Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நள்ளிரவு நேரத்தில் விடுதலை! விடுதலை!! விடுதலை!!!, செப்டம்பர் 28

    “இப்படிப்பட்டவர்கள் சடிதியில் சாவார்கள்; ஜனங்கள் பாதிஜாமத்தில் கலங்கி ஒழிந்துபோவார்கள்; காணாத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்.” - யோபு 34:20.Mar 541.1

    சாத்தானுடைய பிடியிலிருந்து விடுவிக்கப்பட சந்தர்ப்பமே இல்லையென்று தோன்றுகிற சமயங்களில், தமது வல்லமையைக் வெளிப்படுத்த, ஆண்டவர் எப்பொழுதுமே உச்சக்கட்ட சூழ்நிலைகளையே தெரிந்துகொள்ளுகிறார்.Mar 541.2

    தம்முடைய மக்களை விடுவிக்க ஆண்டவர் நள்ளிரவில் தமது வல்லமையை வெளிப்படுத்துகிறார். சூரியன் தன் முழு வல்லமையில் பிரகாசிக்கிறது. அடுத்தடுத்து வேகமாக அடையாளங்களும் அற்புதங்களும் நடைபெற்றன. துன்மார்க்கர் பயத்தோடும் ஆச்சரியத்தோடும் இக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்க, நீதிமான்கள் பக்திவிநயமான மகிழ்ச்சியோடு நோக்கிப்பார்க்கிறார்கள். இயற்கை முழுவதும் அதின் ஒழுங்கினின்று மாறுபட்டதுபோலத் தோன்றுகிறது. நீரோடைகள் ஓடுவதை நிறுத்திவிடுகின்றன. இருண்ட கனத்த மேகங்கள் மேலேவந்து ஒன்றோடொன்று மோதிக்கொள்கின்றன. கோபமுகமான வானத்தின் நடுவிலே, தெளிவான-விவரிக்கமுடியாத-மகிமையோடு ஒர் இடம் தெரிகிறது. அங்கேயிருந்து திரளான தண்ணீர்களின் ஓசையைப்போல, “ஆயிற்று” என்கிற ஆண்டவருடைய சத்தம் தொனிக்கிறது —வெளிப்படுத்தல் 16:17.Mar 541.3

    ஆண்டவருடைய சத்தத்தினாலே, வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படுகின்றன; பின்பு சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் தங்கள் இடங்களைவிட்டு அசைக்கப்பட்டன. அவைகள் முற்றிலும் அகன்றுபோய்விடாது; ஏனெனில், தேவனுடைய சத்தத்தினாலே அசைக்கப்படுகின்றன. இருண்ட-கனத்த-மேகங்கள் மேலே வந்து ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. வளிமண்டலமானது பிரிந்து சுருண்டுபோயிற்று; பின்னர் மிருகசீரிஷ நட்சத்திரக் குழுவிலுள்ள அந்தத் திறப்பான இடத்தை மேல்நோக்கி எங்களால் பார்க்க முடிந்தது. அங்கிருந்து தேவனின் குரல் கேட்கப்பட்டது.Mar 541.4

    தேவமக்கள் தேவனுடைய குரலைக் கேட்ட பிறகு, உலகம் உண்டானதுமுதல் ஒருபோதும் உண்டாயிராத வேதனையிலும் துன்பத்திலும் இருக்கிறார்கள். இந்தக் காரியத்திலே தேவனுடைய மக்கள் துன்பத்தை அனுபவிப்பார்கள். வானத்தின் மேகங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும். அங்கே இருள் உண்டாகும்; பின்பு அந்த சத்தம் வானத்திலிருந்து வருகின்றது. மேகங்கள் சுருட்டப்பட்ட புத்தகத்தைப் போல விலகிப்போயின; அங்கே மனுஷ குமாரனுடைய-தெளிவான-பிரகாசமான-அடையாளம் காணப்பட்டது. இந்த மேகத்தின் அர்த்தம் என்ன என்பது தேவனுடைய பிள்ளைகளுக்குமட்டுமே தெரியும்.Mar 542.1

    1,44,000 பேர்களும் வெற்றி முழக்கமிட்டார்கள். அவர்கள் முகங்கள் தேவ மகிமையினாலே பிரகாசமடைந்தன.Mar 542.2

    தேவனுடைய சத்தம் அவருடைய மக்களின் சிறையிருப்பை திருப்பும்பொழுது, வாழ்க்கையின் மாபெரும் போராட்டத்திலே அனைத்தையும் இழந்துவிட்டவர்களிடையே, பயங்கரமான விழிப்புணர்வு உண்டாகும்.Mar 542.3

    ஆண்டவருடைய சத்துருக்களுக்கு கோபாக்கினையின் நாளாகிய-அந்த நாள், அவருடைய சபைக்கு விடுதலையின் நாளாக இருக்கும்.⋆Mar 542.4

    வாக்குத்தத்த வசனம்: Mar 542.5

    “வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது” என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். - மத்தேயு 5:18.Mar 542.6