Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அத்தியாயம்-8

    உக்கிராணத்துவம் பற்றி ஆலோசனைகள்

    தாராளமாய் வழங்கும் ஆவி பரலோக ஆவியாகும். கிறிஸ்துவின் தற்தியாக அன்பு சிலுவையில் வெளிப்படுகிறது. மனிதன் இரட்சிப்புடைய அவர் தமக்கிருந்த யாவையும் அருளி தம்மையும் கொடுத்தார். கிறிஸ்துவின் சிலுவை இரட்சகரை பின்பற்றும் ஒவ்வொருவருக்குள்ளும் உதார குணத்தைத் தூண்டுகிறது. சிலுவையினால் விளக்கப்படுவது ஈகை எனும் நற்பணுபு. நற்கிர்யைகளிலும், மெய்யான உதார குணத்திலும் கிறிஸ்துவ ஜீவியமாகிய கனி காணப்படவேண்டும். உலக சுபாவமோ, வாங்கு, பெறு என்பதாகும்; இவ்வண்ணம் அவர்கள் மகிழ்ச்சியுடையலாமென எதிர் பார்க்கிறார்கள்; ஆனால், அப்படிப்பட்ட சுபாவம் துன்பத்திலும் மரணத்திலும் முடிவடையும்.CCh 140.1

    சிலுவையிலிருந்து வரும் ஒளி தன்னலத்தைக் கடிந்து தயாளத்தையும் உதார குணத்தையும் ஊக்கிறது. கொடுக்கும்படி பல அழைப்புகள் வருவதைப் பற்றி நாம் தமது வருந்தக் கூடாது. தேவன் தமது பாதுகாக்கும் சக்தியினால் ஜனத்தைக் குறுகிய சேவையிலிருந்து பெரும் சேவைக்கு அழைக்கிறார். தீய இருள் உலகைக் கவிந்து கொண்டிருக்கிற இக்காலத்தில் அளவு கடந்த முயற்சி தேவைப்படுகிறது. தேவனுடைய ஜனங்கள் அனேகர் லெளகீக சிந்தையாலும் இச்சைகளாலும் இழக்கப்படும் ஆபத்துகளி லிருக்கிறார்கள். ஆகவே, தேவன் தமது இரக்கத்தினால் அவர்களுடைய பொருளுக்குப் பலவித தெய்வீக திட்டங்களை ஏற்படுத்துகிறார் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தாராளமாய் வழங்கவேண்டியிருக்கும் விஷயங்களைக் குறித்து அவர்களிடம் சொல்ல வேண்டும்; அல்லாவிடில், அவர்கள் நம் பெரிய முன்மாதிரியானவரை பின்பற்ற முடியாது.CCh 140.2

    தமது சீஷர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சக சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்று கூறிய போது, அவருடைய கிருபையின் அறிவை விஸ்தரிக்கும் வேலையை அவர்களுக்கு நியமித்தார். சிலர் பிரசங்கிக்கப் போகையில் வேறு சிலரை அவர் அவர்களுடைய காணிக்கைகளினால் ஆதரிக்கும்படி கேட்கிறார். மனித கரங்களில் செல்வத்தைக் கொடுத்து, தங்கள் உடன் மனிதருடைய இரட்சிப்புக்காக அவர்கள் தாராளமாய் வழங்கும்படி கேட்கிறார். இது மனிதனை அவர் உயர்த்தும் வழிகளில் ஒன்று, மனிதனுக்கு அவசியமானது இதுவே, ஏனெனில் இது அவனுடைய ஆழ்ந்த அனுதாபத்தைக் கிளறி மனதின் உன்னத திறமைகளை உபயோகிக்கச் செய்கிறது. 9T. 254, 255.CCh 141.1

    சரிவரச் செய்யப்படும் உபகாரங்கள் மனிதருடைய மானத சன்மார்க்க சக்திகளை பயன்படச் செய்து, தேவ ஊழியம் முன்னேறவும் பிறருக்கு ஆசீர்வாதமாயிருக்கவுஞ் செய்யும் ஆரோக்கிய செயல்களை உண்டாக்குகிறது. 3T. 401.CCh 141.2

    தேவையிலிருக்கும் ஒரு சகோதரனுக்கு உதவக்கிடைக்கும் தருணம், அல்லது சத்தியத்தை பரப்ப உதவுவது, பரலோகத்தில் பத்திரமாய்க் காக்கும்படி முன் கூட்டி அனுப்பப்படும் முத்துபோலிருக்கிறது. 3T. 249.CCh 141.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents