Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வல்லமையுடன் பிரசங்கித்தல்! , ஏப்ரல் 18

    அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் யூதேயாவின் வானந்தரத்தில் வந்து: “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித் திருக்கிறது…” என்று கூறினான். - மத்தேயு 3:1,2.Mar 215.1

    யோவான் ஸ்நானகன் தமது வனாந்தர வாழ்க்கையின் பொழுது, தேவனால் போதிக்கப்பட்டார். தேவனைப்பற்றிய வெளிப்படுத்தல்களை இயற்கையின் வாயிலாகக் கற்றுக் கொண்டார். தெய்வீக ஆவியானவரின் ஆலோசனைக்கடியில் தீர்க்கதரிசிகளின் புத்தகச் சுருள்களைப் படித்தார். பகலிலும், இரவிலும், அவரது உள்ளமும், இதயமும், ஆத்துமாவும் அந்த பரலோகத்தின் தரிசனத்தால் நிரப்பப்படும்வரை, கிறிஸ்துவே அவரது பாடமாகவும் தியானமாகவும் இருந்தார்.Mar 215.2

    இராஜாவை அவரது அழகிலே நோக்கிப் பார்த்தார்; எனவே, சுயமானது முற்றிலும் காணப்படாமற்போயிற்று. அந்தப் பரிசுத்தத்தின் மகாஅ மேன்மையை அவர் கண்டார்; எனவே தாம் தகுதியற்றவர், திறமையற்றவர் என்பதை அறிந்துகொண்டார். அவர் கூறியறிவிக்க வேண்டியது தேவனுடைய தூதாகும். தேவனுடைய வல்லமையிலும் அவருடைய நீதியிலுந்தான் அவர் நிலைநிற்கவேண்டியிருந்தது. மானிடர்களைக்கண்டு பயமற்றவராக, பரலோகத்தின் தூதுவராக வெளியே செல்வதற்கு அவர் ஆயத்தமாக இருந்தார்; ஏனெனில், அவர் தெய்வீகத்தை நோக்கிப் பார்த்திருந்தார். இராஜாதி இராஜாக்களின் இராஜாவிற்கு முன்பாக நடுக்கத்தோடு தலைகவிழ்ந்து நின்றதினால், இவ்வுலகத்தின் அரசர்களின் முன்னிலையிலே பயமின்றி அவரால் நிற்கமுடிந்தது.Mar 215.3

    யோவான் ஸ்நானகன், விரிவான தர்க்கங்களிலோ அல்லது நயமாகப் புனையப்பட்ட கருத்துக்களிலோ தமது செய்திகளைக் கூறியறிவிக்கவில்லை. அவருடைய தூதானது அதிர்ச்சிகொடுக்க கூடியதாகவும் கடுமையானதாகவும் இருந்தது; எனினும், அந்தச் செய்திகள் நம்பிக்கை நிறைந்தவைகளாக இருந்தன. வனாந்தரத்தி லிருந்து, “மனந்திரும்புங்கள், பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது:, என்ற அவரது குரல் கேட்டது- மத்தேயு 3:2 . ஒரு புதிய விசித்திரமான வல்லமையோடு அந்தச் செய்தி மக்களை அசைத்தது; நாடு முழுவதும் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது; திரள்கூட்டமான மக்கள் வனாந்தரத்திற்குச் சென்றார்கள்.Mar 215.4

    வானங்களின் மேகங்களின்மீது கிறிஸ்து இரண்டாம் முறையாக வருவதற்கு சற்றுமுன்னர் உள்ள இந்தக் காலத்திலே, யோவான் ஸ்நானகன் செய்த ஊழியத்தைப்போன்ற ஒரு ஊழியஞ்செய்யப்படவேண்டும். ஆண்டவருடைய அந்த மகா நாளிலே நிற்கத்தக்கதாக ஒரு கூட்டத்தை ஆயத்தஞ்செய்யவேண்டுமென்று அதற்காக மனிதரை தேவன் அழைக்கிறார்… கிறிஸ்துவின் அதிசீக்கிர வருகையை விசுவாசிக்கின்ற ஒரு மக்கள் கூட்டமாக இருக்கின்ற நாம், எடுத்துச்செல்லவேண்டிய ஒரு தூது உண்டு; அதாவது,” உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு” (ஆமோஸ் 4:12) என்பதே அந்தத் தூதாகும். நம்முடைய தூதானது, யோவான் ஸ்நானகனுடைய தூதைப்போன்று, ஒளிவுமறைவற்றதாக — நேரடியானதாக் இருக்கவேண்டும். அவன் இராஜாக்களை அவர்களது அக்கிரமத்திற்காகக் கடிந்துகொண்டான். தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தபோதிலும், தேவனுடைய வார்த்தையைக் கூறியறிவிக்கத் தயங்கவில்லை. இந்தக் காலத்தில் நம்முடைய ஊழியமும் உத்தமமாகச் செய்யப்பட வேண்டும்.Mar 216.1

    யோவான் கொடுத்ததைப்போன்ற ஒரு தூதை நாம் கொடுக்க வேண்டுமானால், அவனுக்கிருந்ததைப்போன்ற ஆவிக்குரிய அனுபவம் நமக்கும் இருக்க வேண்டும். அதே வேலையானது நம்மிலே செய்யப்பட வேண்டும். நாம் தேவனை நோக்கிப்பார்க்க வேண்டும். அவரை நோக்கிப்பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது, சுயம் காணப்படாமல் மறைந்துப்போகிறது.⋆Mar 216.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 216.3

    “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.” - யோவான் 16:13.Mar 216.4