Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சாத்தானும் அவனது முக்கூட்டு ஐக்கியமும்!, ஜூலை 2

    அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: “மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தன்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி,” மிருகத்தையும் வணங்கினார்கள்.- வெளிப்படுத்தல் 13:4.Mar 365.1

    “அந்த மிருகத்திற்கு ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகள் இருந்தன. ஒர் வலுசர்ப்பத்தைப் போலப் பேசியது.” தேவ ஆட்டுக்குட்டியின் பின்னடியார்கள் என்று தங்களைப்பற்றிக் கூறிக்கொண்டாலும், வலுசர்ப்பத்தின் ஆவியினாலே மனுஷர்கள் நிறைந்திருந்தார்கள். தாங்கள் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள்; ஆனால், சாத்தானின் ஆவியினால் பேசுகிறார்கள்; சட்டம் இயற்றுகிறார்கள்; தங்களைப்பற்றி அவர்கள் என்ன கூறிக்கொள்ளுகிறார்களோ, அதற்கு எதிராக அவர்கள் இருப்பதை, அவர்களது செயல்கள் காட்டுகின்றன. ஆட்டுக்கூட்டியைப் போன்ற இந்த வல்லமையானது, வலுசர்ப்பத்தோடு இணைந்து, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொண்டும் இயேசுவின்மீது சாட்சியை உடையவர்களுமாகிய பரிசுத்தவான்களோடு யுத்தம்பண்ணப்போயிற்று. சாத்தான் பாப்பு மார்க்கத்தோடும் புரொட்டஸ்டாண்டுகளோடும் இணைந்து, இந்த உலகத்தின் கடவுளாக ஆகவேண்டுமென்று ஆவதற்கு அவர்களோடு ஒப்பந்தஞ்செய்து, அவனது இராஜ்யத்தின் குடிமக்கள்போன்று மனிதருக்கு கட்டளைகளைப் பிறப்பிப்பான்; மேலும், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்களைக் கையாண்டு, அடக்கி ஆளுகைசெய்வான். தேவனுடைய கற்பனைகளைக் காலின்கிழ் போட்டு மிதிக்க மனிதர் சம்மதிக்காவிட்டால், அப்பொழுதுதான் வலுசர்ப்பத்தின் குணம் வெளிப்படும். அவர்கள் சிறைப்படுத்தப்படுவார்கள். நீதிமன்றங்களுக்குமுன்னர் அழைத்துச்செல்லப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். “அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலது கைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்…” (வெளிப்படுத்தல் 13:16) வற்புறுத்தும். “மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலை செய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது” — வெளி. 13:16,15. இவ்வாறு, சாத்தான் யேகோவாவின் தனிச்சிறப்புரிமையைப் பறித்துக் கொள்கிறான். பாவ மனிதன் தேவனுடைய சிங்காசனத்திலிருந்து தன்னையே தேவனென்று பிரகடனஞ்செய்து, தேவனுக்கும் மேலாகச் செயல்புரிகிறான்.Mar 365.2

    தேவனுடைய முத்திரையைத் தரித்துக்கொள்பவர்களுக்கும் மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வேறுபாடு காணப்படும். தேவனுடைய வார்த்தையைக் கேளாத, தேவனுடைய வார்த்தையைக் கேட்க விரும்புகிறவர்களது வழியில் முட்டுக்கட்டைகளைப்போட ஆயத்தஞ்செய்கின்ற அந்தப் பொய்யான போதர்களினால் ஆண்டவருடைய உத்தம்மான ஊழியக்காரர்கள், கசப்பான உபத்திரவங்களை அனுபவிக்க நேரிடும்; ஆனால், தேவனுடைய மக்கள் பயப்படத்தேவை இல்லை. சாத்தான் தனது எல்லைக்கு அப்பால் செல்லமுடியாது. ஆண்டவரே அவரது மக்களின் பாதுகாப்பாக இருப்பார். சத்தியத்தினிமித்தம் தனது ஊழியக்காரர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையைத் தமக்கே இழைக்கப்பட்டதாகக் கருதுகிறார். இறுதித் தீர்மானஞ்செய்துமுடிக்க அனைவரும் தாங்கள் எந்தப் பக்கம் நிற்கவேண்டும் என்பதைத் தீர்மானித்துக்கொள்கிறார்கள்; அதாவது, கிறிஸ்துவிற்காகவும் அவரது கட்டளைகளுக்காகவுமா அல்லது அந்த மாபெரும் சமயப் பகைவனுக்காகவா என்றும் தீர்மானிக்கிறார்கள். தேவன் தமது வல்லமையிலே எழுந்தருளுவார். அவருக்கு எதிராக தேவ தூஷணம் கூறியவர்களின் வாய்கள் அனைத்தும் என்றைக்குமாக அடைக்கப்படும். எதிர்பார்க்கின்ற ஒவ்வொரு வல்லமையும் அதற்குரிய தண்டனையைப் பெற்றுக் கொள்ளும்.⋆Mar 366.1

    வசனம்: Mar 366.2

    “உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்கு பாக்கியமும் நன்மையையும் உண்டாயிருக்கும்.” — சங்கீதம் 128:2.Mar 366.3