Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மீட்கப்பட்டவர்களுடைய நன்றியுணர்வு!, நவம்பர் 5

    அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்பார். - மத்தேயு 25:40.Mar 617.1

    தேவ மக்களுக்கு உதவும்படி நாம் செய்கிற ஒவ்வொரு செயலும், ஆண்டவருக்கே செய்ததுபோல ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கு பலனளிக்கப்படும்.Mar 617.2

    “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற இராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” என்று இயேசு தமது தெளிவான-கீதம்போன்ற குரலினால், தம்முடையவர்களை அழைக்கும்பொழுது, அறுவடை செய்கின்ற ஒவ்வொருவரும் அதைக் கேட்டு, எப்படிப்பட்ட மன நிறைவை அடைவார்கள்!Mar 617.3

    மீட்பர் மகிமைப்படுகிறார்; ஏனனில், அவர் வீணாக மரிக்கவில்லை. அழிந்து மடிந்துபோய்க்கொண்டிருந்த பாவிகளுக்காக, தாங்கள் அனுபவித்த ஆத்தும வருத்தத்தின் பலனைப் பார்க்கிற அவருடைய உடன்வேலைக்காரரும் மிகவும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிறைந்த இதயங்களோடு திருப்தியடைவார்கள். தங்களால் செலவிடப்பட்ட, மனப்பாரம் நிறைந்த மணிவேளைகள், தாங்கள் சந்திக்கநேரிட்ட குழப்பமான சூழ்நிலைகள், சமாதானத்திற்க்கு ஏதுவானவைகளைப் பார்க்கவும் ஏற்றுக்கொள்ளவும் சிலர் மறுத்துப்போட்டதால், இதயம் அடைந்த தூக்கம் அனைத்தும் மறக்கப்பட்டுபோகும். ஊழியத்தைத் தாங்குவதற்க்காக அவர்கள் செய்த தியாகமெல்லாம் இனி நினைவில் இருப்பதில்லை. இயேசுவிற்காக, இரட்சிக்கவேண்டுமென்று அவர்கள் தேடியலைந்த ஆத்துமாக்கள், தேவனின் இரக்கத்திற்கும் அன்பிற்க்கும் நினைவுச்சின்னங்களாக, நித்தியமாக இரட்சிக்கப்பட்டார்கள் என்பதைக் காணும்பொழுது, பரலோகம் முழுவதும் துதியின் ஆரவாரங்களாலும், நன்றியறிதலின் பூரிப்புகளாலும் நிரம்பிவழியும்.Mar 617.4

    நம் முன்பாக ஒரு பரலோகம் இருக்கிறது. அதின் குடிகளுக்குஈஈஏ சச்சரவே உண்டாகாது... “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற இராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” என்று மீட்க்கப்பட்ட பரிசுத்த குடும்பத்தை வாழ்த்தி, கிறிஸ்து சொல்லுகிற வார்த்தைகளை நாம் கேட்கலாம்; நம்முடைய பொற்சுரமண்டலங்களை நாம் மீட்டுவோம். பரலோகம் முழுவதும் உன்னதமான இசை தொனிக்கும். ஜொலிக்கிற கிரீடங்களை அவர் பாதத்திலே வைத்து, நமது சார்பிலே வெற்றிகொண்ட அவருக்கு மகிமையைச் செலுத்தலாம்.Mar 618.1

    நாம் புரிந்துகொள்ளாத ஒரு சில காரியங்கள் இங்கே இருக்கலாம். நம்முடைய குறுகிய புரிந்துகொள்ளுதலுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட சில வேதாகமப் பகுதிகள் நமக்கு மிக விளக்கமற்றதாகத் தெரியலாம்; ஆனால், நம் இரட்சகர் நம்மை ஜீவத்தண்ணீர்களண்டையில் நடத்திச்செல்லும்பொழுது, முன்பு நமக்குத் தெளிவாகப் புரியாதவைகளை அவே தெளிவாக்குவார்.⋆Mar 618.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 618.3

    “இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.” - 1 கொரிந்தியர் 13:12.Mar 618.4