Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தாழ்மையான மனிதர்கள் தூதை கூறியறிவிக்கறார்கள்!, ஜனவரி 9

    “அதீத உறுதியான தீர்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப் போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.” - 2 பேதுரு 1:19.Mar 17.1

    வெளிப்படுத்தின விசேஷம் 14:6,7-ல் கூறப்பட்டுள்ள இந்தத் தூதானது, ‘நித்திய சுவிசேஷத்தின்’ ஒரு பகுதியாக இருக்கிறதென்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் ஊழியமானது. தூதர்களிடத்தில் ஒப்படைக்கப்படாமல், மனிதர்களிடத்தில்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வேலையை வழிநடத்துவதற்காக, பரிசுத்த தூதர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மனிதரின் மீட்பிற்காக உருவாகும் மாபெரும் இயக்கங்கள் தூதர்களது பொறுப்பிலே இருக்கின்றன; ஆனால், சுவிசேஷத்தை அறிவிக்கும் அந்த வேலையானது, கிறிஸ்துவின் ஊழியர்களால் இந்த பூமியில் செயல்படுத்தப்படுகின்றன.Mar 17.2

    தேவனுடைய ஆவயானவருக்கும் தேவனுடைய வேத வாக்கியங்களிலுள்ள போதனைகள் ஆகியவைகளின் தூண்டுதலிற்கும் கீழ்ப்படிகின்ற உத்தமமான மனிதர்களே, உலகத்தை எச்சரிக்கும் இந்த தூதை அறிவிக்க வேண்டியதிருந்தது. “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனத்திற்கும்,” “பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப் போன்ற அவ்வசனத்தைக்” (2 பேதுரு 1:19) கவனத்தில் கொள்பவர்கள், தேவனைப்பற்றிய அறிவை, புதையலாக மறைத்துவைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களைவிடவும் மேலாகவும், “அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது” (நீதிமொழிகள் 3:14) என்று சொல்லப்பட்டிருப்பவைகளையும்விட மேலானதாக கருதி, நாடித்தேடிக்கொண்டிருந்தார்கள்; மேலும் இராஜ்யத்தைக்குறித்த மாபெரும் காரியங்களை ஆண்டவர் அவர்களுக்கு வெளிப்படுத்தினார். “கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குது தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்” - சங்கீதம் 25:14.Mar 17.3

    இந்த சத்தியத்தை புரிந்துகொண்டு, அதை அறிவிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள், சுற்றிவந்த வேத அறிஞர்கள் அல்ல. அவர்கள்மட்டும் உத்தமமான காவற்காரர்களாக ஊக்கத்தோடும் ஜெபத்தோடும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்திருப்பார்களானால், அந்த இருண்ட நேரத்தைப்பற்றி நன்றாக அறிந்திருப்பார்கள். நடைபெறப்போகின்ற சம்பவங்களை அந்த தீர்க்கதரிசனங்கள் வெளிப்படையாகக் காட்டியிருக்கும்; ஆனால், அவர்கள் அந்தப் பொறுப்பிற்குத் தகுதியாக இருக்கவில்லை; எனவே, தாழ்மையான மனிதர்களிடத்தில் அந்தத் தூது ஒப்படைக்கப்பட்டது. “...இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்...” (யோவான் 12:35) என்று இயேசு கூறினார். தேவன் கொடுத்த வெளிச்சத்தினின்று முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்பவர்கள், அல்லது தங்களுக்குக் கிடைக்கக்கூடிய தூரத்தில் அந்த வெளிச்சம் இருக்கும்போதும், அதைத் தேடாமல் அலட்சியஞ்செய்பவர்கள், இருளிலே விட்டுவிடப்படுவார்கள். “என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8:12) என்று நமது மீட்பர் உறுதியாகக் கூறுகின்றார். ஒரே நோக்கத்தோடு யாரெல்லாம் ஏற்கனவே கொடுக்கப்பட்ட வெளிச்சத்தை ஊக்கத்தோடு கவனத்தில் கொண்டு, தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கு நாடித்தேடுகிறார்களோ, அவர்கள் மாபெரும் வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்வார்கள். அந்த ஆத்துமாவை அனைத்து சத்தியங்களிலும் வழிநடத்தத்தக்கதாக, பரலோக ஒளிக்கதிரை பிரகாசிக்கின்ற நம்பிக்கை நட்சத்திரம்போன்று யாராவது ஒரு நபர் அனுப்பப்படுவார்.⋆Mar 18.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 18.2

    “ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.” - சங்கீதம் 91:10.Mar 18.3