Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மார்ச்

    நெருக்கடியான ஓர் நேரம் வரவிருக்கின்றது!, மார்ச் 1

    “அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போலச் சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது.” - யோவேல் 1:15.Mar 119.1

    கடந்தகால — வருங்கால — நித்தியத்தை — இணைக்கும் சம்பவங்களின் சங்கிலியை ஒவ்வொரு கண்ணியாக இணைத்து, “இருக்கிறவராக இருக்கிறேன்” என்று சொல்லுகிற அந்த மாபெரும் தேவன், தமது வார்த்தயிலே அநேக தீர்க்கதரிசனங்களைக் கொடுத்திருக்கிறார். அத்தகைய காலங்களின் தொகுதியிலே இன்று நாம் எந்த இடத்திலே இருக்கிறோம் என்று கூறுகிறார்; மேலும், வரப்போகின்ற காலத்திலே, எதை எதிர்பார்க்கலாம் என்றும் கூறுகிறார். நிகழ்காலம்வரை நிறைவேறுதலை அடையும் என்று முன்னறிவிக்கப்பட்ட அத்தனை தீர்க்கதரிசன வரலாற்றின் பக்கங்களிலே தடம் கண்டறியப்பட்டாயிற்று. இனி நடைபெறப்போகும் காரியங்களும் அதனதின் ஒழுங்கின் போக்கிலே, நிறைவேறுதலை அடையும் என்பதுகுறித்து நாம் நிச்சயத்தோடிருக்கலாம்.Mar 119.2

    மாபெரும் பக்திவினயமான சம்பவங்களின் நுழைவாயிலிலே, நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பதை, “இன்று நான் காண்கிற காலங்களின் அடையாளங்கள்” உறுதியாகக் கூறுகின்றன. நம்முடைய இந்த உலகத்தில் அனைத்தும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. அவரது வருகைக்கு முன்பாக நடைபெறுகின்ற சம்பவங்களைப்பற்றிய மீட்ப்பரின் தீர்க்கதரிசனமானது, நமது கண்களுக்குமுன்பாக நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. “யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்... ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், இராஜ்யத்துக்கு விரோதமாய் இராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்” - மத்தேயு 24:6,7.Mar 119.3

    உலகில் உயிர்வாழும் அனைவருக்கும் நிகழ்காலமானது தீவிர உணர்ச்சி நிறைந்த — ஆர்வம்மிகுந்த காலமாக இருக்கிறது. ஆளுகைசெய்வோரும், அரசியல் வல்லுநர்களும், நம்பிக்கைக்குரிய அதிகாரம் நிறைந்த பணிகளில் அமர்ந்திருப்போரும், அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த சிந்திக்கும் திறனுடைய ஆண்களும், பெண்களும் தங்களைச் சுற்றிலும் நடைபெரும் சம்பவங்களிலே கவனத்தைப் பதித்தவர்களாக இருக்கின்றனர். நாடுகளுக்கு இடையே நிலவுகின்ற உறவுகளை விழிப்போடு விழிப் போடு கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். பூலோகத்தில் காணப்படும் ஒவ்வொரு மூலகமும் எவ்வளவு உச்ச வேகத்தை தன்னுள்ளே அடக்கிவைத்திருக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். மாபெரும் முடிவை எதிர்நோக்கும் எதோ ஒரு காரியம் நடைபெறப்போகிறது என்பதைக்கொண்டு மனதிலே உணருகிறார்கள்; மிகப் பெரிய நெருக்கடியின் விளிம்பிலே உலகம் இருக்கின்றது என்று மனதிலே எண்ணுகிறர்கள்.Mar 119.4

    ', வேதாகமம்- வேதாகமம் மாத்திரமே’ என்ற காரியம்மட்டுமே, இவை அனைத்திற்கும் ஒரு சரியான தகவலைக் கொடுக்கிறது. வேதாகமத்தில் உலக சரித்திரத்தின் மாபெரும் கடைசிக்காட்சிகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவைகள் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன எனக் காட்டும் ஓசையானது பூமியை நடுங்கச் செய்கிறது. பயத்தினால் மனிதரின் இதயம் சோர்ந்துபோகிறது.Mar 120.1

    தவறே செய்யாத அவர், தமது கையில் பிடித்திருக்கும் தூக்கு நூலால், இக்காலத்து மனிதர்களைமட்டுமின்றி, நாடுகளையும் சோதித்துக்கொண்டிருக்கிறார்; அனைவரும் தங்களது தெரிந்த் தெடுப்பின்மூலமாக, தங்களது முடிவைத் தீர்மானித்துக்கொண்டிருக்கிறார்கள். தேவன் தமது நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு, அனைத்தையும் அடக்கியாள்கிறார். அனைத்தையும் திணறக்கூடியதான அதிர்ச்சியைப்போல உலகத்தின்மீது சீறி வெடிக்கப்போகின்ற காரியத்திற்காக, கிரிஸ்தவர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்க வேண்டும். தேவனுடைய வசனத்தை ஆழ்ந்த ஆராய்ச்சியோடு படித்து, அதின் கொள்கைகளுக்கு ஏற்றபடி தங்களது ஜீவியங்களை அமைக்க ஒத்திசைவாக முயற்சிசெய்து, இவ்வாறு ஆயத்தஞ்செய்யவேண்டும்.⋆Mar 120.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 120.3

    “கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவைகளை விடுவிக்கிறார்.” - சங்கீதம் 34:7.Mar 120.4