Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அவரைக் குத்தியவர்கள்!, அக்டோபர் 12

    “…மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்.” - மாற்கு 14:62.Mar 569.1

    யூத அதிகாரிகள் அவருடைய மகிமையை உற்றுநோக்கும் போது, மனுஷகுமாரன் மனுஷீகத்தைத் தரித்திருந்தது அவர்கள் நினைவிலே பளிச்சென்று தோன்றும். அவரை நடத்தினவிதம், மறுத்தவிதம், கொடிய குற்றவாளிக்குச் சாதகமாக நடந்துகொண்ட விதமெல்லாம் அவர்கள் நினைவிற்கு வருகிறது. கிறிஸ்துவின் வாழ்க்கையின் காட்சிகள் அனைத்தும் மிகத் தெளிவாக அவர்களுக்குமுன் தோன்றும். அவர் செய்த அனைத்தும், அவர் கூறிய அனைத்தும், அவர் எந்த அளவிற்கு தம்மைத் தாழ்த்தினார் என்பதும், அவர்களைக் கண்டனம் செய்யத்தக்க அளவிற்கு, அவர்களுக்கு முன்பாகக் காணப்படுகிறது.Mar 569.2

    அவர் எருசலேமிற்கு பவனிவருவதைக் காண்கிறார்கள். அவருடைய செய்தியை ஏற்றுக்கொள்ளாத-மனந்திரும்பாத-அந்த பட்டணத்தைப்பார்த்து மனம் உடைந்தவராக, கடுந்துயரோடு கண்ணீர் சிந்தியதைக் காண்கிறார்கள். அவர்களை அழைத்தது, அவர்களிடத்தில் அவர் கெஞ்சி மன்றாடியது, மென்மையான உள்ளார்ந்த கவலையுள்ள குரலில் அவர்களிடம் பேசியது, ஆகிய அனைத்தும் மீண்டும் அவர்களுடைய காதுகளில் தொனித்தது போன்று காணப்பட்டது. கெத்செமனே தோட்டத்தின் காட்சி அவர்களுக்கு முன்னாக எழும்புகிறது. பிதாவே, உமக்குச் சித்தமானால், இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால், நீங்கும்படிச் செய்யும் (மத்தேயு 26:39) என்கிற கிறிஸ்துவின் வியக்கத்தக்க ஜெபம் அவர்களது செவிகளில் தொனிக்கிறது.Mar 569.3

    நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்கிற பிலாத்துவின் குரலை மீண்டும் அவர்கள் கேட்கிறார்கள். அந்த நியாயவிசாரணைக் கூடத்தில் கிறிஸ்துவின் பக்கத்திலே பரபாஸ் நிற்கின்ற அந்த வெட்கக்கேடான காட்சியை அவர்கள் காண்கிறார்கள். குற்றமற்றவனை தெரிவுசெய்யக்கூடிய அந்த உரிமை அவர்களுக்கு இருந்தது. எவனை நான் உங்களுக்கு விடுதலை செய்யவேண்டுமென்றிருக்கிறீர்கள், பரபாசையோ-கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ என்று பிலாத்து கூறும் வார்த்தைகளை மீண்டும் அவர்கள் கேட்கிறார்கள். அதற்கு மாறுத்தாமாக: “இவனை அகற்றும்; பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று அவர்கள் சத்தமிட்டது கேட்கிறது; அப்படியானால், “கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும்?” என்று பிலாத்து கேட்ட கேள்விக்கு: “அவனை சிலுவையில் அறைய வேண்டும்” என்று தாங்கள் பதில்கொடுத்ததை அவர்கள் மீண்டும் கேட்டார்கள்.Mar 569.4

    மீண்டும் அவர்களுக்காகத் தன்னை பலியாக ஒப்புக்கொடுத்தவர் சிலுவையின் நிந்தையைச் சுமக்கிறார். “நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலுருந்து இறங்கி வா; மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ள திராணியில்லை” என்று உரத்த-வெற்றியின் தொனியில், அவர் தங்களால் பழித்துரைக்கப்படுவதை அவர்கள் கேட்கிறார்கள்.Mar 570.1

    இப்பொழுது அவரை அவர்கள் கெத்செமனே தோட்டத்திலோ, நியாயவிசாரணைக்கூடத்திலோ, கல்வாரிச் சிலுவையிலோ காணவில்லை. அவரை அவமானப்படுத்திய அடையாளங்கள் மறைந்து போய்விட்டன. தாங்கள் துப்பிய அந்த முகத்தை-ஆசாரியர்களும் அதிகாரிகளும் உள்ளங்கையினால் அறைந்த அந்த முகத்தை-அந்த தேவனுடைய முகத்தை, அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள். இப்பொழுது உண்மையானது அதின் தெளிவோடு அவர்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது.⋆Mar 570.2

    வாக்குத்தத்த வசனம்:Mar 570.3

    “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.” - நீதிமொழிகள் 29:25.Mar 570.4