Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மீட்கப்பட்ட திரளான கூட்டம்!, நவம்பர் 17

    “இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகலஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிளுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத்தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். - வெளிப்படுத்தல் 7:9.Mar 641.1

    எல்லா தரப்பினரும், அனைத்து தேசத்தாரும், ஜாதியாரும், பாஷைக்காரரும், ஜனங்களும் கறையற்ற வஸ்திரங்களோடும், அலங்கரிக்கப்பட்ட கிரீடங்களோடும் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பார்கள். இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள், தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள் என்றும் தூதன் சொன்னான். ஆண்டவரைக்காட்டிலும் உலக சந்தோஷங்களை அதிகமாக நேசித்தவர்களும், சுயத்திற்காகவே வாழ்ந்து, கீழ்ப்படியாமற்போனவர்களும் இரண்டு உலகங்களையும் இழந்துபோனார்கள்; இவ்வாறாக, வாழ்க்கையின் காரியங்களையும் அனுபவிக்கவில்லை; நித்திய ஜீவனையும் அடையவில்லை.Mar 641.2

    ஜெயகீதத்தோடும், கிரீடம் சுரமண்டலங்களோடும் நிற்கிற ஜெயங்கொண்ட கூட்டத்தார், உலக உபத்திரவமாகிய சூளையிலே, மிக அதிக வெப்பத்தைக் கடந்துவந்திருக்கிறார்கள். ஆதரவற்றவர்களாக பசியையும் உபத்திரவத்தையும் தாண்டிவந்த இவர்கள், சுயத்தை மறுத்து, கசப்பான ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கிறார்கள். இனி அவர்களை ஒருபொழுதும் எழைகளாகவோ, வருத்தத்திலிருக்கிறவர்களாகவோ, உபத்திரவப்படுகிறவர்களாகவோ, கிறிஸ்துவினிமித்தம் வெறுக்கப்பட்டவர்களாகவோ அல்ல, வெற்றியாளர்களாக அவர்களை நோக்கிப் பாருங்கள். இராஜாக்களின் உடைகளைக் காட்டிலும் வெண்மையான-பிரகாசமான அவர்களது பரலோக உடைகளை நோக்கிப் பாருங்கள். விசுவாசத்தினாலே அவர்களுடைய மாணிக்கக் கற்கள் பதித்த கிரீடங்களைப் பாருங்கள்; அப்படிப்பட்ட இராஜ முடியை உலகின் எந்த அரசனும் ஓர் பொழுதும் அணிந்திருக்கவில்லை. Mar 641.3

    அவர்கள் தங்கள் வெற்றியின் குருத்தோலைகளை அசைத்து, உரத்த குரலில் ஓசன்னா என்று பாடுவதைக் கேளுங்கள். அடிக்கப்பட்டு உயிர்த்தெழுந்த ஆட்டுக்குட்டியானவர் பாத்திரமானவர், பாத்திரமானவர் “சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் இரட்சிப்பின் மகிமை உண்டாவதாக” என்ற இத்தகைய வார்த்தைகளை தங்களது குரல்களினாலே பாடிய அவர்களது இனிமையான கீதம், பரலோகத்தை நிறைக்கிறது. தூதர் சேனையும், பிரதான தூதர்களும், பாதுகாக்கிற கேரூபீன்களும், மகிமையுள்ள செராபீன்களும், “ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென்” என்ற மகிழ்ச்சியான வெற்றியின் கீதத்தை எதிரொலித்தார்கள் - வெளியாகமம் 7:12.Mar 642.1

    அந்த நாளிலே, நீதிமான்களே ஞானவான்களென்றும், பாவம் நிறைந்த கீழ்ப்படியாதவர்கள் முட்டாள்களென்றும், எல்லோருக்கும் வெளியரங்கமாகும். அவமானமும், நித்திய நிந்தையுமே அவர்கள் பங்காயிருக்கும். கிறிஸ்துவிற்கு உடன் வேலையாட்களாக இருந்தவர்கள். பரிசுத்தமும் நித்திய நீதியுமான ஆடையைத் தரித்தவர்களாக சிங்காசனத்தைச் சுற்றிலுமிருப்பார்கள்.⋆Mar 642.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 642.3

    “...மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.” - யோவான் 16:23.Mar 642.4