Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உயர்ந்த ஓர் படித்தரம்!, பிப்ரவரி 2

    “கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிற படியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடைய வர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்” - லேவியராகமம் 20:26.Mar 65.1

    இக்கட்டுக் காலத்தில், ஆசரிப்புக்கூடாரத்தில் பரிந்துபேச பிரதான ஆசாரியன் இல்லாதிருக்கும் நிலையில், கர்த்தருடைய கண்களுக்குமுன்பாக வாழ, தாங்கள் எப்படி இருக்கவேண்டுமென பலர் உணராதிருப்பதை நான் கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையை பெற்றுக் கொள்கிறவர்களும், இக்கட்டுக்காலத்தில் பாதுகாக்கப்படுகிறவர்களும் கிறிஸ்துவின் சாயலை முழுமையாகப் பிரதிபலிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.Mar 65.2

    கர்த்தருடைய நாளில் நிலைநிற்கவும், அவர் பார்வைக்குமுன் ஜீவிக்கவும், தகுதி பெற்றதாக புத்துணர்ச்சி அடைவதற்கும், பின்மாரியின் காலத்திற்கும் அநேகர் அதற்கு மிகவும் அவசியமான ஆயத்தத்தை புறக்கணித்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன். ஆ! எத்தனை பேர் இக்கட்டுக்காலத்தில் ஒரு அடைக்கலமுமில்லாதிருப்பதை நான் கண்டேன்! அவர்கள் மிகவும் அவசியமான ஆயத்தத்தைப் புறக்கணித்து விட்ட படியினால், பரிசுத்த தேவனின் கண்களுக்குமுன் வாழ - தகுதிபெற - தேவியான பின்மாரியை பெற்றுக் கொள்ளத் தவறிவிட்டனர். சத்தியத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து, தங்கள் ஆத்துமாவை பரிசுத்தப்படுத்தத் தவறியவர்கள்... வாதைகளின் காலத்தில், தங்கள் கட்டிடத்தில் சரியாக பொருத்தப்பட, இன்னு செதுக்கப்பட வேண்டும் என்பதைக் காண்பார்கள்; ஆனால், அவர்களுக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேச மத்தியஸ்தர் இருக்கமாட்டார். அதற்கு முன்பே, “அநியாயஞ் செய்கிறவன் இன்னும் அநியாயஞ் செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்” என்ற மிக முக்கியமானதும் பயங்கரமுள்ள அறிவிப்பு கொடுக்கப் பட்டாயிற்று.Mar 65.3

    பெருமை, சுயநலம், உலக இச்சை தவறான ஒவ்வொரு சொல்லும், தவறான ஒவ்வொரு செயலும் ஆகியவற்றை முழுமையாக வென்றாலொழிய அந்த இளைப்பாறுதலை ஒருவரும் பகிர்ந்து கொள்ளமுடியாது எனக் கண்டேன்: எனவே, நாம் கர்த்தருக்கு மிகவும் சமீபமாக இழுத்துக் கொள்ளப்படவும், கர்த்தருடைய நாளின் யுத்தத்தில் உறுதியாக நிற்கவும் அவசியமான ஆயத்த முள்ளவர்களாயு மிருக்கும்படி, உண்மையுடனும் ஆர்வமுடனும் முயற்சி செய்ய வேண்டும். தேவன் பரிசுத்தமானவர்; பரிசுத்தகளேயன்றி வேறொரு வரும் அவரது பிரசன்னத்தில் சஞ்சரிக்க முடியாது என்பதை அனைவரும் நினைவிற்கொள்ளவேண்டும்.Mar 66.1

    இன்று நாம் சொல்லாலும் செயலாலும் தீங்கு செய்துவிடாமல் இருப்பதற்கு மிகவும் கவனமாயிருக்க வேண்டும்.நாம் தேவனை நாடி, அவரது பிரசன்னமில்லாமல் திருப்தியடைந்து ஓய்ந்திருக்க மாட்டோம் என்று தீர்மானஞ்செய்ய வேண்டும். இதுதான் நமக்குக் கொடுக்கப்படும் கடைசிநாள் என்பதுபோல, நாம் விழிப்போடிருந்து, உழைக்கவும் ஜெபிக்கவும் வேண்டும்; அப்படியானால் நமது வாழ்க்கை எவ்வளவு அதிக உண்மையுள்ளதாயிருக்கும். நமது அனைத்து வார்த்தைகளிலும் செயலிலும் எவ்வளவு நெருக்கமாக இயேசுவை நாம் பின்பற்றுவோம்.⋆Mar 66.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 66.3

    “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில்... உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; ணீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப் போலவும் இருப்பாய்.” - ஏசாயா 58:11.Mar 66.4