Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரலோகத்தின் மகிமைகள்!, நவம்பர் 20

    “தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நிரேயல்லாமல் உலகத்தோற்றம் முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை.” - ஏசாயா 64:4.Mar 647.1

    எதிர்கால உலகத்தின் மகிமைகளை ஊடுருவிப்பார்க்க வேண்டுமென்று அநேகர் ஏக்கங்கொண்டிருக்கிறார்கள். நித்திய இரகசியங்கள்பற்றிய காரியங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் வீணாக முயற்சிசெய்து கொண்டிருக்கிறார்கள். வெளிப்படுத்தப்பட்டவைகளோ, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியவைகள்... பரலோகத்தின் மேன்மைகளை நாம் புரிந்துகொள்ளவும், மீட்கப்பட்டோரின் வெகுமதியை மதிக்கவும், இரகசியங்களை வெளிப்படுத்துகிற மகாதேவன் நமக்குத் தேவையான அநேகக் காரியங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்...Mar 647.2

    இப்படி இயேசுவானவர் வெளிப்படுத்தியிருக்கிற பரலோகக் காரியங்களை ஆவிக்குரிய மனம் மாத்திரமே புரிந்து பாராட்ட முடியும். நம் கற்பனைத்திறன், அதன் ஞானத்தையெல்லாம் உபயோகித்து, பரலோக மகிமையை கற்பனைசெய்து பார்க்கலாம்; ஆனால், “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை” - 1 கொரிந்தியர் 2:9. பரலோகவாசிகள் நம்மைச் சுற்றிலுமிருந்துகொண்டிருக்கிறார்கள்; ஒளியின் தூதர்கள் நம்மைச் சுற்றிலும் பரலோகச் சூழ்நிலையைக் கொண்டுவந்து, பார்க்கக்கூடாத நித்தியமானவைகளுக்கு நேராக நம் கவனத்தைத் திருப்புகிறார்கள். நம்முடைய இயற்கையான பார்வையின்மூலம் அவர்களைப் பார்க்கமுடியாது. ஆவிக்குரிய பார்வையிருந்தால் மாத்திரமே, பரலோகக் காரியங்களை நன்றாக விளங்கிக்கொள்ளலாம். ஒளியின் தூதர்களுடைய, விவரிக்கமுடியாத மகிமையான ஒளியை நாம் பார்த்தால், நம்மால் உயிரோடிருக்க முடியாது. ஆவிக்குரிய காதுகளால் மாத்திரமே பரலோக ஓசைகளைப் புரிந்துகொள்ளமுடியும். இப்படிப்பட்ட சிறந்த விளக்கங்களையெல்லாம் சொல்லி, நம்முடைய உணர்வுகளைத் தூண்டிவிடுவது கிறிஸ்துவின் திட்டமல்ல... அவர்தாமே போதுமான அளவிற்கு தம்மை வழியாகவும் சத்தியமாகவும் ஜீவனாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் வழியாகவே நமக்கு இரட்சிப்பு உண்டு என்பதைக் காண்பித்திருக்கிறார். இதைத்தவிர, வேறு எதுவும் நமக்கு அவசியமில்லை.Mar 647.3

    மானிட ஆத்துமாவை பரலோகத்தின் வாசல்கள்வரை கொண்டு சென்று, அங்கே திறந்திருக்கிற கதவின் வழியாக, ஒளிருகின்ற பரலோக ஆசரிப்புக்கூடாரத்தின் மகிமையையும் அவர் நமக்குக் காண்பிக்கலாம்; ஆனால், நம் பாவக் கண்கலாளல்ல, நமது விசுவாசத்தினாலேதான் நாம் அதைப் பார்க்க வேண்டும். நாம் அவரது மானிட செயல்துணைகள் என்பதையும், பாவத்தின் சாபத்தினால் நிலைகுலைந்து கெட்டுப்போன உலகத்திலே, அவருக்கு ஊழியக்காரராயிருக்கிறோம் என்பதையும் அவர் மறக்கவில்லை. மரண இருள் கவ்வியிருக்கிற இவ்வுலகத்தில், இருள் பூமியையும் காரிருள் மக்களையும் மூடியிருக்கிற இவ்வுலகத்தில் தானே, பரலோகத்தின் ஒளியிலே நாம் நடக்கவேண்டும்.⋆Mar 648.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 648.2

    “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” - 1 பேதுரு 2:9.Mar 648.3