Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சுகாதார சீர்திருத்தங்களை அனுஷ்டித்தல்

    ஆகார சீர்திருத்தத்தில் சரியான பொது அறிவு இருக்கின்றது. இப்பொருள் விசாலமாகவும் ஆழ்ந்தும் கற்கப்பட வேண்டும். எல்லாக் காரியத்திலும் தன்னுடைய பழக்கத்துக்கு ஏற்றவாறு மற்றவர்களுடைய கிரியை இல்லையென எவரும் குறை கூறக்கூடாது. ஒவ்வொருவருடைய வழக்கங்களையும் கட்டுப்படுத்த மாறாத சட்டத்தைப் பிறப்பிப்பது கூடாத காரியம். எல்லாருக்கும் தான் ஒரு முன்மாதிரி என் ஒருவரும் கருதக் கூடாது. எல்லாரும் அதே பண்டங்களைப் புசிக்கமுடியாது. ஒருவருக்குச் சத்துள்ள உருசிகரமான ஆகாரமாயிருப்பது வேறொருவருக்கு உருசியற்றதும், தீங்கை விளைவிக்க கூடியவையுமாயிருக்கலாம். சிலருக்குப் பால் ஒத்துக்கொள்வதில்லை. மற்றவர்களுக்கு அது நன்றாய் ஒத்துக் கொள்ளும். சிலருக்குப் பயறு, மொச்சை ஜீரணமாகியதில்லை; மற்றவர்கள் அவைகளைச் சத்துள்ள ஆகாரமாகக் காண்கின்றனர். சிலருக்கு முரட்டு ரகமான தானியத்தில் ஆயத்தம் செய்த உணவு நல்லது; மற்றவர்கள் அவைகளை உபயோகிக்க முடியாது. MH 319, 320.CCh 583.2

    எங்கே ஆகாரத்தில் தவறான வழக்கங்கள் பேணப்படுகின்றனவோ, அங்கே சீர்திருத்தம் செய்யத் தாமதிக்கக் கூடாது. இரைப்பையின் துர்பிரயோகத்தினால் அஜீரணம் உண்டாகும்போது. மிதமிஞ்சிய உழைப்பினால் ஏற்படும் பாரத்தை நீக்கி, மிஞ்சிய பலத்தின் ஜீவ சக்திகயைப் பாதுகாக்க கவலையோடு முயல வேண்டும். நீண்ட கால துர்ப் பிரயோகத்துக்குபின் இரைப்பை பூரண சுகமடையாமலிருக்கலாம்; ஆனால் சரியான திட்ட மிட்ட ஆகாரம் மேலும் ஏற்படக்கூடிய பெலவீனத்திலிருந்து பாதுகாக்கும்; அனேகருக்கு ஏறத்தாழ பூரண சுகம் கிடைக்கலாம்.CCh 584.1

    மூளையை உபயோகிக்கும் வேலையைச் செய்யும் வழக்கமுடையவர்களைப் போல், சரீர உழைப்பில் ஈடுபட்டிருக்கும் திடகாத்திரமான மனிதர் தங்கள் உணவின் தன்மையையும், அல்லது அளவையும் பற்றிக் கவலை எடுக்க வற்புறுத்தப்படுவதில்லை; ஆனால், இவர்கள் கூட புசிப்பிலும் குடிப்பிலும் தன்னடக்கத்தை அப்பியாசிப்பார்களாகில், அவர்களுக்கு முன்னிலும் நற்சுகம் இருக்கும்.CCh 584.2

    சிலர் தங்கள் ஆகார விஷயத்தில் ஒரு திட்டமான கட்டளை தரப்பட வேண்டுமென விரும்புகிறார்கள். ஒருவருக்காக மற்றொருவர் திட்டமான கட்டளையை விதிக்க முடியாது. ஒவ்வொருவரும் தன்னடக்கத்தையும், பகுத்தறிவையும் உபயோகித்து, ஒழுங்கின்படி நடக்க வேண்டும். MH 308, 310.CCh 584.3

    ஆகார சீர்திருத்தம் மென்மேலும் விருத்தியடைய வேண்டும். மிருகங்கள், பட்சிகளிடம் வியாதி பெருகிக்கொண்டு வருகின்றமையால் பால், முட்டைகள் உபயோகிப்பது அதிகமதிகமாக ஆபத்தாகும். அவைகளுக்குப் பதிலாக விலை மலி வான சுகத்தை தரும் மற்ற பொருள்களைக் கொடுக்கப் பிரயத்தனம் செய்ய வேண்டும். எங்கும் உள்ள மக்க கூடுமான வரை, பால், முட்டைகளன்றி, உருசிகரமான சத்துள்ள ஆகாரத்தைச் சமைக்கக் கற்பிக்கப்பட வேண்டும்.CCh 584.4

    சரீரம் அலட்சியம் செய்யப்படும் போது கடவுள் கனம் பண்ணப்படுவதில்லை; அவருடைய ஊழியத்துக்கும் தகுதியல்ல. சரீரத்தைப் பேணி, பலனும் உருசிகரமுமான ஆகாரத்தை அதற்கு அளிப்பதே ஒரு வீட்டு எஜமானின் முதற் கடமையாகும். உணவுப் பொருள்களை மிச்சம் பிடிப்பதை விட விலை குறைந்த தட்டுமுட்டுச் சாமான்களும் உடையும் வைத்திருப்பது மிகவும் நல்லது.CCh 585.1

    சில வீட்டெஜமானகள் விருந்தாளிகளை நன்றாய் உபசரிக்கும்படி குடும்பத்துக்குச் செல்ல வேண்டிய செலவை மட்டுப்படுத்துகின்றனர். இது ஞானமற்ற காரியமாகும். விருந்தாளிகளை உபசரிப்பது முகவும் சாதாரண முறையில் இருக்க வேண்டும். முதலாவது குடும்பத்துக்கு வேண்டிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.CCh 585.2

    உபசரிப்பு ஆசீர்வாதமாகவும் தேவையாகவுமிருக்கும் இடத்திலே அது அப்பியசிக்கப்படாதபடி ஞானமற்ற சிக்கனமும், செயற்கைப் பழக்கங்களும் தடுக்கின்றன. எதிர்பாராத விருந்தாளிகள் வந்தால் மனைவி மீண்டும் ஆகாரம் ஆயத்தம் செய்யும் சிரமம் இராதபடிக்கு, மேஜையில் போதுமான உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும். உன் ஆகாரத்தை அக்கரையோடு கவனி. காரணத்தையும் அதனால் உண்டாகும் பயனையும் கண்டுபிடி. பசியைப் பகுத்தறிவுக்குக் கீழ்ப்படுத்து. ஒரு போதும் மிதமிஞ்சி உண்டு, வயிற்றைக் கெடுக்காதே, ஆயினும் சுகத்துக்கேற்ற, உருசிகரமான சத்துள்ள உணவை உட்கொள்ளாமலும் இராதே.CCh 585.3

    சுகாதார விதிகளை அறிந்தவர்களும், இலட்சியங்களைப் பேணுகிறவர்களும், மிதமிஞ்சி உண்ணுவதும் குறைந்து உண்ணுவதுமாகிய இரண்டையும் தவிர்த்து, போஜனப் பிரியத்தைத் திருப்தி செய்வதற்காக அல்ல. சரீர வளர்ச்சிக்காக தங்கள் உணவைத்தெரிந்து கொள்வர். கடவுளுக்கும், மனிதனுக்கும் உன்னத சேவை செய்யும்பை ஒவ்வொரு சக்தியையும் நல்ல நிலையில் பாதுகாக்க வகை தேடுவர். பகுத்தறிவு, மனச்சாட்சி என்பவையின் கீழ் போஜன தேட்டம் காகப்படுவதினால், அவர்கள் மனமும் சரீரமும் ஆரோக்கியம் அடைகின்றன. அவர்கள் தங்கள் கருத்துகளைப் பிறர் மேல் சுமத்தமாட்டார்கள்; சரியான விதிகளுக்கு அவர்களுடைய முன் மாதிரியே ஒரு சாட்சி பகருகிறது. இப்படிப் பட்டவர்கள் நன்மைக் கேதுவாக ஒரு விசாலமான செல்வாக்குடையவர்களாயிருக்கின்றனர். MH 319-323.CCh 585.4

    மற்ற நாட்களைவிஅ ஓய்வு நாளுக்காக அபரிமிதமான அல்லது அனேக வகையான ஆகாரத்தைச் சேகரித்து வைக்கக் கூடாது. இதற்குப் பதிலாக, ஆகாரம் மிக எளியதும், ஆவிக்குரிய கருத்துகாஇ மனது தெளிவாய் கிரகித்துக்கொள்ளும்படி, அளவில் குறைத்தும் சாப்பிடவேண்டும்.CCh 586.1

    ஓய்வு நாளில் சமைப்பதை விலக்க வேண்டும்; ஆயினும், குளிர்ந்த ஆகாரத்தைப் புசிப்பது அவசியமில்லை. குளிர்காலத்தில் முந்தின நாளில் ஆயத்தம் செய்த ஆகாரத்தை வெதுப்பிக்கொள்ளலாம். ஆகாரம் சாதாரணமாயிருப்பினும், உருசிகரமாயும் கவர்ச்சியுள்ளதாயுமிருக்க வேண்டும். விசேஷமாக பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களில் அனுதினமும் இருப்பதைவிட ஓய்வுநாளுக்காக ஒரு விசேஷித்த ஆகாரம் ஆயத்தம் செய்வது நல்லது. MH 307.CCh 586.2