Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்துப் போடாதேயுங்கள்

    இந்தக் கடைசி காலத்தில் இளவயதினரின் மனதைத் தன் வசமாக்குவதற்கு நினைவுகளைச் சீர்கேடுள்ளதாக்கி மோமத்தை எழுப்புவது சாத்தானின் விசேஷித்த வேலை. அவ்வாறு செய்வதால் அசுத்தமான செய்கைக்கு வழி நட்த்தலாமென்றும், மனதின் பெருந்தன்மையான குன்ங்கள் கீழ்ப்படுத்தப்படுமென்றும் தன்னுடைய சுய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற விதமாக அவற்றை ஆண்டு நட்த்தலாமென்றும் அவன் அறிவான். CC 440.CCh 628.1

    சன்மார்க்கம் தணிந்து வருகின்ற இக்காலத்தில் தங்கள் குணத்தை உருவாக்குகின்ற இளவயதினருக்காக என் ஆத்துமா துக்கமடைகின்றது. அவர்களுடைய பெற்றோர்களுக்காகவும் நான் நடுக்கமடைகின்றேன். ஏனெனில் பொதுவாக்க் கூறுமிட்த்து, தங்கள் பிள்ளைகள் நடக்க வேண்டிய வழியில் அவர்களை நட்த்துவதற்குரிய தங்கள் கடமைகளை அவர்கள் அறியாதிருக்கின்றனர். வழக்கத்தையும் மோஸ்தரையும் குறித்து அடிக்கடி யோசனை செய்கின்றார்கள். பிள்ளைகள் இவற்றால் அலைக்கழிக்கப்பட்டு சீர்கேடடைகின்றார்கள். அவர்களைப் போற்றி வளர்க்கும் பெற்றோர் உணர்வற்றும் பிள்ளைகளுடைய ஆபத்தை அறியாதபடி நித்திரையிலும் ஆழ்ந்துள்ளனர். இளவயதினரில் சிலரே சீர்கேடான பழக்கங்களிலிருந்து நீங்கலாகி இருக்கின்றனர். அவர்கள் அதிகப்படியாக வேலை செய்வார்கலென்று பெற்றோர் பயந்து, சரீர உழைப்பின்றி வாழ பெரும்பாலும் அவர்களை அனுமதித்து வருகிறார்கள். பிள்ளைகள் சுமக்க வேண்டிய பாரங்களைப் பெற்றோர் தாமே சுமக்கின்றனர்.CCh 629.1

    அதிகப்படியாக வேலை செய்வது நல்லதல்ல. ஆனால் அவ்வாறு செய்வதைப் பார்க்கிலும் சோம்பேறித்தனத்தைக் குறித்தே நாம் அச்சமுடையவர்களாக இருக்க வேண்டும். சீர்கேடான பழக்கங்களில் ஈடுபடுவதற்கு சோம்பல்தனம் வழிநடத்துகிறது. சுய புணர்ச்சி போன்ற உடலை அழிக்கும் பழக்கத்தினால் களைப்பும் சோர்பும் உண்டாவது போல, ஐந்தில் ஒரு பங்கு சோர்பும் களைப்பும் உழைப்பினால் உண்டாகாது. பெற்றோரே, எளிய கிரமமான உழைப்பினால் உங்கள் பிள்ளைகள் சோர்ந்து போவார்களெனில், இவ்வுழைப்பையன்றி, வேறு ஏதோ ஒன்று அவர்களுடைய நரம்புகளின் சக்திகளை அழித்து, அடிக்கடி சோர்பை உண்டு பண்ணுகிறது என்று அறியுங்கள். நரம்புகளையும் தசைகளையும் அப்பி யாசிக்கக்கூடிய முறையில் இருக்கும் சரீர உழைப்பைப் பிள்ளைகளுக்கு அளியுங்கள். அத்தகைய உழைப்பினால் உண் டாகும் சோர்வு அவர்கள் தீய பழக்கங்களில் ஈடுபடுவதற்கு இருக்கும் மனச்சார்பை குறைக்கும். 2T 348,349.CCh 629.2

    அசுத்த நினைவுகளை உண்டு பண்ணுவதான வாசிப்பையும், பார்வையையும் தவிர்த்து விடுங்கள். சன்மார்க்க மனோ சக்திகளை விருத்தி செய்யுங்கள். 2T 410.CCh 630.1

    உங்களுடைய எண்ணங்களை மாத்திரமல்ல, இச்சைகளையும், பாசங்களையும் அடக்கு ஆளுமாறு தெய்வம் எதிர் பார்க்கின்றார். உங்களுடைய இரட்சிப்பு இக்காரியங்களில் நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்தி ஆளுவதைச் சார்ந்திருக்கிறது. இச்சையும் பாசமும் வல்லமையுள்ள ஏதுகரங்கள். அவற்றை தவறாக உபயோகித்தால், தவறான நோக்கங்களுடனே அவற்றை நடப்பித்தால், தவறான இடத்தில் அவற்றை வைத்தால், அவை உங்களை நாசஞ்செய்து கடவுளும் நம்பிக்கையும் அற்றதோர் நிர்ப்பந்தமான வாழ்வை உங்களுக்கு அளிக்கும். நீங்கள் வீணான மனக்காட்சிகளில் ஈடுபட்டு, அசுத்தமானவற்றின் மீது உங்கள் மனது சதா சிந்தனையாயிருக்க அனுமதித்தால், அந்தச் சிந்தனைகள் செயல்படுத்தப்பட்டது போலவே எண்ணப் பெற்று கடவுள் முன்பாக குற்றவாளி என்று தீர்க்கப்படுவீர்கள். சந்தர்ப்பம் தடை செய்யாதிருந்தால், இச்சிந்தனைகள் செயல்படுத்தப்பட்டிருக்கும். பகற்கனவும், இராக்கனவும் காண்பதும் மனக் கோட்டை கட்டுவதும் மோசமானதும் மிகுந்த ஆபத்தைக் கொண்டு வருவதுமான பழக்கவழக்கங்களுமாகும். அப்பழக்கங்கள் ஒரு முறை உறுதிப்பட்ட பின்பு, அவற்றை நீக்குவதும், சுத்தமும் தூய்மையும் உயர்வுமுடையதான பொருட்களின் மேல் சிந்தனையை ச்லுத்துமாறு செய்வதும் அனேகமாக கைகூடாத காரியமே. உங்கள் மனதை நீங்கள் அடக்கி ஆண்டு, வீணானதும் சீர்கேடானதுமான சிந்தனைகள் உங்கள் ஆத்துமாவைக் கறைப்படுத்துவதைத் தவிர்க்க விரும்பினால், உங்கள் கண்கள், காதுகள், மற்றும் புலன்கள் அனைத்திலும் நீங்கள் உண்மையானதோர் காவலாளி யாக இருத்தல் வேண்டும். இத்தகைய விரும்பப்படத்தக்கதான கிரியையை கிருபையின் வல்லமை மாத்திரமே செய்து நிறைவேற்றக்கூடும். 2T 561.CCh 630.2

    மிதமிஞ்சின படிப்பு மூளைக்குப் போகும் இரத்தத்தை அதிகரிக்கச் செய்து, இயற்கையோடு இசைவில்லாத கிளர்ச்சித் தன்மையை உருவாக்கி, தன்னை ஆண்டு கொள்ளும் சக்தியைக் குறுகச் செய்து, மனவெழுச்சியையும் ஏனென்று அறிய முடியாத நடத்தையையும் தோற்றுவிக்கின்றது. இவ்வாறு, அசுத்தத்தில் நாட்டம் ஏற்படுவதற்கு வழி திறக்கின்றது. உலகிலெங்கும் பரவியிருக்கும் சீர்கேடானதன்மைக்கு உடல் சக்திகளைத் தவறாக உபயோகிப்பதும், அவற்றை உபயோகிக்காமலே இருந்து விடுவதும் பெருங்காரணங்களாகும். “கர்வம், ஆகரத்திரட்சி சாங்கோபாங்கான நிர்விசாரம்” ஆகியவை அக்காலத்திலுள்ள கோதோமை அழிப்பதற்கு வழி நடத்தியது போலவே, இந்தச் சந்ததிக்கும் சாவுக்கேதுவான சத்துருக்கனாயிருக்கின்றன. Ed 209.CCh 631.1

    கீழ்த்தரமான இச்சைகளில் ஈடுபட்டிருப்பதால் தாங்கள் விடவேண்டியதான பாவங்களை விட அனேகர் பயந்து, வெளிச்சத்தை ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் கண்களை மூடிக் கொள்ளுமாறு வழி நடத்தப்படுகிறார்கள். விரும்பினால் அனைவரும் காணலாம். வெளிச்சத்தைப் பார்க்கிலும் இருளையே அவர்கள் தெரிந்து கொண்டால் அவர்களுடைய குற்றம் குறைவுடையதாகிவிடாது. 2T 352.CCh 631.2

    கடவுளுடைய பிரமாணத்தைக் கனவீனம் செய்வதையோ அன்றி மீறுவதையோ விட மரணத்தைத் தெரிந்து கொள்வது கிறிஸ்தவர் ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்க வேண்டும். சீர்திருத்தக்காரர் என்று பெயர் பெற்று விளங்கி, கடவுளுடைய திருவசனத்தி பக்திவினயமும் சுத்தகரிப்பும் அருளுவதுமான சத்திய பொக்கிஷத்தை உடையவர்களாகிய நாம் நம்முடைய நடத்தையின் இலக்கை இப்பொழுது இருப்பதைப் பார்க்கிலும் அதிகமாக உயர்த்த வேண்டும். வேறு பலர் தீட்டுப்படாதபடி சபைக்குள் இருக்கும் பாவிகளையும் உடனுக்குடனே கண்டித்துத் திருத்த வேண்டும். பாளயத்தில் இருக்கும் ஆகான்களை அகற்றி, பாளயத்தைசு சுத்திகரிக்க நாம் திருந்திய வேலை செய்ய வேண்டுமென்று சத்தியமும் சுத்தமும் கட்டளையிடுகின்றன. உத்தரவாதமான பொறுப்புகளை வகிக்கிறவர்கள் ஒரு சகோதரனிடத்தில் இருக்கும் பாவத்தைக் கண்டும் காணாதது போல நடந்து கொள்ளாமல் அவன் தன்னுடைய பாவங்களை அகற்ற வேண்டும் அல்லது அவன் சபையிலிருந்து நீங்க வேண்டுமென்பதை அவனுக்குக் காண்பிக்க வேண்டும். 5T 147.CCh 631.3

    சாத்தானின் மிகுந்த சக்தி வாய்ந்த சோதனைகளும் அவர்கள் உண்மையினின்று பிறழ்ந்து விழாதபடிக்குச் செய்யும் அத்தகைய உறுதியுடைய இலட்சியங்களை உடையவர்களாக இளைஞர் வாழ முடியும். மிகுந்த சீர்கேடான செல்வாக்கினால் சூழப்பட்டு, சாமுவேல் குழந்தையாக வளர்ந்தான். அவனுடைய ஆத்துமாவை வருத்திய காரியங்களை அவன் கண்டும் கேட்டும் இருந்தான். பரிசுத்தமான ஊழியத்தை நடப்பித்த ஏலியின் குமாரர் சாத்தானால் ஆளப்பட்டனர். இம்மனிதர் தாங்கள் வாழ்ந்த சுற்றுப்புறத்தைத் தீட்டுப் படுத்தினார்கள். ஸ்திரீகளும் புருஷர்களும் அவ்விடத்தில் ஒவ்வொரு நாளும் பாவத்தினாலும் தப்பிதத்தினாலும் அடிமையாக்கப்பட்டார்கள் என்ற போதிலும் சாமுவேல் கறைப்படாது நடந்து கொண்டான். அவனுடைய குணமாகிய அங்கி கறையற்றிருந்தது. இஸ்ரவேலர் எல்லாரையும் கலங்கடித்த ஏலியின் குமாரருடைய பாவங்களிலே பங்கு கொள்ளாதது, அவர்களுடனே ஐக்கியப்படாமலும் சாமுவேல் தெய்வத்தை நேசித்தான். பரலோகத்துடனே அவன் தன்னுடைய ஆத்துமாவை மிக நெருங்கி தொடர்பு கொள்ளச் செய்திருந்ததால், இஸ்ரவேலைச் சீர்கேடடையச் செய்த ஏலியின் குமாரருடைய பாவங்களைக் குறித்து அவனுடனே பேச ஒரு தேவ தூதன் அனுப்பப்பட்டார். 3T 472-474.CCh 632.1