்பாடான பசி ஆர்வத்தில் திளைப்பதானது, பரிசுத்த காரியங்களை தெளிவாக விளங்கிக்கொள்ளாதபடி மனிதனின் புலனுணர்வுகளை மரத்துப் போகச்செய்துவிடுகிறது. மனித இனத்தின்மீது இன்சுவை ஆர்வத்தில் திளைக்கும் வல்லமையானது, அதிக பலத்தோடுபற்றிக்கொண்டிருக்குமாயின், அதன் பிடியை உடைத்தெறிவதற்காக மனிதன் சார்பாக, தேவகுமாரன் ஏறக்குறைய ஆறு வாரங்கள் உபவாசம் மேற்கொள்ளவேண்டியதாயிற்று. கிறிஸ்தவனுக்கு முன்பாக எத்தகைய ஒரு பணி வைக்கப்பட்டுள்ளது! எனினும், போராட்டம் எவ்வளவு பெரிதாக இருப்பினும், அவன் அதை மேற்கொள்ள முடியும். சாத்தானால் கண்டுபிடிக்கக்கூடிய எவ்வளவு கொடிய சோதனையாக இருப்பினும், அந்த தெய்வீக வல்லமையின் உதவியினால், ஈடு கொடுத்து நின்றதுபோல், தேவனுடைய இராஜ்யத்திலே வெற்றி பெறுவோர் அணியும் கிரீடத்தை இறுதியிலே அணிந்துகொள்ளத்தக்கதாக, அந்தக் தீமைக்கு எதிராகப் போராடி, முற்றிலுமாக வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும்.⋆Mar 146.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 146.2

    “கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்: துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்”. — சங்கீதம் 147:6. Mar 146.3