Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பிள்ளைகளை ஞானஸ்நானத்திற்கு ஆயத்தப்படுத்தல்

    ஞானஸ்நானம் பெற விரும்புகிற பிள்ளைகளின் பெற்றோர் முதலாவது தங்களையே பரிசோதித்து, பின்பு தம் மக்களுக்கு மெய் விசுவாசப் போதனை அளிக்க வேண்டும். ஞானஸ்நானம் மகா தூய்மையும் முக்கியமுமான ஒரு நியமம். ஆதலால் அதன் கருத்தைக் குறித்து முற்றறிவு பெறுதல் அவசியம். பாவத்தை விட்டு மனந்திரும்பிக் கிறிஸ்து இயேசுவுக்குள் புது வாழ்க்கையில் பிரவேசித்தல் அதன் கருத்து. அந்த நியமத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியற்ற ஆத்திரம் உதவாது, பெற்றோர் பிள்ளைகள் இருதரத்தாரும் அதைக் கணக்குப் பார்த்து ஆராய வேண்டும். தம் பிள்ளைகளின் ஞானஸ்நானத்திற்கு சம்மதிப்பதால் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு உண்மையுள்ள உக்கிராணக்காரராக இருக்கவும், அவர்களை நற்குண அமைப்பிற்கு வழி நடத்தவும், தூய முறைமையில் பிணைப்படுகின்றார்கள். அப்பிள்ளைகள் தங்கள் விசுவாச அறிக்கையை அவமதித்துப்போடாதபடி, அந்த ஆட்டுக்குட்டிகளின் மந்தையைச் சிறந்த ஆர்வத்துடன் காப்பதற்கு அவர்கள் பிணைப்படுகின்றார்கள்.CCh 326.2

    பிள்ளைகளுக்கு அவர்கள் சிசுப்பருவ முதலே சமய போதனை அளிக்க வேண்டும். அதுவும் கண்டன சிந்தையுடன் அல்லாமல், அவர்களுக்கு ஊக்கமுண்டாக்கும் இனிய சிந்தனையுடன் அளித்தல் வேண்டும். தாய்மார் எப்பொழுதும் விழிப்பாய் இருத்தல் அவசியம். இல்லாவிட்டால் பிள்ளைகளுக்குச் சோதனை அவர்கள் அறிந்துகொள்ள முடியாத வடிவமாய் அவர்களிடம் வரும். பெற்றோர் விவேகமும் இனிமையுமுள்ள போதனையினால் தங்கள் பிள்ளைகளைக் காத்துக்கொள்ள வேண்டும். அனுபவமில்லாத அந்த இளைஞருக்கு உத்தம நண்பர் என்னும் முறையில் அவர்கள் சோதனைகளை மேற்கொள்ளுகின்ற முயற்சியில், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். வெற்றி அடைவதற்கு அவர்களுக்குத் தேவையானதெல்லாம் அதுவே, நேர்மையான காரியங்களைச் செய்வதற்கு வகை தேடுகின்ற தங்களுக்கு அருமையான சொந்தப் பிள்ளைகள் ஆண்டவருடைய குடும்பத்தில் தங்களிலும் இளமையான உறுப்பினர் என்றும், மன்னரது கீழ்ப்படிதலின் பெரு வழியில் அவர்களுக்கு நேரான பாதைகள் உண்டு பண்ண அவர்களுக்கு உதவி செய்யும் முயற்சியில் தாங்கள் மிகுந்த ஆர்வ வுண்ர்ச்சி காண்பிக்க வேண்டும் என்றும், அவர்கள் கருதுதல் வேண்டும். கடவுளுக்குப் பிள்ளைகளாயிருந்து அவருக்குக் கீழ்ப்படிவதினால் தங்கள் சித்தத்தை அவருக்கு ஒப்புக்கொடுப்பது என்பதின் கருத்து இன்னதென்று, நாள்தோறும் அவர்களுக்கு அன்பும் வாஞ்சையுமாய்ப் போதிக்க வேண்டும். கடவுளுக்குக் கீழ்ப்படிதல் என்பதில் தங்கள் பெற்றொருக்குக் கீழ்ப்படிதல் என்பது அடங்கியுள்ளது என்று அவர்களுக்குப் போதியுங்கள். இது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாழிகையும் செய்ய வேண்டிய வேலை. பெற்றொரே, நீங்கள் மென்மேலும் விழித்திருந்து ஜெபம் பண்ணி; உங்கள் பிள்ளைகளை உங்களுக்குத் தோழர் ஆக்கிக்கொள்ளுங்கள்.CCh 327.1

    அவர்களது வாழ்க்கையின் மகா மகிழ்ச்சியுள்ள காலம் வந்து, அவர்கள் தங்கள் உள்ளத்தில் இயேசுவை நேசித்து, ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள விரும்புகிற பொழுது, அவர்களிடம் உண்மையாய் நடந்து கொள்ளுங்கள். அந்த நியமத்தை அவர்கள் பெற்றுக்கொள்ளுமுன்னே, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடவுளுக்குத் தொண்டு செய்வதைத் தங்கள் முதல் நோக்கமாகக் கொண்டிருக்கின்றார்களோ என்று அவர்களிடம் விசாரியுங்கள். அப்படியானால் அதை எப்படித் தொடங்குவது என்று அவர்களுக்குக் கற்பியுங்கள். அது அவ்வளவு சிறந்த கருத்து அடங்கிய முதற் பாடம். அவர்கள் கடவுளுக்குத் தங்கள் முதல் தொண்டு செய்வது எப்படி என்று எளிய முறையில் அவர்களுக்குப் போதியுங்கள். அத்தொண்டு அவர்களுக்கு எவ்வளவு எளிதாக விளங்கக் கூடுமோ அவ்வளவு எளிதாக அதை விளக்கிக் காட்டுங்கள். கிறிஸ்தவப் பெற்றொர் ஆலோசனைக்குட்பட்டு, தங்களை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுப்பதின் கருத்தையும், அவர் திருவசனம் கட்டளையிடுகிறபடியே அவர்கள் செய்வதின் கருத்தையும் விளக்கிக் காட்டுங்கள்.CCh 328.1

    உண்மையான உழைப்பிற்கு பிற்பாடு, உங்கள் பிள்ளைகள் குணப்படுதலின் கருத்தையும், ஞானஸ்நானத்தின் கருத்தையும் உணர்ந்து உள்ளவாறு மனம் மாறிவிட்டார்கள் என்று உங்களுக்குத் திருப்தி உண்டானால், அவர்கள் ஞானஸ்நானம் பெறலாம். என்றாலும், அவர்களுடைய அனுபவ மற்ற அடிகளைக் கீழ்ப்படிதல் என்னும் இடுக்கமான வழியில் நடத்துவதற்கு நீங்கள் உண்மையுள்ள மேய்ப்பர்களாக விளங்கும்படி, முதன் முதல் உங்களை நீங்கள் ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டுமென்று மீண்டும் கூறுகின்றேன். பெற்றோர் அன்பிலும், நல்லொழுக்கத்திலும், கிறிஸ்தவ மனத் தாழ்மையிலும், தங்களை முற்றிலும் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்கும் செய்கையிலும் தங்கள் பிள்ளைகளுக்குத் தகுதியுள்ள மாதிரி காட்டுவதற்கு, கடவுள் அவர்கள் உள்ளத்தில் கிரியை செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் செய்விக்க உடன்பட்டு, அவர்கள் அடிகள் நேர் வழியில் செல்லும்படி காக்கும் சிறப்புள்ள கடமையைச் சிறிதும் உணராமல், அப்புறம் அவர்கள் மனம் போன போக்கில் போகும்படி விட்டுவிடுவீர்களானால், அவர்கள் விசுவாசத்தையும், ஊக்கத்தையும், சத்தியத்தின் மேலுள்ள ஆர்வத்தையும் இழந்து போகும் பொழுது, நீங்களே அதற்குப் பொறுப்பாளிகள் ஆவீர்கள்.CCh 328.2

    ஆடவர் மகளீர் பருவத்திற்கு வளர்ந்துள்ள அபேட்சகர்கள் இளைஞரைக் காட்டிலும் அதிகமாய்த் தங்கள் கடமையை அறிந்துகொள்ள வேண்டும். ஆனாலும், சபையின் போதகர் அந்த ஆத்துமாக்களுக்குச் செய்ய வேண்டிய கடமை உண்டு. அபேட்சகர்கள் தவறான பழக்க வழக்கங்கள் உடையவர்களோ என்று பார்க்க வேண்டும். அவர்களுக்காகச் சிறப்பான கூட்டங்கள் நடத்துவது போதகர் கடமை. அவர்களுக்கு வேத பாடம் கற்பித்திடுக. அவர்களோடு உரையாடிச் செபித்திடுக. அவர்கள் ஆண்டவருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தெளிவாக உணர்த்துக. மன மாறுதல் பற்றிய வேத போதனையை அவர்களுக்கு வாசித்துக் காண்பித்து விளக்குக. மன மாறுதலின் பலன் இன்னதென்றும் அவர்கள் கடவுளை நேசிப்பதற்குச் சான்று இன்னதென்றும் காண்பித்திடுக. இருதயம் மாறுதல் அடைதலும், நினைவுகளும் நோக்கங்களும் மாறுதல் அடைதலுமே மெய்யான குணப்படுதல் என்று காட்டுக. கெட்ட பழக்கங்களை விட்டுவிட வேண்டும். தீது பேசுதல், பொறாமை கொள்ளுதல், கீழ்ப்படியாமை முதலான பாவங்களை அகற்றி விட வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் நடத்தையிலுள்ள தனிப்பட்ட தீவினைகள் ஒவ்வொன்றினேடும் தீராப் போர் நடத்த வேண்டும். அப்பொழுது விசுவாசிக்கிறவன் எவனும், கேளுங்கள்; அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்ப்டும் என்னும் வாக்குத்தத்தம் தனக்கே உரியது என்று அறிந்துணர்ந்து கொள்வான். மத், 7:7. 6T.91-99.CCh 329.1