Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆயிரம் வருடங்களில் நடைபெறும் நியாயத்தீர்ப்பு!, நவம்பர் 23

    “தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி?” - 1 கொரிந்தியர் 6:3.Mar 653.1

    முதலாம் உயிர்த்தெழுதலிற்கும் இரண்டாம் உயிர்த்தெழுதலிற்கும் இடைப்பட்ட அந்த ஆயிரம் ஆண்டுகளில் துன்மார்க்கருடைய நியாயத்தீர்ப்பு நடைபெறுகிறது. இரண்டாம் வருகைக்கு அடுத்து நடக்கவிருக்கிற நிகழ்ச்சியாக அப்போஸ்தலனாகிய பவுல் இதைக் குறிப்பிடுகிறார். “ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச் சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்” - 1 கொரிந்தியர் 4:5.தானியேலும்; நீண்ட ஆயுகள்ளவர் வந்தபோது, “நியாயவிசாரிப்பு உன்னதமானருடைய பரிசுத்தவானகளுக்குக் கொடுக்கப்பட்டது” என்று கூறுகிறார் (தானியேல் 7:21). இந்த காலத்தில் நீதிமான்கள் தேவனுக்கு முன்பாக இராஜாக்களும், ஆசாரியர்களுமாயிருப்பார்கள். “அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின் மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது... இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்” (வெளி 20:4,6) என்று யோவான் எழுதுகிறார். இந்தச் சமயத்தில் தான் பவுலார் முன்னறிவித்தபடி, பரிசுத்தவான்கள் பூமியை நியாயந்தீர்ப்பார்கள் - கொரிந்தியர் 6:2. இந்த காலத்தில்தான் கிறிஸ்துவோடு சேர்ந்து, அவர்கள் துன்மார்க்கரை நியாயந்தீர்ப்பார்கள். அவர்களுடைய கிரியைகளை வேதாகமத்திலுள்ள சட்டங்களோடு ஒப்பிட்டுப்பார்த்து, அவர்கள் சரீரத்தில் செய்த செய்கைகளுக்குத்தக்கதாக தீர்ப்பளிப்பார்கள். துன்மார்க்கர் குடிக்கவேண்டிய உக்கிரத்தின் அளவு அவர்களது கிரியைகளுக்குத்தக்கதாக அளிக்கப்படும்; மரண புத்தகத்திலே அவர்களுடைய பெயர்களுக்கெதிராக அந்தத் தண்டனை எழுதப்படும்.Mar 653.2

    சாத்தானும் அவனுடைய தீய தூதர்களும் கிறிஸ்துவாலும், அவருடைய ஜனத்தினாலும் நியாயந்தீர்க்கப்படுவார்கள். “தேவ தூதர்களையும் நியாயந்தீர்போமென்று அறியீர்களா?” (வசனம் 3) என்று பவுலார் கூறுகிறார். யூதா தமது நிருபத்திலே; “தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளில் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்; (யூதா: 6) என்கிறார்.Mar 654.1

    ஆயிர வருடத்தின் முடிவிலே, இரண்டாம் உயிர்த்தெழுதல் நடைபெறும். மரித்திருந்த துன்மார்க்கர் எழுந்து, எழுதப்பட்ட தீர்ப்பைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, தேவனுக்கு முன்பாக நிற்பார்கள். நீதிமான்களுடைய உயிர்த்தெழுதலை விவரித்த பின்பு, “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்” (வெளிப்படுத்தல் 20:5) என்று யோவான் எழுதுகிறார். துன்மார்க்கரைக் குறித்து ஏசாயா எழுதும்பொழுது: “அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாக சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்” (ஏசாயா 24:22) என்கிறார்.⋆Mar 654.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 654.3

    “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.” - சங்கீதம் 91:14.Mar 654.4