Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மரணத்திற்கென்று நாள் குறிக்கப்பட்டாயிற்று!, செப்டம்பர் 18

    “…ஒரே நாளிலே சிறியோர் பெரியோர் குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்களைக் கொள்ளையிடவும், அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது.” - எஸ்தர் 3:13.Mar 521.1

    தேவனுடைய மீதியான மக்கள்மேல் வரப்போகிற கட்டளை, அகாஸ்வேரு யூதர்களுக்கு எதிராகப் பிறப்பித்த கட்டளையைப் போன்றே இருக்கும்.Mar 521.2

    மானிட சட்டதிட்டங்கள் கொடுத்த பாதுகாப்பு, நியாயப் பிரமாணங்களை கனம்பண்ணின பிள்ளைகள்மேலிருந்து விலக்கிக் கொள்ளப்படும்போது, ஆங்காங்கே, வெவ்வேறு நாடுகளில் அவர்களை அழித்துப்போடுவதற்காக, இதேபோன்ற ஒரு இயக்கம் காணப்படும். சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட காலம் நெருங்கும் பொழுது, வெறுக்கப்பட்ட கூட்டத்தாரை வேரோடு அழிக்க, மக்கள் சதித் திட்டந்தீட்டுவார்கள். அவர்களைக் கடிந்துகொண்ட-அவர்களுடைய சொல்லுக்கு இணங்காத- அந்தக் குரலை முற்றிலுமாக அமைதிப்படுத்தத்தக்கதாக, ஒரே இரவில் அவர்கள்மீது ஒரு இறுதித் தாக்குதல் நடத்த்வேண்டுமென்பதாகத் தீர்மானிக்கப்படும்.Mar 521.3

    அவர்கள், நான்காம் கற்பனை சொல்லுகிற ஓய்வுநாளை கண்டிப்பாகப் புறக்கணித்துவிட்டு, வாரத்தின் முதல்நாளைக் கனம்பண்ணவேண்டும் அல்லது அவர்கள் கொல்லப்பட வேண்டுமென்ற ஒருசட்டம் எங்கும் போய்ச்சேரும்; ஆனால், அவர்கள் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். ஆண்டவருடைய ஒய்வு நாளை காலின்கீழ் மிதித்து, பாப்பு மார்க்கத்தின் நியமனத்தைக் கனப்படுத்தமாட்டார்கள். சாத்தானுடைய சேனையும் துன்மார்க்கர் கூட்டமும் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். அவர்கள் தப்பிக்க வேறு வழியே இல்லாததுபோல் காணப்படுவதினால், அந்தக்கூட்டம் அவர்களைக்கண்டு எக்களிக்கும்.Mar 521.4

    இக்கட்டுக்காலம் வரும்பொழுது, ஒவ்வொருவருடைய நித்தியமும் ஏற்கெனவே தீர்மானிக்கப்படிருக்கும்; அதற்குப் பின்பு கிருபையின் காலம் இல்லை. மனந்திருப்புகிற பாவிக்காக இரக்கம் காத்திருக்காது. ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை அவரது மக்கள்மீது போடப்பட்டிருக்கும். வலுசர்ப்பத்தை தலைமையாக்கொண்ட, சேனையோடு வந்துகொண்டிருக்கின்ற, பூமியின் வல்லமைகளும் எதிராகத் தங்களைப் பாதுகாக்கக் கூடாத இந்த சாவுக்கேதுவான போராட்டத்தில் சிறிய-மீதமான கூட்டத்தார், ஆண்டவரைத் தங்களுக்குப் பாதுகாப்பாகப் பற்றிக் கொள்வார்கள். உபவத்திரம், மரணம் என்னும் வேதனைக்கடியில், அனைவரும் மிருகத்தை வணங்கி, அதின் முத்திரையைத் தரித்துக் கொள்ள வேண்டும் என்று உலகத்தின் பெரிய அதிகாரிகளால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.Mar 522.1

    பரிசுத்தவான்கள் அதிகமான மனவேதனையை அனுபவித்ததை நான் கண்டேன். பூமியின் பொல்லாத குடிமக்கள் அவர்களைச் சூழ்ந்திருந்ததைப்போலத் தோன்றியது. காணப்பட்டதெல்லாம் அவர்களுக்கு எதிராகவே இருந்தது. துன்மார்க்கருடைய கைகளினால் மடியும்படி, தேவன் தங்களை விட்டுவிடுவார் என்று சிலர் பயப்பட ஆரம்பித்தார்கள்…Mar 522.2

    பரிசுத்தவான்களுக்கு அது பயங்கரமான-வேதனை நிறைந்த-கடுந்துயர் அனுபவிக்கும்-நேரமாக இருந்தது. இரவும் பகலும் விடுதலைக்காக அவர்கள் தேவனை நோக்கி கூப்பிட்டார்கள். வெளித்தோற்றத்துக்கு அவர்கள் தப்பிப்போக முடியாததுபோலத் தோன்றிற்று. “உங்கள் தேவன் ஏன் உங்களை எங்கள் கைகளிலிருந்து விடுவிக்க வில்லை?” “நீங்களாகவே ஏன் உங்களை காப்பாற்றிக்கொள்ள கூடாது?”நீங்கள் ஏன் மேலே போய் உங்களது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடாது?” என்றெல்லாம் இகழ்ந்து, துன்மார்க்கர் அவர்களுக்கு எதிராக ஆரவாரித்தார்கள்; ஆனால், பரிசுத்தவான்கள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.⋆Mar 522.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 522.4

    “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான்” - சங்கீதம் 91:1.Mar 522.5