Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இரண்டாம் தூதனின் தூது மறுபடியும் கூறப்படவேண்டும்!, ஜூன் 12

    வேறொரு தூதன் பின்சென்று: “பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே!” என்றான். - வெளிப்படுத்தல் 14:8.Mar 325.1

    வெளிப்படுத்தல் 14--ல் கூறப்பட்டுள்ள இரண்டாம் தூதனின் தூது 1844-ம் ஆண்டு கோடைகாலத்தில் முதன்முதலாக பிரசங்கிக்கப்பட்டது; அப்பொழுது, அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள (U.S.A) சபைகளுக்கு, மிகவும் நேரடியான ஒரு பொருத்தமான தூதாக அமைந்திருந்தது; ஏனெனில், அங்கு நியாயத்தீர்ப்பைக் குறித்த எச்சரிப்பானது மிகவும் பரவலாகக் கூறியறிவிக்கப்பட்டாயிற்று. அச்செய்தியானது பொதுவாகத் தள்ளப்பட்டுப்போயிற்று; மேலும், சபைகள் துரிதமாக வீழ்ச்சியடைந்துகொண்டிருந்தன; ஆனால் 1844--ல், இரண்டாம் தூதனின் தூதானது, அதின் முழுமையான நிறைவேறுதலை எட்டவில்லை. அச்சமயத்தில் சபைகள், ஒழுக்க நிலையில் ஒரு வீழ்ச்சியின் அனுபவத்தை அடைந்திருந்தன. அட்வெந்து தூதின் வெளிச்சத்தை மறுத்துப்போட்டதினிமித்தமே இவ்வாறு நேர்ந்தது; ஆனால், அந்த வீழ்ச்சியானது, அது தன் முழுமையை இன்னும் அடையவில்லை. அந்தக் காலத்திற்கான விசேஷ சத்தியங்களை அவர்கள் தொடர்ந்து தள்ளிப்போடடதினால், மிகவும் கீழாக, தாழ விழுந்துவிட்டார்கள்; எனினும், “பாபிலோன் விழுந்தது” என்று சொல்லிக்கொள்ளக்கூடாத நிலையில் இருந்தது; ஏனெனில், அவளது வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்துவிட்டாள்; எனினும், அனைத்து ஜாதிகளுக்கும் இன்னும் குடிக்கக்கொடுக்கப்படவில்லை.Mar 325.2

    இன்னுமும் பாபிலோனிலே ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. அவரது தண்டனைகள் அவர்களை சந்திக்குமுன், இந்த உத்தமமான மக்கள் அவளுடைய பாவங்களுக்கு உட்படாமலும், “அவளுடைய வாதையைப் பெற்றுக்கொள்ளாதபடியும் வெளியே அழைக்கப் படவேண்டும்.”Mar 325.3

    இதே தூதுதான் இரண்டாம் தூதனால் கொடுக்கப்பட்டது. பாபிலோன் விழுந்துவிட்டது; ஏனெனில், “அவளது வேசித்தனத்தின் உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்துவிட்டாள்” அந்த மது யாது? அவளது பொய்யான போதனைகளே! நான்காம் கற்பனையின் ஓய்வுநாளிற்குப் பதிலாக, ஒரு பொய்யான ஓய்வுநாளை இந்த உலகிற்குக் கொடுத்துவிட்டாள். ஏவாளிடம் சாத்தான் ஏதேனில் முதலில் கூறிய பொய்யை மீண்டும் கூறியிருக்கின்றான்; அதாவது, இயற்கை சார்ந்த ஆத்துமா அழியாதது என்பதே. அநேகர் மனிதருடைய கற்பனைகளை கொள்கைகளாகப் போதித்து, இதே மாதிரியான பிழைகளை எங்கணும் பரவலாகவும் தொலைவிடங்களிலும் பரப்பிவிட்டிருக்கிறார்கள்...Mar 326.1

    உலக எச்சரிப்பிற்காகச் செய்யப்படும் கடைசி வேளையிலே, இரண்டு தனிப்பட்ட தெளிவான அழைப்புகள் சபைகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. “வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மக நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே!” (வெளி. 14:8) என்றான். மூன்றாம் தூதனின் தூதில் உரத்த சத்தத்திலே பரலோகத்திலிருந்து, “பின்பு, வேறொரு சத்தமும் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதிகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியேவாருங்கள்” (வெளிப்படுத்தல் 18:4) என்ற குரல் கேட்கப்பட்டது.⋆Mar 326.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 326.3

    “...கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை” — ரோமர் 8:1.Mar 326.4