Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய வீட்டில் ஜெப நிலை

    ஆராதனை ஸ்தலத்தில் உட்பிரவேசிக்கும்போது, ஆராதிப்போர் தகுதியுடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் இடத்திற்கு அமைதியுடன் சென்று அமர வேண்டும். குளிரினிமித்தம் ஆலயத்தில் கணப்புச் சட்டி இருந்தால் அதனண்டை கவலையற்ற, மந்தமான நிலையில் நெருங்கி உட்காருவது தகுதியல்ல. பேசுவது, காதுக்குள் ஓதுவது, நகைப்பது யாவும் ஆராதனைக்கு முன்பாவது, ஆராதனை முடிவடைந்த பின்பாவது அனுமதிக்கப்படலாகாது. ஆராதிப் போரிடம் அனலுள்ள பக்தி காணப்பட வேண்டும்.CCh 215.1

    சிலர் கூட்டம் ஆரம்பமாதற்கு முன்னால், சில நிமிடங்கள் காத்திருக்க நேருமானால், அமைதியாக தியானம் செய்த வண்ணம், தங்களுக்கு பிரசங்கங்கள் விசேஷித்த பயன் தருமாறு, மற்ற ஆத்துமாக்கள் பாவ உணர்ச்சி அடையவும் மனந்திரும்பவும், பிரார்த்தனைச் செய்வதால், மெய் பக்தியைக் காத்துக்கொள்ளலாம். தேவ வீட்டில் பரலோக தூதர்கள் இருப்பதை நினைவில்கொள்ள வேண்டும். நம்முடைய அமைதியின்னையினாலும், ஜெப சிந்தையைத் தூண்டாமலிருப்பதினாலும், அனைவருக்கும் தேவனோடு ஏற்படும் அந்நியோன்னிய ஐக்கியத்தை இழந்து விடுகிறோம். நமது ஆவிக்குரிய நிலை அடிக்கடி சீர்தூக்கிப்பார்க்கப்பட்டு, மனமும் இருதயமும் நீதியின் சூரியனால் இழுக்கப்பட வேண்டும்.CCh 215.2

    சபையார் தேவனுடைய ஆலயத்தில் கூடிவரும்போது, கர்த்தருக்கான மெய் பக்தியுடன் தாங்கள் தேவ சமுகத்தில் இருப்பதை உணர்ந்தால், அவர்கள் அமைதியே இனிய தேவ வல்லமையை உணர்த்தும். தொழில் ஸ்தலத்தில் பாவமற்றதாகவிருக்கும் நகைப்பு, பேச்சு கடவுளை ஆராதிக்கும் ஸ்தலத்தில் அனுமதிக்கப்படக்கூடாது. தேவ வசனமானது தன் முழு பலத்துடன், ஏற்ற விதமாகவும் இருதயத்தில் கிரியை செய்வதற்கு இருதயம் ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்.CCh 215.3

    கண்ணியமும் பக்தி வினயமுமான நடையுடன் போதகர் உட்பிரவேசிக்க வேண்டும். பிரசங்கமேடையை அடைந்தவுடன் அவர் முழந்தாள்படியிட்டு பணிவுடன் தேவ உதவிக்காக அமைதியாக ஜெபிக்க வேண்டும். அது எவ்வளவு சிறந்த விதமாக கூடியிருப்போர் மனதில் பதியும்! பயபக்தி சபையார் மேல் தங்கும். அவர்களுடைய போதகர் கடவுளுடன் உறவாடுகின்றார். சபை முன் நிற்கும் முன்பாக, தன்னைத் தேவனிடம் ஒப்படைக்கிறார். அனைவர் மேலும் பயபக்தி அமரும், தேவ தூதர்கள் நெருங்கிச் சேருகின்றனர். கூட்டத்தைத் தேவ பிரசன்னத்தால் வல்லமை அருளவும் சபையார் அமைதியாக தலை குனிந்து போதகரோடு சேர்ந்து ஜெபிக்க வேண்டும். 5 T. 491-493.CCh 216.1

    கான்பரன்ஸ் கூட்டமும், ஜெபக் கூட்டமும் சலிப்புண்டாக்கக் கூடாது. குறித்த நேரத்தில் அனைவரும் கூட வேண்டும். கால் மணி அல்லது அரை மணி நேரம் பிந்திவரும் வழக்கம் உடையோருக்காக காத்திருக்கக்கூடாது. இருவர் கூடியிருந்தாலும் கடவுளின் வாக்கு அவர்களுக்குரியது. கொஞ்சப் பேர் அல்லது அதிகமான பேர் கூடினாலும், கூடுமானால் குறித்த நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும். 2 T.577-578.CCh 216.2