Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உபதேசம் பெற பவுல் சபைக்கு அனுப்பப்டுதல்

    அனேகர் தங்கள் ஒளிக்கும் அனுபவத்திற்கும் தாங்களே கிறிஸ்துவுக்குப் பொறுப்பாளிகளென எண்ணுகின்றனர். இது தவறென இயேசு தம் உபதேசத்தின் மூலம் கண்டித் திருக்கிறார். ஒரு முக்கிய ஊழியத்திற்குத் தகுதி வாய்ந்தவனும், கிறிஸ்துவால் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமுமான பவுல் அவருடைய சமுகத்தில் நேரடியாகக் கொண்டுவரப் பட்டான், ஆயிலும் அவர் அவனுக்குச் சத்தியத்தை தாமே போதிக்கவில்லை. அவன் போக்கைத் தடுத்து, உணர்த்துகிறார், “ஆண்டவரே நான் எனன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?” என்று அவன் கேட்டபோது, தாமே பதில் கூறாமல், அவனைச் சபைக்கு அனுப்புகிறார். நீ செய்ய வேண்டியதை அவர்கள் எனக்குச் சொல்வார்கள் எனறார். இயேசு பாவிகளின் நேசர். அவருடைய இருதயம் மனுக்குலத்துயரங்களுக்காக இரங்கிக்கொண்டிருக்கிறது. வானம் பூமி யாவிலும் சகல அதிகாரமும் அவருக்குண்டு. ஆனால் தாம் மனி தனுடைய க்ஷேமத்திற்கென நியமித்த சபையைக் கனப்படுத்துகிறார். சவுலை அவர் சபைக்கு அனுப்பினதின் மூலம் சபையை உலகத்திற்கு ஒளியாக தாம் ஏற்படுத்திய அதிகாரத்தைத் தாமே அங்கீகரிக்கிறார். இது உலகில் கிறிஸ்துவின் இணைப்பான அவருடைய சரீரமாயிருக்கிறது. எனவே அவருடைய நியமங்கள் மதிக்கப்பட வேண்டும். சவுல் சரித்திரத்தில் அனனியா கிறிஸ்துவையும் அவர் நியமித்த அவருடைய ஊழியர்களையும் காட்டுகிறான்.CCh 199.1

    பவுலுடைய மனத்திரும்புதல் மூலம் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய இலட்சியங்கள் கொடுக்கப்படுகின்றன. உலக மீட்பர், தம் சபை இருக்குமிடத்தில், சபையார் அங்கீகாரமின்றி, தனிப்பட்ட எந்த அனுபவத்தையும், பழக்கத்தையும் அனுமதிப்பதில்லை.CCh 200.1

    நியமிக்கப்பட்டிருக்கும் சபையின் அதிகாரத்தோடும், ஊழியத்தோடும் தேவ குமாரன் தம்மை ஒன்றுபடுத்தி காட்டுகிறார். அவர் ஏற்படுத்திய ஏதுக்கள் மூலம் அவருடைய ஆசீர்வாதங்கள் வரவேண்டும். இவ்விதமாக அவருடைய ஆசீர்வாதங்கள் வரும் வழியோடு மனிதனை இணைக்கிறார். பரிசுத்தவான்களை பக்தி வைராக்கியத்தினார் துன்பப்படுத்திய பவுலுக்கு பரிசுத்த ஆவி உணர்த்தியபோது அவனுடைய குரூரச் செயல் பாவமில்லாமல் போய்விடவில்லை. சீஷர்களிடமுருந்து அவன் கற்றுக்கொள்ள வேண்டிவனாயிருந்தான். 3T. 432,433.CCh 200.2

    சபையார் யாவரும் தேவ குமாரரும் குமாரத்திகளுமாயிருந்தால், உலகத்திற்கு அவர்கள் ஒளியாக விளங்கு முன் ஒழுங்குப் பயிற்சி பெற்றாக வேண்டும். ஒளிக்கு ஆதாரமாயிருப்பவரோடு இணைக்கப்படுவதற்கு முயற்சி எடுக்காமல் இருளிலிருக்கும் எந்த ஆணையும் பெண்ணையும் தேவன் ஒளியின் ஏதுக்கள் ஆக்கமாட்டார். தங்கள் சொந்தத் தேவையை உணர்ந்து, ஆழ்ந்த யோசனையுடன் விழித்தெழுந்து ஊக்கமாக விடாமுயற்சியுடன் ஜெபத்திலும் செயலிலும் தரித்திருப்போருக்கு தெய்வீக உதவி கிடைக்கும். ஒவ்வொரு வரும் கற்றுக்கொள்வதில் அதிகமானவற்றை மறக்கவும், அதிகமானவற்றை அறிந்துகொள்ளவும் வேண்டியதாகும். பழைய வழக்க பழக்கங்கள் விட்டுவிடப்பட வேண்டும். தேவக் கிருபையால் இத்தவறுகளைக் களையப் பெரும் போர்புரிந்து, சத்தியத்தையும் அதன் இலட்சியங்களையும் முழுவதும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே வெற்றி அடையலாம். 4T. 485, 486.CCh 200.3