Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    எண்ணப்பதிவுகள், உணர்வுகள், மருந்துகள்…அதன் விளைவுகள்!, ஆகஸ்டு 13

    “உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய் வழிகளையும் வெறுக்கிறேன்.” - சங்கீதம் 119:104.Mar 449.1

    அமைதியற்ற அநேகர் ஒழுங்கமைதிக்கும், விதிமுறைக்கும், அமைப்பிற்கும் கட்டுப்படமாட்டார்கள். தங்களது சொந்தத் தீர்மானங்களைப் புறம்பே ஒதுக்கிவிட்டு, அனுபவமுள்ள மற்றவர்களின் தீர்மானத்திற்கு சரணடைந்தால், அவர்களது உரிமைகள் குறைக்கப்பட்டுவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒழுங்கிற்குக் கீழ்ப்படிந்து, துணிச்சலான — குழப்பமான கொள்கை வெறியைத் தங்களது கூட்டங்களிலிருந்து வெளியே தள்ளுவதற்கான மனபாங்கில்லாவிட்டால், தேவனுடைய ஊழியம் முன்னேற்றமடையாது.Mar 449.2

    எண்ணப்பதிவுகள், உணர்ச்சிகள் ஆகியவை ஒரு நபர் தேவனால் நடதப்படுகிறார் என்பதற்கான நிச்சயமான ஆதாரமல்ல. சாத்தானை நாம் சந்தேகிக்காவிட்டால், எண்ணப்பதிவுகளையும் உணர்வுகளையும் அவனே கொடுத்துவிடுவான். இவைகள் பாதுகாப்பான வழிகாட்டிகளல்ல. நமது விசுவாசத்திற்கான ஆதாரங்கள்குறித்து அனைவரும் முற்றிலும் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும்; எப்படியும் தங்களது நம்பிக்கைக்கு அணிசேர்த்து, தேவனுடைய மகிமைக்காகக் கனிகொடுக்க வேண்டுமென்பதே, அவர்களது தலைசிறந்த பாடமாக இருக்கவேண்டும்.Mar 449.3

    பாட்டில்கிரீக் சானிடோரியத்திலுள்ள ஒரு நோயாளி கொஞ்சக்காலமாக தான் ஒரு புதிய வெளிச்சத்தைப் பெற்றுக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தார். அவர் மிகவும் வியாதிப்பட்ட நிலையில் மரிக்கும் தருவாயில் இருந்தார்…அவர் தமது கருத்துக்களை யாரிடத்திலெல்லாம் கூறினாரோ, அவர்கள் அவர் சொல்வதை யெல்லாம் ஆர்வத்தோடு கவனித்தார்கள்; அவர் ஆவியின் அருளால் பேசுவதாக சிலர் நினைத்தார்கள்… அநேகருக்கு அவர் பகுத்தறிவிற்கேற்றபடி பேசிய காரியமானது, எவ்விதமான பிழையும் இன்றி இருப்பதாக காணப்பட்டது. அவன் நோயுற்றிருந்த அறையிலே அவரால் கொடுக்கப்பட்ட சமயச் சொற்பொழிவுகளைப்பற்றி அங்குள்ளோர் கூறினார்கள். அநேக அற்புதமான காட்சிகள் அவருக்கு முன்பாகக் கடந்துசென்றன; ஆனால், அவரது அகத்தூண்டுதலிற்கான ஆதாரம் என்ன? அவரது வேதனையைப் போக்குவதற்காகக் கொடுக்கப்பட்ட மார்ஃபின் (Morphine) என்ற மருந்துதான், இத்தகைய காரியங்களைச் செய்திருக்கிறது.Mar 449.4

    இத்தகைய பரிகாரங்கள் (மருந்த்துகள்) என்று அழைக்கப்படுகையில் நச்சுப்பொருட்கள் அடங்கியிருக்கின்றன. இவை சில பழக்கங்களையும் பசியுணர்வுகளையும் உண்டாக்குகின்றன. இவைகளால் ஆத்துமாவிற்கும் சரீரத்திற்கும் அழிவே ஏற்படுகின்றது. அநேகருக்கு பிரபலமான-தனி உரிமைபெற்ற-காப்புரிமை பெற்ற மருந்த்துகள் என்று அழைக்கப்படுபவை மற்றும் மருத்துவார்களால் கொடுக்கப்படும் சில மருந்துகள், குடிப்பழக்கம், அபின் பழக்கம், மார்ஃபின் பழக்கம் ஆகியவைகளுக்கு அடித்தளம் 4 பயங்கரமான சாபமாகவும் இருக்கின்றன.Mar 450.1

    சில ஆசீர்வாதங்கள் பரிசுத்தமாக்கப்பட்டவை என்று சிலரால் உரிமைகோரப்பட்டு பெற்றுக்கொள்ள்ப்படும்போதும், அந்தக்காரியமானது குறிப்பிட்ட ஒரு உணர்வின்மீது சார்ந்திருக்கத்தக்கதாக வழிநடத்தும்போதும், மேலும் தேவனுடைய சித்தத்தை அறியத்தக்கதாக வழிநடத்தும்போதும், மேலும் தேவனுடைய சித்தத்தை அறியத்தக்கதாக வேதவாக்கியங்களை ஆராயவேண்டியது அவசியமில்லை என உறுதிபடக் கூறும்போதும், அவர்களால் யூகிக்கப்பட்ட ஆசீர்வாதம் ஒரு போலியான ஆசீர்வாதமென்று அறியலாம்; ஏனெனில், அந்த ஆசீர்வாதத்தை உடையவர்கள் தங்களது சொந்த பரிசுத்தமற்ற உணர்ச்சிகளின்மீதும், மனதின் போலித் தோற்றங்களின்மீதும் மதிப்புவைக்கத்தக்கதாக வழிநடத்துகிறது; மேலும், தேவனுடைய வார்த்தையிலுள்ள அவரது குரலிற்கு அவரது காதுகளை அடைத்துக்கொள்ளச் செய்கிறது.⋆Mar 450.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 450.3

    “திவ்விய சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” - 2 பேதுரு 1:4.Mar 450.4