Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-11

    பரிசுத்தமாக்கப்பட்ட ஜீவியம்

    நம்மிடமுள்ள யாவையும் நம்து இரட்சகர் தமக்கென உரிமை பாராட்டுகிறார்; நமது முதல்தரமான மிகப் பரிசுத்த சிந்தைகளையும், நமது மிகச் சுத்தமும் அதிக ஆர்வமுமுள்ள பாசத்தையும் அவர் கேட்கிறார். நாம் அவருடைய திவ்விய சுபாவத்தில் பங்காளிகளாயிருப் போமாயின், நம் இருதயங்களிலும் உதடுகளிலும் சதா அவர் துதியே இருக்கும். நமக்குள்ள யாவையும் அவருக்குப் படைத்து, சத்திய அறிவிலும், அவருடைய கிருபையிலும் இடையறாது வளர்வதிலேயே நம் பாதுகாப்பு அடங்கியிருக்கிறாது. S. L. 95.CCh 177.1

    வேதங் கூறும் பரிசுத்தமாக்கப்படுதலில் நம் ஆவி, ஆத்துமா, சரீரம் யாவும் அடங்கியிருக்கிறது. முழுப் பிரதிஷ்டையின் மெய்க் கருத்து இதுவே. தெசலோனிக்கேயா சபை இந்த ஆசீர்வாததைப் பெறும்படி பவுல் ஜெபிக்கிறார். சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவ் ஆத்துமா சரீரம் முழுவதும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 1 தெச. 5:23.CCh 177.2

    பரிசுத்தமாக்கப்படுதல் பற்றி உலகில் தப்பறையும் ஆபத்து கரமுமான செல்வாக்குடைய ஒரு கோட்பாடு இருக்கிறது. அனேகர் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகக் கூறி கொண்டாலும், உண்மையான கோட்பாடுகளில்லாதிருக்கிறார்கள். அவர்களுடைய பரிசுத்தம், பேச்சும், சுயசித்த வணக்கமுமாயிருக்கிறது.CCh 177.3

    நியாயம் நிதானத்தை அப்புறப்படுத்தி, ஏதோ ஒரு காலத்தில் தாங்கள் அடைந்த உள்ளக் கிளர்ச்சிகளைக் கொண்டு தாங்கள் பரிசுத்தமாக்கப்பட்டிருப்பதாக பாராட்ட்க்கொள்ளுகிறார்கள். தாங்கள் பரிசுத்தமாக்கப்பட்டதாக பிடிவாதமாகவும் முரட்ட்டாட்டாமாக்வும் வாதாடி, வாய் அலப்புவார்கள். அதற்கேற்ற கனியா காணப்பட மாட்டாது. தங்கள் மாய்மாலங்களினால் இவர்கள் தங்களை மட்டுமல்ல தேவசித்தத்திற்கு இசைவாக நடக்க விரும்பும் அநேகரையும் வழி விலகச் செய்யும் செல்வாக்கை செலுத்துகிறார்கள். தேவன் என்னை நடத்துகிறார்! தேவன் எனக்குக் கற்பிக்கிறார்! பாவமின்றி ஜீவிக்கிறேன் என பல முறை இவர்கள் சொல்வதையும் கேட்கலாம். இப்படிப் பட்டவர்களைச் சந்திப்பவர்கள் தாங்கள் விளங்கிக் கொள்ளக்கூடாத இருண்ட அதிசய ஆவியைக் காண்கிறார்கள். ஆனால் மெய் மாதிரியாகிய கிறிஸ்துவிலிருந்து முற்றும் மாறுபாடானது இது. S. L. 7-10.CCh 177.4

    பரிசுத்தமாக்கப்படுதல் ஒரு தொடர்ந்த வேலை. அதன் படிகளை பேதுரு பின் வருமாறு கூறுகிறார்: இப்படியிர்க்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவ பக்தியையும், தேவ பக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால் உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்க வொட்டாது. (2 பேது. 1:5-8) ஆகையால் சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள். இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய்ம், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும். (வச. 10,11).CCh 178.1

    நாம் விழாதபடி நடக்க ஒரு வழி இங்கே நமக்கு உறுதியாகக் கொடுக்கப்படுகிறது. கிறிஸ்துவ இலட்சணங்களைப் பெருக்க முயலுபவர்களுக்கு ஆவியின் வரங்களைப் பெருக்கும் திட்டம் இங்கு தரப்படுகிறது.CCh 179.1

    பரிசுத்தமாக்கப்படுதல் ஒரு வினாடி, ஒரு மணி நேரம் அல்லது ஒரு நாளில் செய்யப்படும் வேலையல்ல. அது தொடர்ந்து கிருபையில் வளர்வதாகும். மறுநாட் போர் எவ்வளவு பலமாயிருக்குமென ஒரு நாளில் அறிந்து கொள்ள முடியாது. சாத்தான் உயிரோடிருக்கிறான், சுறுசுறுப்பாயிருக்கிறான். எனவே நாம் அவனை எதிர்க்க பலமும் உதவியும் கோரி அனுதினமும் அவரிடம் கதரியழுவது அவசியம். சாத்தான் ஆளும் வரை, தன்னை ஒறுக்கவும், நெருக்கடிகளை மேற்கொள்ளவும் அவசியமுண்டு, தரித்து நிற்க இடம் கிடையாது; முற்றுமாய் அடைந்து விட்டேன் என்று சொல்லிக் கொள்ள குறிக்கப்பட்ட ஓர் இடமில்லை.CCh 179.2

    சதா முன்னேறுவதே கிறிஸ்துவ ஜீவியம். தன் ஜனத்தைச் சுத்திகரிப்பவராக கிறிஸ்து வேலை செய்கிறார். நம் சாயல் அவர்களில் பூரணமாய்ப் பிரதிபிம்பிக்கும்போது அவர்கள் பூரணமும் பரிசுத்தமும் அடைந்து, மறு ரூபம் அடைய ஆயத்தமாயிருக்கிறார்கள். கிறிஸ்துவின் செய்ய வேண்டிய பெரிய வேலையுண்டு. தேவனுக்குப் பயந்து, பரிசுத்ததில் பூரணமடையும்படி நாம் நம் மாம்ச, ஆவிக்குரிய கறைகளிலிருந்து நம்மை சுத்திகரித்துக் கொள்ளும்படி புத்தி புகட்டப்படுகிறோம். அப் பெரிய வேலை எங்கே இருக்கிறதென்பதை இங்கே காண்கிறோம். கிறிஸ்தவனுக்கு ஒரு இடையுறா வேலையிருக்கிறது. கொடிகள் கனி தரும்படி தாய்ச் செடியிலிருந்து ஜீவனும் சத்தும் பெற வேண்டும். 1 T. 340.CCh 179.3

    அவருடைய கட்டளையில் ஒன்றையாவது காலின் கீழ் மிதிப்பதினால் கடவுள் தங்களை மன்னித்து ஆசீர்வதிப்பாரென எவரும் தங்களை வஞ்சித்துக்கொள்ள வேண்டாட். துணிகரமாய்ச் செய்யும் எப்பாவமும் பரிசுத்த ஆவியின் மெல்லிய குரலை யடக்கி, ஆத்துமா தேவனிடமிருந்து பிரிந்து போகச் செய்கிறது. மார்க்க சம்பந்தமான எழுப்புதல்கள் என்னவாயிருப்பினும் சரி, தெய்வீகப் பிரமாணத்தை அசட்டை செய்கிற இருதயத்தில் இயேசு வசிக்க முடியாது. அவரைக் கனம் பண்ணுகிறவர்களை மட்டுமே அவர் கனம் பண்ணுவார். S. L. 92.CCh 179.4

    “சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலுமாய்ப் பரிசுத்தமாக்குவாராக” என்று பவுல் எழுதும்போது, அடையக்கூடாத ஒரு இலக்கை அடையும்படி சகோதரர்களுக்கு புத்தி சொல்லவில்லை; தேவன் கொடுக்கச் சித்தங்கொள்ளாத ஆசீர்வாதங்களுக்காக அவர் ஜெபிக்கவில்லை. கிறிஸ்துவைச் சந்திக்க தகுதியா யிருப்பவர்கள் யாவரும் கறைதிரையற்ற பரிசுத்த குணமுடையோராய் இருக்க வேண்டுமென்பதை அவர் அறிந்திருந்தார். (1 கொரி. 9:22, 27; 1 கொரி. 6:19, 20 வாசிக்கவும்).CCh 180.1

    பலாபலன்களைக் குறித்து கிறிஸ்தவ இலட்சியம் ஆழ்ந்து சிந்தனைப் பண்ணிக் கொண்டிராது. நான் இப்படிச் செய்தால் ஜனங்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்? அல்லது அதைச் செய்தால் என் உலக வாழ்க்கையில் ஷேம லாபங்கள் எப்படியிருக்குமென யோசிக்காது, ஒரே வாஞ்சையாக தேவன் தங்களை என்ன செய்ய சித்தமுடையராயிருக்கிறரென்றும், என்ன செய்தால் அவரை மகிமைப்படுத்தக்கூடுமென்பதே தேவனுடைய பிள்ளைகளின் பேரவாவாயிருக்கும். உலகத்தில் எரிந்து பிரகாசிக்கிற ஒளிகளாயிருக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளைகளின் இருதயங்களையும் ஜீவியத்தையும் அடக்கியாள தெய்வ கிருபையினால் போதிய ஏற்பாடு செய்திருக்கிறார். S. L. 26, 29.CCh 180.2