Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அத்தியாயம் 3

    தேவனைச் சந்திக்க ஆயத்தப்படு

    தேவனுடைய வருகையை நாம் தாமதப்படுத்தலாகாதென்று நான் கண்டேன். ஆயத்தப்படு, ஆயத்தப்படு, பூமியின் மேல் சம்பவிக்கப் போகிறவைகளுக்காக ஆயத்தப்படு. உன் விசுவாசத்திற்கேற்ப உன் கிரியையும் இருக்கட்டும் ----- என்று தூதன் சொன்னான். மனது தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும்; நமது ஜீவியம் தேவனுக்கும் அவரது சத்தியத்திற்கும் சாட்சியாக இருக்க வேண்டுமென்றும் கண்டேன். கவலையீனமாகவும் அசட்டையாகவுமிருந்துகொண்டு, நாம் கர்த்தரைக் கனம் பண்ண முடியாது. நாம் மனம் கலங்கிகொண்டிருந்து, அவரை மகிமைப்படுத்த முடியாது. நாம் நம் சொந்த ஆத்ம ரட்சிப்புக்காகவும், பிறருடைய இரட்சிப்புக்காகவும், அக்கரையோடிருக்க வேண்டும். இரட்சிப்பே பிரதானம்; ஏனையவை யாவும் இரண்டாவதாக கணிக்கப்படவேண்டும்.CCh 81.1

    பரலோக மாட்சிமையை நான் கண்டேன். இயேசுவுக்குக் கனத்தையும் மகிமையையும், துதியையும் செலுத்தும் பரவசப் பாடல்களைத் தூதக்கணங்கள் பாடக்கேட்டேன். அப்பொழுது ஓரளவுக்குத் தேவ குமாரனுடைய அதிசய அன்பை உணர்ந்தேன். அவர் நம்மேல் வைத்த அன்பினால் பரலோகத்தின் சகல மகிமையையும் கனத்தையும் துறந்து, மனிதன் அவர்மேல் குவித்த சகல அவமதிப்பையும் நிந்தையையும் பொறுமையோடு சகித்தார். அவர் அடிக்கப்பட்டு காயப்பட்டு, நொறுக்கப்பட்டார். நாம் அவருடைய இரத்தத்தில் கழுவப்பட்டு, நமக்காக மேலே அவர் ஆயத்தப்படுத்தும் வாசஸ்தலத்தில் வசிக்கும்படி நம்மை உயர்த்தவும், பரலோகத்தின் மகிமை, பிரகாசம் இவைகளை இன்பமுடன் அனுபவித்து, தூதர் பாடலைக் கேட்கவும், நாம் அவர்களுடன் சேர்ந்து பாட வும் ஏதுவாகும்படி கல்வாரி நீசச் சிலுவையில் கிடத்தப்பட்டு, நம்மை மரணத்தினின்று மீட்கும்படி மகா கொடிய கஸ்தி மரணத்தை அவர் அடைந்தார்.CCh 81.2

    பரலோகம் முழுவதும் நம் இரட்சிப்பில் அக்கரை கொண்டிருக்கக் கண்டேன்; நாம் அதைப்பற்றி கவலையற்றிருக்கலாமா? மீட்கப்பட்டாலென்ன மீட்கப்படாவிட்டாலென்ன என்று அற்புதமாக எண்ணலாமா? நமக்காகச் செலுத்தப்பட்ட பலியை நாம் அவமதிக்கலாமா? சிலர் அப்படி அவமதித்திருக்கின்றனர். அருளப்பட்ட கிருபையை அசட்டை செய்து தேவ கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். தேவ ஆவியை எப்பொழுதும் துக்கப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. அவரை நெடுக துக்கப்படுத்தினால் அவர் நம்மை விட்டு விலகிப் போய்விடுவார். மனிதரை இரட்சிக்க கடவுள் செய்ய வேண்டிய யாவையும் செய்தபின், தங்கள் ஜீவியத்தால் இயேசு அருளும் கிருபையை அவமதித்தால் மரணமே அவர்கள் மிகுந்த கிரயங்கொடுத்து வாங்கும் பலன். கிறிஸ்து சிலுவையில் கஸ்திகளை அடைந்து சம்பாதிக்க இரட்சிப்பை அவர்கள் புறக்கணித்தப்படியால், அதே கஸ்திகளை அவர்கள் தங்கள் மரணத்தின்போது அடைய வேண்டும். அம்மரணம் பயங்கரமானது. அப்பொழுது அவர்கள் நித்ய ஜீவனையும் நித்ய சுதந்திரத்தையும் இழந்து விட்டோமென உணருவார்கள். ஆத்துமாக்களை இரட்சிப்பதற்காகச் செய்யப்பட்ட பெருந்தியாகம் அவர்களின் மதிப்பைக் காட்டுகிறது. விலையேறப்பெற்ற அவர்கள் ஆத்துமா ஒரு முறை மீட்கப்படாமற் போனால் அது நித்தயத்திற்கே மீட்கப்படாமற்போனதாகும்.CCh 82.1

    தேவனுடைய ஜனங்கள், விசேஷமாக வாலிபர்கள் நினைவுகளையும் வாஞ்சைகளையும் தராசில் நிறுத்திக்கொண்டிருந்த ஒரு தூதனைக் கண்டேன். தராசின் ஒரு தட்டில் பரலோகத்துக்கடுத்த சிந்தைகளும் வாஞ்சைகளும், மறு தட்டில் லெளகீக சிந்தைகளும் வாஞ்சைகளும் இருந்தன. வீணான கதை நூல்கள் வாசிப்பும், உடைகளுக்கடுத்த ஆடம்பர சிந்தனைகளும், மாயைகளும், அகந்தைகளும் இரண்டாம் தட்டில் வைக்கப்பட்டிருந்தன. ஆ! என்ன பக்தி வினயமான வேளை! உலகத்திற்கு செத்து தேவனுக்காகப் பிழைத்திருப்பவர்களாஅக அறிக்கை பண்ணுகிற தம் ஜனத்தின் சிந்தனைகளை நிறுக்கிறவர்களாக தூதர்கள் தராசுகளுடன் நின்றனர்! லெளகீக எண்ணம், மாய்கை, அகந்தை நிரம்பிய தட்டிலுள்ளவைகள் சரிந்து விழுந்தபோதிலும் அத்தட்டு துரிதமாக கீழே தாழ்ந்தது. பரத்திற்கேதுவான எண்ணங்களையும், நாட்டங்களையும் உடைய தட்டோ, எளிதில் துரிதமாக மேலே உயர்ந்தது. ஆ, அது எவ்வளவு பாரமற்றிருந்தது. இந்த காரியத்தை நான் பார்த்தபடி எடுத்துச் சொல்லக்கூடும். ஆனால் தூதன் தேவ ஜனங்களின் எண்ணங்களையும் வாஞ்சைகளையும் தராசில் நிறுத்தபோது என் மனத்தில் ஏற்பட்ட தெளிவும் பயபக்தியுமுள்ள உணர்ச்சியைச் சரிவர என்னால் சொல்லவே முடியாது. இத்தன்மையானோர் பரலோகத்தில் பிரவேசிக்கக் கூடுமோ, கூடாது, கூடாது ஒரு போதும் கூடாது. அவர்கள் விரைவில் மனந்திரும்பி ரட்சிப்பைச் சுதந்தரித்தாலன்றி, அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை வீண் என்றும் அவர்கள் அழிய வேண்டியதே என்றும் அவர்களுக்குச் சொல்: எனத் தூதன் கூறினான்.CCh 82.2

    தேவ பக்தியின் வேஷம் ஒருவரையும் இரட்சிக்காது. அனைவருக்கும் ஆழ்ந்த உயிருள்ள அனுபவம் இருக்க வேண்டும். இத்தகைய அனுபவமே உபத்திரவ காலத்தில் அவர்களை இரட்சிக்கும். அப்பொழுது அவர்கள் கிரியைகள் எத்தன்மையானதென்று பரீட்சிக்கப்படும். அவை பொன், வெள்ளி விலையேறப்பெற்ற கற்கள் தானா எனச் சோதிக்கப்பட்டபின் அவர்கள் கர்த்தரின் இரகசிய தாபரங்களில் மறைக்கப்படுவார்கள். அவர்களின் வேலைப்பாடு மரம், வைக்கோல், புல் இவைகளால் ஆனதானால் யேகோவாவின் கடும் கோபத்தினின்ரு எதுவும் அவர்களை தற்காக்காது.CCh 83.1

    அநேகர் தங்களைத் தாங்களே அளந்து, மற்றவரின் ஜீவியத்தோடு தங்கள் ஜீவியத்தை ஒப்பிட்டுப் பார்க்கின்றனர் என்று எனக்குக் காண்பிக்கப்பட்டது. அப்படி இருத்த லாகாது. கிறிஸ்து தவிர வேறெவரும் நமக்கு மாதிரியாக இருக்கும்படிக் கொடுக்கப்படவில்லை. அவரே நமது மெய்யான மாதிரி, நாம் ஒவ்வொருவரும் அவரது முன் மாதிரியைப் பின் தொடர முயல வேண்டும். ஒன்று நாம் கிறிஸ்துவின் உடன் ஊழியர் அல்லது சத்துருவின் உடன் ஊழியர். ஒன்று நாம் கிறிஸ்துவோடு சேர்க்கிறவர்கள், அல்லது சிதறடிக்கிறவர்கள். ஒன்று நாம்க் திடசித்தமும், இருதய பூர்வமுமான கிறிஸ்தவர்கள் அல்லது கிறிஸ்தவர்களே அல்ல. நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால், உன்னை என்வாயினின்று வாந்தி பண்ணிப்போடுவேன், (வெளி 3:15,16) என்று கிறிஸ்து கூறுகிறார்.CCh 83.2

    சிலர் தியாகம், தன் மறுப்பு என்றால் என்னவென்றும், சத்தியத்திற்காகப் பாடு அனுபவிப்பது என்றால் என்ன என்றும் அறியாமலிருப்பதை நான் கண்டேன். தியாகம் செய்யாமல் எவரும் பரலோகம் பிரவேசிக்க இயலாது.ல் தன்னை வெறுத்து தியாகம் செய்யும் ஆவி பேணப்பட வேண்டும். சிலர் தங்களையும் தங்கள் சரீரங்களையும் தேவ பலிபீடத்தின் மேல் பலியாகச் செலுத்தவில்லை. அவர்கள் பரபரப்பு, சடுதி கோபம் உள்ளவர்களாகவும், தங்கள் ஆகார இச்சைகளை நிறைவேற்றுபவர்களாகவும், சுய அலுவல்களை கவனித்து கடவுளுடைய காரியத்தை அலட்சியம் செய்கிறவர்களாகவும் இருக்கின்றனர். நித்திய ஜீவனைப்பெற எத்தகைய தியாகவும் செய்ய சித்தம் கொண்டிருப்பவர்களே நித்திய ஜீவனை அடைவார்கள். நித்திய ஜீவனைப்பெற பாடுபடுவதும், சுயத்தைச் சிலுவையிலறைவதும், இருதயத்திலுள எவ்வித விக்கிரகத்தையும் தியாகம் செய்வதும் மிகவும் பொறுத்தமானதே. நித்தியமானதும், அளவிடப்படாததும் மகா மாட்சிமையான அம் மகிமை எல்லாவித உலக காரியங்களையும், இன்பங்களையும், மூடி மறைத்து விடுகிறது. 1 T. pp. 123-126.CCh 84.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents