Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரலோக குணத்தைப் பூலோககத்திலேயே அடைதல்

    மோசம் போகாதிருங்கள். தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். பரிசுத்தமே தவிர வேறொன்றும் உங்களைப் பரத்திற்கு ஆயத்தஞ் செய்யாது. மெய்யான அனுபவ பூர்வமான பக்தியே தவிர, வேறொன்றும் தூய்மையும் - மேன்மையுள்ள சுபாவத்தை உங்களுக்கு அளிக்கவும், ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிற தெய்வத்தின் சமுகத்தில் பிரவேப்பதற்கு உறுதுணையாகவும் கூடாது. இவ்வுலகிலேயே பரலோக குணம் அடைந்ததாக வேண்டும். அன்றி அதை நாம் ஒரு போதும் அடைந்து கொள்ளமாட்டோம். அங்ஙனமாகில் உடனே ஆரம்பம் செய். ஊக்கமுள்ள முயற்சி செய்வதற்கு தற்காலத்தைப் பார்க்கிலும் ஏற்ற்தோர் காலம் உனக்குக் கிடைக்குமென்று எண்ணி ஏமாந்துபோகாதே. கடவுளுக் கும், உனக்கும் உள்ள இடைவெளி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேபோகின்றது. இதுவரைக்கும் நீங்கள் கொண்டிராத பிரகாரமான வைராக்கியம் கொண்டு, நித்தியத்திற்காக ஆயத்தம் பண்ணுங்கள். வேதாகமத்தை போதிக்கவும், ஜெபக் கூட்டத்தை வாஞ்சிக்கவும், தியான வேளையில் பிரியங்கொள்ளவும், யாவற்றிற்கும் மேலாக, ஆத்துமா தேவனுடனே உறவாடும் வேளையைச் சினேகிக்கவும், மனதிற்குப் போதைனை செய்யுங்கள். மேலான வாசஸ்தலங்களில் இருக்கும் இசைக் குழுவுடன் நீங்கலும் ஒன்றுபடுவதாயின், பரலோக சிந்தையை அணிந்து கொள்ளுங்கள். 2T 267, 268.CCh 497.2