Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய மக்களே அழிவுகளுக்குக் காரணமென்று குற்றஞ்சாட்டப்படல்!, ஜூன் 17

    “ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக் காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.” - வெளிப்படுத்தல் 12:12.Mar 335.1

    அனைத்து மனிதர்களும் தேவனைவிட்டு தூரந்தூரமாக விலகிச்செல்கின்றனர். கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மீது வல்லமை பெற்றுக்கொள்ளத்தக்கதாக, சாத்தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். சாத்தான் மனிதர் மத்தியிலே அழிவை சுழற்றி வீசுகிறான். சமுத்திரத்திலும் தரையிலும் பேரிடர்கள் சம்பவித்துக்கொண்டிருக்கின்றன. நெருப்பாலும், வெள்ளத்தாலும், சொத்துகளும் உயிர்களும் சேதம் அடைகின்றன. சாத்தான் தான் நிலைநிறுத்தியுள்ள விக்கிரகத்திற்கு தலைவணங்க மறுக்கிறவர்கள்மீது, இந்தக் குற்றச்சாட்டைக் கொண்டுவரத் தீர்மானிக்கிறான். இந்த இக்கட்டிற்குக் காரணம் ஏழாம் வருகை சபையினரே என்று அவனது பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். “இந்த மக்கள், சட்டத்தை மதிக்காமல் எதிர்த்து நிற்கின்றார்கள்; ஞாயிற்றுக்கிழமையின் (ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்படாத இந்த நாளை) தெய்வீகத் தன்மையை அவமதித்துப்போட்டார்கள்; இவர்கள் இந்த ஞாயிறு ஆசரிப்புச் சட்டத்திற்கு கீழ்ப்படியும்படி கட்டாயப்படுத்தப்படுவார்களேயானால், இத்தகைய பயங்கரமான தண்டனைகள் வருவது நின்றுபோகும்” என்று அவர்கள் கூறுவார்கள்.Mar 335.2

    பேரிடர்கள் ஏற்படும், மிகவும் பயங்கரமான-மிகவும் எதிர்பாராத அழிவுகள் ஏற்படும்; இந்த அழிவுகள் ஒன்றன்பின் ஒன்றாகவரும். தேவன் கொடுத்த எச்சரிப்புகளுக்குச் செவிசாய்ப்பார்களானால்-சபைகள் மனந்திரும்புமானால்-மீண்டும் தங்களது பற்றுறுதியான நிலைக்குத் திரும்புவார்களானால், மற்ற பட்டணங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு அழியாமல் காக்கப்படும்; ஆனால், வஞ்சிக்கப்பட்ட மனிதர் தொடர்ந்து தேவனுடைய பிரமாணத்தை அசட்டைபண்ணி, பொய்யான காரியங்களை மக்களுக்குமுன் வைப்பார்களானால், அவர்களது உணர்வுகள் விழிப்படையத்தக்கதாக, அவர்கள் பேரிடர்களை அனுபவிக்கத்தக்கதாக, ஆண்டவர் அவர்களை அனுமதிக்கிறார்.Mar 335.3

    தண்டனைகள் அந்த மக்களுடைய துன்மார்க்கத்திற்குத்தக்கபடியாகவும், அவர்களுக்கு இதுவரை சத்திய வெளிச்சமானது எவ்வளவு கிடைத்திருக்கிறது என்பதற்குத் தக்கதாகவும் கொடுக்கப்படும்.Mar 336.1

    சாத்தான் நடைபெறும் சம்பவங்களுக்கு தனது விவர விளக்கங்களைக் கொடுக்கிறான். நாட்டின் முக்கிய தலைமைப் பொறுப்பில் இருக்கும் மனிதர்கள் அவனுடன் இருப்பதால், அவர்கள் (சனிக்கிழமையை ஆசரிப்பவர்கள்) ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பை மீறியதால்தான் நாட்டில் இடுக்கண்கள் உண்டாகியிருக்கின்றன என்று நினைக்கிறார்கள். தேவனுடைய கோபத்தைத் தணித்து, சமாதானப்படுத்துவதற்காக, செல்வாக்குள்ள இந்த மனிதர்கள், ஞாயிறு ஆசரிப்பை நடைமுறைப்படுத்துவதற்காக, சட்டங்களை இயற்றுகிறார்கள். இந்தப் பொய்யான ஓய்வுநாளை உயர்த்தி, மேலும் உயர்த்தி, ஞாயிறு சட்டத்திற்கு, அதாவது இந்தப் போலியான ஓய்வுநாளிற்குக் கீழ்ப்படிதலைக் கட்டாயப்படுத்தி, இவ்வாறு செய்வதின்மூலமாக, தாங்கள் தேவனுக்குச் சேவைசெய்கிறதாக நினைக்கிறார்கள். உண்மையான ஓய்வுநாளை ஆசரித்து, தேவனைக் கனம்பண்ணுகிறவர்கள் தேவனுக்கு விசுவாசமானவர்களாக இருக்கவில்லை என்று எண்ணப்படுகிறார்கள். உண்மையில் அவர்களை இவ்வாறு மதிப்பீடுசெய்கிறவர்கள்தான், தேவனுக்கு விசுவாசமற்றவர்களாக இருக்கிறார்கள்; ஏனெனில், ஏதேனில் ஆரம்பமாகிய இந்த ஓய்வு நாளை, அவர்கள் தங்களது காலின்கீழ்போட்டு மிதித்துக்கொண்டிருக்கிறார்கள்.⋆Mar 336.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 336.3

    “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று” கர்த்தர் சொல்லுகிறார். - ஏசாயா 54:17. Mar 336.4