Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மனிதன் முற்றுலும் பரிசுத்தமாகும் நிலை!, ஆகஸ்டு 10

    “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி…, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.” - எபேசியர் 4:23,24.Mar 443.1

    சத்தியமானது முழு மனிதனையும் பரிசுத்தமாக்கவேண்டும்; அதாவது, அவனது மனம், அவனது சிந்தனைகள், அவனது இதயம், அவனது சக்தி அனைத்தையும் பரிசுத்தமாக்க வேண்டும். அவனது சொந்த இச்சை மிகுந்த பழக்கவழக்கங்களின்மீது அவனது உயிராற்றல் சக்திகள் எரிக்கப்பட்டுவிடாது. இந்தப் பழக்கவழக்கங்கள் மேற் கொள்ளப்பட வேண்டும்; அல்லது அவைகள் அவனை மேற்கொண்டுவிடும்… நினைவுகள் தூய்மையாக்கப்பட வேண்டியது அவசியம். தங்களது உடலை எப்படிப் பேணிப்பராமரிக்கிறார்களோ அதேபோன்று, அவர்களது மனதின் —இதயத்தின் —ஆற்றல், சக்தி, தூய்மை ஆகியவைகளில், செயல்கள் அனைத்தும் சரியாக நடைபெறும். இதைமட்டும் சரியாகப்புரிந்துகொண்டிருப்பார்களானால், அவர்கள் எப்படிப்பட்ட சிறந்த ஆண்களும் பெண்களுமாக இருந்திருப்பார்கள்!Mar 443.2

    ஒரு உண்மையான கிறிஸ்தவன் பரிசுத்தத்தைக் கொண்டு வரும் ஒரு அனுபவத்தைப் பெற்றுக்கொள்கிறான். அவன் தனது மனசாட்சியில் குற்றத்தின் ஒரு கறையுமின்றி அல்லது ஆன்மாவில் உள்ளார்ந்த கேடுமின்றி இருக்கிறான். தேவனுடைய பிராமாணத்தின் ஆவிக்குரிய தன்மை, அதின் வரையரைசெய்யப்பட்ட கொள்கைகளோடு அவனது வாழ்விற்குள் கொண்டுவரப்படுகிறது. சத்தியத்தின் வெளிச்சம் அவனது புரிந்துகொள்ளும் தன்மையை ஒளியால் நிரப்புகிறது. மீட்பருக்காகக்கொண்ட பூரண அன்பின் ஆர்வப்பெருக்கான அவனது ஆன்மாவிற்கும் தேவனுக்குமிடையே குறுக்கிட்டிருக்கும் அந்த நச்சுநிறைந்த ஆவியை வெளியேற்றி தெளிவடையச்செய்கிறது. தேவனுடைய சித்தம் அவனுடைய சித்தமாக - தூய்மையாக - உயர்ந்தப்பட்டதாக - நயப்படுத்தப்பட்டதாக — பரிசுத்த மாக்கப்டுகிறது. பரலோக வெளிச்சத்தை அவனது முகம் வெளிப்படுத்துகிறது. அவனது உடல் பரிசுத்த ஆவியானவர் தங்குவதற்குத்தகுந்த ஆலயமாகிறது; அவனது குணத்தைப் பரிசுத்தம் அலங்கரிக்கிறது. தேவன் அவனோடு தொடர்புகொள்ள முடியும்; ஏனெனில், அவனது ஆன்மாவும் உடலும் தேவனோடு இசைந்திருக்கிறது.Mar 443.3

    நமக்கு உடைமையாக இருக்கிற அனைத்திற்கும், அதாவது நமது உள்ளம், ஆன்மா, உடல், ஆவி அனைத்தின்மீதும் அவருக்கு உரிமை இருக்கிறது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அவரால் நாம் படைக்கப்பட்டதாலும், மீட்கப்பட்டதாலும் நாம் அவருக்குச் சொந்தமானவர்கள்; நம்மைப் படைத்தவராக நமது முழு சேவையின்மீதும் அவர் உரிமை கோருகின்றார். நமது மீட்பராக, நமது அன்பிற்கு அவர் உரிமை கோருகின்றார்; மேலும், ஒரு ஈடு இணையற்ற அன்பிற்கு உரிமை கோருகின்றார். இந்த உலகில் வாழ்கின்ற நாம் ஒவ்வொரு கணநேரத்திலும், அவரது இந்த உரிமையை நன்றாகப் புரிந்தவர்களாக இருக்கவேண்டும்… நமது உடல்கள், நமது ஆத்துமாக்கள், நமது ஜீவியங்கள் அனைத்தும் அவருடையவைகள்; அவைகள் அவரால் நமக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்ட ஈவுகள் என்பதினால் மாத்திரமல்ல, அவர் தொடர்ந்து அவரது நன்மைகளைப் பொழிந்து கொண்டிருக்கிறார். நமது செயல்படும் திறனைப் பயன்படுத்த நமக்கு சக்தியளிக்கிறார்… (யோவன் 1:12).Mar 444.1

    தேவனுடைய பிள்ளைகளாக இருப்பவர்கள், கிறிஸ்துவை தங்களது குணங்களிலே காட்டுவார்கள். தேவகுமாரனின் எல்லையற்ற மென்மையான தன்மையிலும், பரிவோடும், அன்போடும், தூய்மையோடும் அவர்களது பணிகள் மணமூட்டப்பட்டதாக இருக்கும். எவ்வளவிற்கு அதிகமாக-முழுமையாக உள்ளமும் உடலும் பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்படைக்கப்படுகிறதோ, அவ்வளவிற்கு அதிகமாக, நாம் அவருக்கு அளிக்கும் அன்புக்கொடைகளின் இனிமை அதிகமாக இருக்கும்.⋆Mar 444.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 444.3

    “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.” - 1 யோவான் 5:4.Mar 444.4