Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-18

    ஆள் தத்துவமுடைய தெய்வத்தில் விசுவாசம்

    முடிவான தீர்ப்பு நாளிலே தெய்வம் நம் ஒவ்வொருவரையும், பெயர் வரிசையாக அறிந்திருந்தார் என்பது வெளியாகும். காணாப்படாத சாட்சியாகிய ஒருவர் வாழ்வின் ஒவ்வொரு கிரியையையும் கவனித்து வருகிறார். உன் கிரியைகளை அறிவேன் என்று ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் கூறுகின்றார். (வெளி:2:1) தங்கள் கோணலான வழிகளில் அலைந்து திரிந்து கொண்டிருந்தவர்களைத் தேடி, அவர்களைப் பத்திரமும் சமாதானமுமான பாதைகளில் கொண்டு வந்து சேர்க்க, நல்ல மேய்ப்பன் எவ்விடையறா முயற்சி செய்தாரென்றும், அளிக்கப்பட்ட எத்தருணங்கள் அசட்டை செய்யப்பட்டனவென்றும் அறியப்பட்டிருக்கிறது. சுகபோகப் பிரியரைக் கர்த்தர் திரும்ப திரும்ப அழைத்திருக்கின்றார். அவர்கள் தங்களுடைய அபாயத்தை அறிந்துணர்ந்து தப்புமாறு அவர்களுடைய பாதையில் மீண்டும் மீண்டும் தமது திருவசனமாகிய தீபத்தை பிரகாசிக்கச் செய்திருக்கின்றார். ஆயினும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அனுக்கிரக காலம் முடிகிற வரைக்கும் அவர்கள் பரியாசம் பண்ணிக்கொண்டு பகடிப் பேச்சுடனே விசாலமான பாதையின் முடிவை நெருங்குகின்றனர். கடவுளுடைய வழிகள் நீதியும் நியாயமுமானவை; குறைவு உடையவர்மீது நியாயத்தீர்ப்பு கூறப்படும்பொழுது எல்லா வாய்களும் அடைக்கப்படும். 5T. 435.CCh 256.1

    சில விஞ்ஞானிகள் கூறுவது போல இயற்கையின் மூலமாக வெளிப்படுவதும் சர்வத்தையும் தாங்குவதுமாகிய வல் லமை எங்கும் வியாபித்து கிரியை நடப்பிக்கும் வெறும் சக்தி மட்டுமன்று. தேவன் ஆவியாயிருக்கிறார், ஆயினும் அவர் ஆள் தத்துவமுடையவர் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய சாயலிலே மனிதன் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான்.CCh 256.2

    கடவுளுடைய கரத்தின் கிரியைகளை இயற்கை வெளிப்படுத்தினாலும், அவ்வியற்கை தெய்வமல்ல. இயற்கை கடவுளுடைய குணத்தை வெளிப்படுத்துகிறது. கடவுளுடைய அன்பையும், வல்லமையையும், மகிமையையும் அவற்றின் மூலமாக அறியலாம். என்ற போதிலும், இயற்கையைத் தெய்வமாக நாம் கருதுவது கூடாது. மனிதர் தங்கள் கலைத்திறனால் அழகிய வேலைப்படுகளைப் பிறப்பிக்கின்றனர். பார்ப்பதற்கு இன்ப மூட்டும் இவ் வேலைப்பாடுகள் கலைஞனை ஓரளவிற்கு நமக்கு அறிமுகப் படுத்துகின்றன. ஆயினும், அவ் வேலைப்பாடுகள் கலைஞன் ஆகமாட்டா. அவ் வேலைப்பாடுகளுக்கு அல்ல, அவ் வேலைப்பாடுகளின் சிற்பிகே நாம் கனமளிக்கின்றோம். அதுபோலவே, இயற்கையானது கடவுளுடைய சிந்தையின் வெளிப்பாடு. இயற்கையையல்ல, அவ்வியர்கையைச் சிருஷ்டித்தவராகிய தெய்வத்தையே நாம் அந்த மேன்னைக்குரியவராக எண்ண வேண்டும்.CCh 257.1

    ஆள் தத்துவமுடைய தெய்வத்தின் காரணத்துவம் மனித சிருஷ்டிப்பில் வெளியாகியது. கடவுள் தமது சாயலாக மனிதனைச் சிருஷ்டித்தபோது, மனித உடற் பொறிகள்யாவும் அமையப் பெற்று இருந்தன. உடலில் உயிர் தோன்றவில்லை. அப்பொழுது தன்னில் தானே ஜீவனுடையவரும் ஆள் தத்துவமுடையவருமாகிய தெய்வம் அவ்வுடலினுள் ஜுவ சுவாசத்தை ஊதினார். அப்பொழுது மனிதன் ஜீவனும், சுவாசமும், அறிவுமுடையவனானான். உடலுறுப்புகள் அனைத்தும் இயங்க்வாரம்பித்தன். இருதயம், இரத்த நாடிகள், நாளங்கள், நாவு, கைகள், பாதங்கள், புலன்கள், மனதின்கிரகிக்கும் தன்னை யாவும் தங்கள் வேலையை அவ்வவற்றிற் குரிய பிரமாணங்களுக்கேற்ப செய்ய ஆரம்பித்தன. மனிதன் ஜீவாத்துமாவானான். இயேசு கிறிஸ்துவானவர் மூலமாக ஆள் தத்துவமுடைய தேவன் மனிதனை சிருஷ்டித்து அறிவும் சக்தியுமளித்திருக்கின்றார்.CCh 257.2

    நாம் இரகசியமாக உருவாக்கப்பட்டபோது, நமது கரு அவர் கண்ணிற்கு மறைவாக இருக்கவில்லை. நம் அவயவங்கள் இல்லாதபோதே அவைகள் அனைத்தும் அவருடைய புஸ்தகங்களில் எழுதப்பட்டிருந்தன.CCh 258.1

    தாழ்ந்த சிருஷ்டி வர்க்கங்களிலே மனிதன் மேன்மையானவனாக விளங்கினான். அவருடைய சிந்தையும் அவருடைய மகிமையும் அவன் மூலமாக வெளிப்பட வேண்டுமென்பது அவருடைய திட்டம். ஆயினும் மனிதன் கடவுகளுக் கொப்பாக தன்னை உயர்த்திக்கொள்ளக்கூடாது. 8T. 263-273.CCh 258.2