Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சத்தியமே வெல்லும்!, ஜனவரி 10

    “... நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி: இனி காலம் செல்லாது: ...என்று ஆணையிட்டுச் சொன்னான்.” -வெளிப்படுத்தல் 10:5-7.Mar 19.1

    ‘தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வேலை வந்தது’ என்று வெளிப்படுத்தின விசேஷம் 14-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள தூதானது, முடிவுகாலத்தின் நேரத்திலே கொடுக்கப்படுகிறது. வெளிப்படுத்தல் 10-ம் அதிகாரத்தில் ஒரு தூதன் சமுத்திரத்தின் மேல் ஒரு காலையும் பூமியின் மேல் ஒரு காலையும் வைத்திருப்பதாகக் குறிக்கப்பட்டுள்ளது; அதாவது, இந்தத் தூதானது தொலை தூரத்திலுள்ள நாடுகளுக்கு எடுத்துச்செள்ளப்ப்படும்ல; சமுத்திரத்தையும் கடந்து சென்று அறிவிக்கப்படும் என்பதைக் காட்டுகிறது; கடைசி எச்சரிப்பின் தூதின் அறிவிப்பை கடல்களுக்கு மத்தியில் இருக்கும் தீவுகளும் கேட்கும்...Mar 19.2

    “சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன கையை வானத்திற்கு நேராக உயர்த்தி: இனி காலம் செல்லாது;... வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும்,சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்”-வெளிப்படுத்தல் 10: 5-7. இந்தத் தூதானது, தீர்க்கதரிசன காலக்கட்டங்களின் முடிவை அறிவிக்கிறது. 1844-ல் நமது ஆண்டவரின் வருகையைக் காண்பதற்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு நிகழ்ந்த ஏமாற்றமானது, அவரது வருகைக்காக ஆவலோட எதிர்நோக்கிக்கொண்டிருந்தவர்களுக்கு நிச்சயமாகவே கசப்பாக இருந்தது. இந்த ஏமாற்றம் வரவேண்டும் என்பது தேவதிட்டத்தின் ஒரு ஒழுங்காகவே இருந்தது...!Mar 19.3

    தேவன் இதற்காக ஆயத்தப்படுத்தாத எந்த சபையின்மீதும் ஒரு துன்பமும் கடந்துசெல்லவில்லை. தேவனுடைய வேலைக்கு எதிராக, வேலை செய்கின்ற எந்த எதிர்ப்பு சக்தியும் எழும்பவில்லை; ஆனால், அவர் இதை முன்னரே தெரிந்திருந்தார். அவரது தீர்க்க தரிசிகளின்மூலமாக, அவர் முன்னறிவித்தபடியே, அனைத்துக் காரியங்களும் நடைபெற்றன. தேவன் தமது சபையை கைவிடப்பட்ட நிலையில், இருளுள் விட்டுவிடவில்லை. தீர்க்கதரிசன அறிவிப்புகளிலே என்ன சம்பவிக்கும் என்பதற்கான சுவடுகளை அறிந்திருந்தார். அவரது முன்னறிவின் அருளினாலே, உலக சரித்திரத்தில் அதற்காக நியமிக்கப்பட்ட இடத்திலே, நடைபெறச் செய்தார். தீர்க்கதரிசிகள் மூலமாக பரிசுத்த ஆவியானவர் தூண்டுதல் செய்து, முன்னறிவிப்பாக கூறப்பட்ட காரியத்தை நடைபெறச் செய்தார். அவரது அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்படும்.-நிலைநாட்டப்படும். அவரது பிரமாணமானது, அவரது சிங்காசனத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. மானிட சக்திகளோடு சாத்தானிய சக்திகளும் சேர்ந்துகொண்டாளுங்கொட்ட, அதை அழித்துப்போட முடியாது. சாத்தியமானது ஆவியானவரால் அருளப்பட்டு, தேவனால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. சத்தியமானது மறைக்கப்பட்டிருப்பதுபோன்று காணப்பட்டாலும் அது வாழ்ந்திருக்கும்; அது வெற்றிபெறும். பிரமாணமானது குணத்திலே எடுத்துக்காட்டாக இருப்பதே கிறிஸ்துவின் சுவிசேஷமாகும். இதற்கு எதிராகச் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு வஞ்சகமும், பொய்யை நிலைநாட்டத்தக்கதாக பயன்படுத்தப்படும் ஒவ்வொரு உபாய தந்திரமும், சாத்தானிய சக்திகளால் போலியாகக் காட்டப்படும் (உண்மைபோன்று) ஒவ்வொரு பிழையும், முடிவிலே நித்தியமாக நொறுக்கப்பட்டுவிடும். நடுப்பகலில் பிரகாசிக்கும் சூரியனப் போன்று சத்தியம் வெற்றியடையும். “நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; பூமி முழுவதும் அவரது மகிமையால் நிறைந்திருக்கும்.”⋆Mar 19.4

    வாக்குத்தத்த வசனம்: Mar 20.1

    “கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.” - சங்கீதம் 25:14.Mar 20.2