Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
மாரநாதா! (இயேசு வருகிறார்!) - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஒய்வுநாளை ஆசரிப்பவர்களுக்கே பரிசுத்தமாகும் நிலை!, ஆகஸ்டு 18

    “ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; …ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே…யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.” - யாத்திராகமம் 20:8-10.Mar 459.1

    தேவன் தம்முடைய வார்த்தையிலே ஏழாம் நாளானது தமக்கும் தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்குமிடையே ஒரு அடையாளமாக-அதாவது அவர்களுடைய பற்றுறுதிக்கு அடையாளமாக-இருக்கிறது என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்.Mar 459.2

    ஏழாம் நாள், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட நாள். இந்த நாளானது, சபையின் குருவானவராலோ, நாட்டின் ஆளுநராலோ புதிய மாதிரியாக அமைக்கப்படவேண்டு மென்று விட்டுவிடப்படவில்லை. மானிடத் தீர்மானத்திற்கு விட்டுவிடப்படக்கூடாத அளவிற்கு அது மிகவும் அதிக முக்கியத்துவம்வாய்ந்த ஒரு நாளாகும். மனிதர் தங்களது சொந்த வசதியை ஆராய்ந்து, மிகச் சிறப்பானமுறையில் தங்களது மனச்சாட்சிக்கு ஏற்றபடி, தெய்வீக அதிகாரத்தைப் பெற்றிராத ஒரு நாளை, தெரிந்துகொள்வார்கள் என்பதை தேவன் கண்டார். ஏழாம் நாள் ஆண்டவருடைய ஓய்வுநாள் என்பதை மிகவும் தெளிவாகக் கூறியிருக்கிறார்.Mar 459.3

    தேவனுக்குச் சொந்தமான இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும், அவரது அரசாங்கத்தின் சட்டங்களுக்கடியில் இருக்கிறான். பத்துக்கட்டளைகளுக்கு மத்தியிலே தேவன் ஏழாம் நாள் ஓய்வுநாளை வைத்திருக்கிறார். கீழ்ப்படிதலிற்கான கட்டளை விதியாக அதை வைத்தார். அதின்மூலமாக, அவருடைய கிரியைகளிலும் அவரது வார்த்தையிலும் வெளிப்படையாகத் தெரிகின்ற, அவரது வல்லமையைப்பற்றி நாம் கற்றுக்கொள்ளலாம்.Mar 459.4

    பரிசுத்தத்தின் ஒரு சிறிய ஆதாரத்தையும் பெற்றிராத நாளைத் தாங்கி நிறுத்தி, அந்த நாளில் நாங்கள் அவரைத் தொழுதுகொள்ளு கிறோம் என்று கூறுவதைவிட, வேறு எந்தவிதத்திலும் தேவனுடைய ஊழியத்திற்கும், அவரது பிரமாணத்திற்கும் மிகவும் தீர்மானமான விதத்தில், அவரை எதிர்த்த நிலையில், மனிதர் தங்களை வைத்துக்கொள்ளமுடியாது, அவர்கள் தேவனுடைய பரிசுத்தமான ஓய்வுநாளிற்குப் பதிலாக, இந்தப் போலியான ஓய்வுநாளை ஆசரிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி, மெய்யான ஓய்வுநாளிற்கும் மேலாக, போலியான ஓய்வுநாளைக் கனப்படுத்தி, இவ்வாறு பிரமாணத்தைக் தரம் தாழ்த்தி, தேவனுக்கும் மேலாகத் தங்களை உயர்த்துகிறார்கள்.Mar 459.5

    ஒரு பொய்யான ஓய்வுநாளிற்காக, தேவனுடைய பரிசுத்த இளைப்பாறுதலின் நாளைப் புறக்கணித்து, தங்களைக் கிறிஸ்தவர்கள் என்ற பெயரால் அழைத்துக் கொள்பவர்களால், பரிசுத்தமாகுதல் உரிமை கோரப்படுகிறது. அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரை மதிக்கிறவர்களுக்கு மாத்திரமே அவரிடமிருந்து வரும் பரிசுத்தமாகுதல் வழங்கப்படுகிறது. தொடர்ந்து மீறுதலில் நீடித்திருப்பதால், உரிமைகொண்டாடப்படும் பரிசுத்தமாகுதலானது, ஒரு போலியான பரிசுத்தமாகுதலேயாகும். இவ்வாறு மார்க்க உலகமானது, தேவனுக்கும் மனிதனுக்கும் எதிராளியான சாத்தானால் வஞ்சிக்கப்படுகிறது.Mar 460.1

    மனிதர் அநேகக் கண்டுபிடிப்புகளை நாடியிருக்கிறார்கள். தேவன் கொடுக்கும் பரிசுத்தத்தினால் சிறப்பிக்கப்படாத எந்த பரிசுத்த தனிச்சிறப்புரிமைகளாலும் அணிசெய்யப்படாத-ஒரு சாதாரண நாளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை ஒரு பரிசுத்த நாளென்று உறுதியாகக் கூறியறிவித்திருக்கிறார்கள்; ஆனால், இந்தச் சொல்லானது, பரிசுத்தமாகுதலின் ஒரு சாயலைக்கூட கொடுக்கவில்லை. “கர்த்தர் இப்படிச் சொல்லுகிறார்” என்று அதிகாரத்தை பெற்றிராத மானிட அமைப்புகளையும் ஏற்றுக்கொண்டு, கிறிஸ்தவ ஓய்வுநாளென்று கூறி, உலகத்திற்கு முன்வைத்து, தேவனை அவமதிக்கிறார்கள்.⋆Mar 460.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 460.3

    “…என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்…” - 1சாமுவேல் 2:30.Mar 460.4