Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உடல் வேதனையினின்று விடுதலை!, ஜூன் 26

    “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள் போகையில், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.” - மத்தேயு 10:6,7,8.Mar 353.1

    இன்னல் நிறைந்த காலங்கள் நமக்குமுன்பாக இருக்கின்றன.உலகம் முழுவதும் குழப்பத்திலும் வேதனையிலும் சிக்கிக்கொண்டிருக்கும் மானிடக் குடும்பத்தின்மீது அனைத்துவிதமான வியாதிகளும் வந்துசேரும். ஆரோக்கிய விதிகளைப்பற்றிய காரியத்தில் இப்போது இருக்கின்ற இத்தகைய அறிவுற்ற நிலையினால், காப்பாற்றப்பட வேண்டியதாகயிருக்கிற அநேக உயிர்கள் பறிக்கப்பட்டுவிடும்; அதிக வேதனைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும்…Mar 353.2

    மார்க்கசம்பந்தமான கெடுபிடிகள் நமது நாட்டின் (U.S.A.) சுதந்திரங்களைக் கவிழ்த்துப்போடும்போது, யார் மனசாட்சியின் சுதந்திரத்திற்காக நிற்பார்களோ, அவர்கள் சாதகமற்ற நிலையில் வைக்கப்படுவார்கள். அவர்கள் தங்களது நன்மைக்காகவாவது சந்தர்ப்பம் இருக்கும்பொழுது, வியாதிகளைப்பற்றியும், அவைகளுக்கான காரணங்கள்பற்றியும், அவைகளைத் தடுக்கும் வழிகள் பற்றியும், அவைகளை குணமாக்கும் வழிமுறைகள்பற்றியும் நல்லபடியாக அறிவைப் பெற்றுக்கொண்டவர்களாக மாறவேண்டும். அவ்வாறு செயவர்கள் எங்குவேண்டுமானாலும் தாங்கள் வேலை செய்வதற்கான ஒரு பணிக்களத்தைக் கண்டுகொள்ளுவார்கள். வியாதிகளால் துன்பப்படுகிறவர்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்ற நிலையில், அநேகர் இருப்பார்கள். நம்முடைய சபையின் விசுவாசத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, சத்தியத்தை அறியாதவர்கள் மத்தியிலும் ஏராளமானவர்கள் இருப்பார்கள்.Mar 353.3

    மூன்றாம் தூதனின் தூதைக் கொடுக்குபோது, அத்துடன் சேர்த்துச் செய்யப்படும் மருத்துவ ஊழியமானது, அற்புதமான பலன்களைக் கொண்டுவரவிருக்கிறது. இது ஒரு பரிசுத்தமாக்குகின்ற-இணைக்கின்ற ஊழியமாக சபையின் மாபெரும் தலைவர் தமது முதல் குழுவிலுள்ள சீடர்களை அனுப்பியதோடு இணைந்ததாக இருக்கும்.Mar 353.4

    தமது சீடர்களை ஆண்டவர் அழைத்து, பின்வரும் கட்டளையைக் கொடுத்தார்: “போகையில், பரலோக இராஜ்யம் சமீபத்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள்; பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள். இலவசமாய்க் கொடுங்கள்”. “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்”-மத்தேயு 10:7,8,16.Mar 354.1

    மத்தேயு புத்தகத்தின் பத்தாம் அதிகாரத்தைப் படித்து நமக்கு நல்லது; அதிலுள்ள போதனைகள் நம்மை நமது ஊழியங்களுக்காக ஆயத்தப்படுத்தும்; கிறிஸ்துவின் பணிக்காக, அவரது கட்டளைகளுக்கு ஏற்றபடி, ஆரம்பகால சீடர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்கு வழியை அவரது ஆவியானவரே ஆயத்தஞ் செய்தார். இத்தகைய சத்தியத்தைக் கொடுக்கும்பொழுது, இத்தகைய ஆசிர்வாதங்களை அவர்களது பங்காக வழங்கும்போது, அந்த மக்களுடைய இல்லங்களிலே வரவேற்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று உணர்ந்துகொள்ளவேண்டும். சரீர சம்பந்தமான வியாதிகளின் வேதனைகளின்று விடுதலைகிடைக்கும்போது, அதின்மூலமாக, தேவன் இதயங்களைச் சென்றடைகிறார். அந்த உள்ளத்திலே சத்தியத்தின் ஒரு விதை போடப்பட்டு, தேவனால் நீர் பாய்ச்சப்படுகிறது. அந்த விதையானது அதிலே உயிர் இருக்கிறது என்பதற்கான அடையாளங்களைக் காட்டும்வரை, அதிகப் பொறுமை தேவைப்படலாம்; ஆனால், இறுதியிலே அந்த விதை முழைத்தெழும்பி, நித்திய வாழ்விற்காக் கனிகொடுக்கிறது.Mar 354.2

    தேவனுடைய வல்லமையின் நாளுகென்று, அவர் செய்யும் ஆயத்தத்தைப் புரிந்துகொள்வதற்கு, மனிதர்கள் எவ்வளவு மந்தமாக இருக்கிறார்கள்!⋆Mar 354.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 354.4

    “…இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாகவந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்து கொள்ளும்படிச்செய்வேன்.” - வெளிப்படுத்தல் 3:9.Mar 354.5