Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஆலோசனையைத் தள்ளிவிடுகிறவர்களுக்கு சபையின் கடமைகள்

    கிறிஸ்துவின் போதனையை உண்மையுடன் பின்பற்றி முடியும்வரை, தவறு செய்தவரின் நாமத்தை சபைப் புஸ்தகங்களிலிருந்து நீக்கும்படி, சபையின் யாதொரு உத்தியோகஸ்தர் ஆலோசனை கூறவோ, யாதொரு கமிற்றி சிபார்சு செய்யவோ, யாதொரு சபை ஓட்டு எடுக்கவோ கூடாது. கிறிஸ்துவின் போதனையைப் பின்பற்றின பிற்பாடு, தேவனுக்கு முன்பாக சபை தன்னை தெளிவுபடுத்தி விட்டது. தீமை அது இருக்கிறபடியே காட்டப்பட்டு, அது இன்னும் மென்மேலும் பரவாதபடி களையப்பட வேண்டும்: சபை கிறிஸதுவின் நீதியினால் உடுத்தப்பட்டு தேவனுக்கு முன்பாக கறைப்படாமல் நிற்கும்படி, சபையின் நல் வாழ்வும், தூய்மையும் பாதுகாக்கப்பட வேண்டும்.CCh 231.2

    குற்றவாளி மனந்திரும்பி, கிறிஸ்துவின் கண்டிதத்துக்கு அடிபணிந்தால், அவனுக்கு மீண்டும் ஒரு தருணம் கொடுக்கப்பட வேண்டும். அவன் மனந்திரும்பாமலிருந்து சபைக்கு வெளியில் நின்றுகொண்டிருந்தால், தேவ ஊழியர்கள் இன்னும் அவனுக்காகச் செய்ய வேண்டிய ஒரு வேலை உண்டு. அவன் மெய் மனஸ்தாபம் அடைந்து திரும்பவும மீட்டுக் கொள்ளப்பட அவனுக்காக அக்கரையாக உழைக்க வேண்டும். அவனது குற்றம், கோபத்தை அதிகரிக்கச் செய்வதாக இருந்தாலும், அவன் பரிசுத்த ஆவியின் போராட்டத்திற்கு இடங்கொடுத்து பாவத்தை அறிக்கைசெய்து விட்டுவிட்டு மனமாறுதலின் அத்தாட்சி கொடுத்தால், அவனுக்கு மன்னிப்புக் கொடுத்து, மந்தையில் மீண்டும் வரவேற்க வேண்டும். அவனுடைய சகோதரர்கள் அவனைச் சரியான வழியில் ஊக்கி, அவனது இடத்தில் தாங்கள் இருப்பின் எவ்விதமாக நடத்தப்பட விரும்புவார்களோ அவ்விதமாகவே அவனை நடத்தி தாங்களும் சோதிக்கப்படாதபடி தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும்.CCh 231.3

    “பூலோகத்தில் நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலோ நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவகைள் பரலோகத்தலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்குமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” என்று கிறிஸ்து தொடர்ந்து கூறினார். வச. 18.CCh 232.1

    இந்த வார்த்தைகளின் சக்தி சகல யுகங்களிலும் நிலைத்திருக்கிறது. கிறிஸ்துவுக்குப் பதிலாக காரியத்தை நடப்பிக்கும் அதிகாரம் சபையின்பேரில் வைக்கப்பட்டிருக்கிறது. தமது ஜனங்களின் மத்தியில் ஒழுங்கும், கட்டுகப்பாடும் காக்கப்படுவதற்கு அது கடவுகளின் ஆயுதமாயிருக்கிறது. சபையின் வளர்ச்சிக்கான கேள்விகள் யாவையும் தீர்ப்பதற்கும், அதன் ஒழுங்கு, தூய்மையைக் காப்பதற்கும் அவசியமான வல்லமையைக் கர்த்தர் சபைக்குக் கொடுத்திருக்கிறார். அபாத்திரமானவர்களையும், கிறிஸ்தவத்தன்மையற்ற தங்கள் நடக்கையால் சத்தியத்திற்கு மதிப்புக் குறைவக்கொண்டு வருபவர்களையும் சபையின் அன்னியோன்னியத்திலிருந்து விலக்கும் உத்தரவாதம் சபையின் பேரில் வைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைப்படி சபை செய்யும் யாவும் பரலோகத்திலும் உறுதிப்படுத்தப்படும்.CCh 232.2

    முடிவு செய்வதற்கான, ஆழ்ந்த, முக்கியமான காரியங்கள் சபை முன் வரக்கூடும். தேவனுடைய ஜனங்களை வழி நடத்தும்படியாக தேவனாலே ஏற்படுத்தப்பட்டிருக்கும் போதகர்கள் அவர்கள் செய்யக்கூடிய யாவையும் செய்த பின்பு, காரியங்களைச் சபைக்கு ஒபபடைத்து, அது செய்யும் தீர் மானங்களில் ஒருமைப்பாடு காணப்படும்படிச் செய்ய வேண்டும்.CCh 233.1

    ஒருவருக்கொருவர் இடையே செய்யப்பட வேண்டிய காரிங்களைச் செய்வதில் அவரது பின்னடியார்கள் பெரும் கவனம் செலுத்த வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். அவர்கள், உயர்த்தி, பழைய நிலைக்குக் கொண்டுவந்து, குணப்படுத்த வேண்டும். ஆனால், சரியான ஒழுங்கு நடவடிக்கை சபையில் இருக்க வேண்டும். பரம அழைப்புக்குப் பாத்திர வான்களாகத் தக்க குணங்கட்ட கற்றுக்கொள்வதற்கு தங்களை மாணாக்கர்களாகக் கருத வேண்டும். கீழே பூமியிலுள்ள சபையில் இருக்கும்போது, தேவனுடைய பிள்ளைகள் மேலே பரலோகச் சபையில் திரும்ப இணைக்கப்படும்படி ஆயத்தப்பட வேண்டும். கிறிஸ்துவுடனே இங்கே சேர்ந்து ஜீவிக்கிறவர்கள், மீட்கப்பட்ட குடும்பத்தில் நித்திய ஜீவிக்கிறவர்கள், மீட்கப்பட்ட குடும்பத்தில் நித்திய ஜீவிகளாக வாழ எதிர் நோக்கலாம்.CCh 233.2