Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தீர்க்கதரிசிகள் தரிசனம் பெற்ற வகை

    “உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால் கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடு பேசுவேன். (எண்.12:6). என்று கடவுள் இஸ்ரவேல் மக்களிடம் கூறினார் என்று நாம் முன்னே பார்த்தோம்.CCh 23.2

    முந்திய அதிகாரத்தில், சாத்தானுக்கும் கிறிஸ்துவுக்கும் நடக்கும் போராட்டத்தின் தரிசனம் பெறுகின்ற தருணத்தில், அம்மையார் உடலியலில் ஆச்சரியமான சில நிகழ்ச்சிகள் தோன்றின என்று கண்டோம். இவைகளைக் கவனிக்கையில், தரிசனம் பெறுகின்றபொழுது ஏன் இப்படி உண்டாக வேண்டும் என்று பலர் கேட்பார்கள். அப்படிக் கேட்பது சரியே. ஏனெனில், கடவுள் தீர்க்கதரிசியோடு நேரில் பேசுகிறார் என்பதை மக்கள் அறிந்து, அவர்கள் நம்பிக்கை உறுதிப்படவேண்டும். உவைட் அம்மையார் தரிசனம் காணும் போது, அவருடைய நிலை எவ்வாறு என்று அவர் விரிவாகக் கூறவில்லை. கடைசிக் காலத்திற்குரிய இத்தூதுகளில் மக்கள் விசுவாசம் உறுதிப்படவும், தீர்க்கதரிசன ஆவியில் அவர்களுக்கு நம்பிக்கை உண்டாகவும், இங்ஙனம் நிகழ்ந்தது என்று ஒருதடவை சொல்லியிருக்கிறார்.CCh 23.3

    “அவர்கள் கனிகளால் அவர்களை அறிவீர்கள் என்று வேத வாக்கின்படி, உவைட் அம்மையாரின் வேலை வளர்ந்து வருகையில், மக்கள் அம்மையாரின் வேலையைச் சோதிக்க நேர்ந்தது. கனிகளைக் காண காலம் செல்லும் என்று கடவுள் அறிந்து ஆரம்பத்திலேயே மக்கள் நம்பிக்கை உறுதிப்படுமாறு தரிசனம் அளிக்கப்பட்டபொழுது சில அத்தாட்சிகளினால் அதைத் தெளிவு படுத்தினார். தரிசனங்கள் அனைத்தும் பகிரங்கமாகவும் வேறுபட்ட சரீரத் தோற்றங்களுடனும் அளிக்கப்பட்டவில்லை. இந்த முதல் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் தேவ வசனத்தின்படி தேவன் தம்மைத் தரிசனத்தில் வெளிப்படுத்துவதுடன், சொப்பனத்திலும் பேசுவார் என்றும் வாசிக்கிறோம். தானியேல் தீர்க்கன் குறிப்பிடும் தீர்க்கதரிசன சொப்பனம் இதுவே:-CCh 24.1

    “பாபிலோன் இராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே, தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றின தரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்த சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான்.” தானி.7:1.CCh 24.2

    தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டதைப் பற்றி அவர், “இராத் தரிசனங்களில் நான் கண்டேன்,” என்று கூறுகிறார். உவைட் அம்மையாரும் மன அமைதியாய் நித்திரை செய்யும் வேளைகளில் இரவிலே தரிசனம் அருளப்பட்டார். அவர் சொல்கிறார்:- இரவு தரிசனத்தில் கடவுள் எனக்குத் தெளிவாக சில காரியங்களைக் காண்பித்தார். தீர்க்க தரிசன சொப்பனம் என்பது யாது? இராத் தரிசனத்திற்கும் சாதாரண சொப்பனத்திற்கும் வேறுபாடு யாது? என்ற கேள்விகள் எழலாம். 1868-ல் அம்மையார் இதைப்பற்றி எழுதியிருக்கிறார். வாழ்க்கையின் பொதுக் காரியங்களிலிருந்து எழும் சொப்பனங்க்ளுக் உண்டு. தேவ ஆவிக்கும் இதற்கும் தொடர்பு இராது. பொய்ச் சொப்பனங்களும், பொய்த் தரிசனங்களும் உண்டு. அவை பிசாசினால் உண்டாகின்றன. கடவுளிடமிருந்து வரும் சொப்பனம் அவருடைய வசனங்களோடு இசைந்திருக்கும். அவை சொப்பனங் காணும் ஆளின் தன்மையையும், அவருக்கு சொப்பனம் அருளப் பெற்ற சூழ் நிலையையும், சொப்பனம் உண்மையானது என்று நிலை நாட்டும் அத்தாட்சிகளையும் சார்ந்திருக்கிறது.CCh 24.3

    அம்மையார் வாழ்க்கையின் கடைசி நாட்களில் ஒரு நாள் அவர் புதல்வன் ஆகிய டப்ளியு.சி.உவைட் அவரைப் பார்த்து, அம்மா, நீங்கள் சொப்பனம் காண்பதாகவும், இரவு சொப்பனத்தில் சில காரியங்களைக் கடவுள் காண்பிப்பதாகவும், அடிக்கடி சொல்கிறீர்கள். நாங்களும் சொப்பனம் காண்கிறோம். கடவுள்தான் உங்களிடம் பேசுகிறார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டான்.CCh 25.1

    “பகல், தரிசனங்களில் என் பக்கத்தில் நின்று போதிக்கும் அந்த தெய்வ தூதரே அந்த இரவு தரிசனங்களிலும் நின்ரு தூதரைகளை எனக்கு அறிவிப்பதால், அவை கடவுளிடமிருந்து வந்தன என்று அறிந்து கொள்கிறேன்,” என்று மறுமொழி கூறினார். இவ்வாறு செய்து கொண்டுவரும் கடவுள் தொண்டரைத் “தூதன்” என்றும் “வழி காட்டி” என்றும் “ஆசான்” என்றும் அம்மையார் கூறியுள்ளார்.CCh 25.2

    இரவு வேளைகளில் அருளும் போதனைகள் சூழ் நிலைகளுக்கு ஏற்றவாறு தெளிவாக இருந்ததனால், அம்மையார் கடவுள் தமக்கு வெளிப்படுத்தியவைகளைக் குறித்து ஐயப்படவோ குழப்பம் அடையவோ இல்லை.CCh 25.3

    அவருக்கு தரிசனம் உண்டாவதற்கு கால வரம்பு கிடையாது. அவர் ஜெபிக்கும்போதும், பேசிக் கொண்டிருக்கும் போதும், எழுதும்போதும் கண்டதுண்டு. அவ்வேளைகளில் திடீரெனக் குரல் நின்றுவிடும். அப்பொழுது அவர் தரிசனம் காண்பதாக அண்டையில் இருப்பவர்களின் அறிந்து கொள்வார்கள். வேறு வகை முன்னறிவிப்பும் அவர்களுக்கு இராது.CCh 25.4

    “நான் ஜெபத்தில் தரித்திருக்கும்பொழுது என்னைச் சுற்றியுள்ள யாவும் மறந்தேன். நான் இருந்த அறை முழுவதும் ஒளிப்பரவியது. ஒரு சபைக்கு அறிவிக்க வேண்டிய தூது அப்பொழுது எனக்குக் கிடைத்தது. அது ஜெனரல் கான்பரன்ஸிற்கு வெளிப்படுத்தப்பட வேண்டியதாகவிருந்தது” என்று அவர் ஒரு தடவை எழுதியிருக்கிறார்.CCh 25.5

    திருப்பணியில் ஈடுபட்டு எழுபது ஆண்டு உழைத்த அந்த அம்மையாருக்கு கடவுள் அளித்த தரிசனங்கள் பல உண்டு. பொதுவாக அவர் காணும் தரிசனம் அரைமணி நேரம் நீடித்திருக்கும். எல்லாத் தரிசனங்களும் அப்படியல்ல. நீண்டத் தரிசனங்கள் நான்கு மணி நேரமளவும், சில தரிசனங்கள் சில வினாடிகள் மட்டிமே இருந்திருக்கின்றன. எல்லாத தரிசனங்களுக்கும் ஒரு பொது விதி கூற இயலாது. பூர்வ காலங்களில் தேவன் பங்கு பங்காகவும், வகை வகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றினார், (எபி. 1:1.) என்று பவுல் அப்போஸ்தலன் கூறியபிரகாரமே இருந்தது.CCh 26.1

    தீர்க்கதரிசிகள் தரிசனம் கண்டு கொண்டிருக்கும்பொழுதே அவைகளை எழுதவில்லை. வெளிச்சம் தரிசனவாயிலாக தீர்க்கதரிசிக்கு கிடைக்கும். சில அறிய வேளைகளில் தவிர, இன்னின்ன வார்த்தைப் பேசவேண்டும் அல்லது எழுத வேண்டும் என்றும், கடவுள் சொல்லவில்லை. எழுதும்போது இதைத்தான் எழுத வேண்டும் என்று தேவதூதர்கள் அவர்கள் கையைப் பிடித்து எழுதுவிப்பது இல்லை. தீர்க்கதரிசியின் வேலை இயந்திர வேலை போன்றதல்ல. தரிசனங்களில் வெளிப்படுத்தியச் செய்திகளை அவர்கள் நினைத்துப் பார்த்து எழுதுகிறார்கள். தங்கள் கருத்தைத் தெரிவிக்கத் தகுந்த சொற்களை அவர்களே தெரிந்தெடுத்துக் கையாண்டார்கள்.CCh 26.2

    தீர்க்கதரிசியின் மனம் எவ்வாறு ஒளி பெற்றது? மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தூதுகளையும், போதனைகளையும், அவர் எங்ஙனம் பெற்றார் என்று நாம் கேட்கலாம். கடவுள் தரிசனங்கள் அளிப்பதில் ஒரு நியமம் இல்லாதது போலவே, தீர்க்கதரிசி அதைப்பெற்றுக் கொள்வதிலும் ஒரு நியமம் இல்லை. எவ்வகையிலும் தீர்க்கதரிசியின் மனதில் மிகத் தெளிவாகத் தோன்றிய அனுபவம் எளிதில் மறந்து போகாதபடி பதிந்து விடுகிறது. நாம் கேட்கிறவைகளை விடப் பார்க்கிறவைகளும், அனுபவிக்கிறவைகளும், எவ்வளவு ஆழமாய் நமது மனத்தில் பதிந்து விடுகின்றன! அப்படியே தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுகிற செய்திகளும், அவர்கள் கண்முன் நடப்பவைகளைப்போல் கடவுள் காண்பித்ததால், அவை அவர்கள் மனத்தில் ஆழமாய்ப் பதிந்து விடுகின்றன.CCh 26.3

    கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் நடக்கும் போராட்ட வரலாறு தமக்கு எவ்வாறு வெளிப்பட்டது என்னும் விவரம் அவரே கூறியுள்ளார். அதை முன் அதிகாரத்தில் கூறினோம். வேறொரு தடவை அவர் கூறியிருக்கிறார்:- “பூமியில் நடக்கும் நிகழ்ச்சிகட்கு நேராக என் கவனம் திரும்பியது. நெடுநாட்களுக்குப்பின் நடக்கப்போகும் காரியங்களை நான் கண்டேன். கடந்த கால நிகழ்ச்சிகளையும் கடவுள் எனக்குக் காண்பித்தார்.”CCh 27.1

    இந்த ஊற்றினின்று எல்லாம் அவர் கண்முன் படக்காட்சி போன்று நடத்திக் காண்பிக்கப்பட்டது என்றும். அவை எல்லாற்றிற்கும் அவர் கண்கண்ட காட்சி என்றும் விளங்குகிறது, அவை மீண்டும் மீண்டும் தரிசனங்களில் தோன்றினமையால், அவர் மனதில் தெளிவாகப் பதிந்து போயின,CCh 27.2

    சில காட்சிகளில் அம்மையார் கூட நின்று செயல் ஆற்றுவதாகக் கண்டுள்ளார். உணர்வதும், காண்பதும், கேட்பதும், கீழ்ப்படிவதும் எல்லாம் அவருக்கு அனுபவ பூர்வமாக தெரியும். அவை அவர் மனத்தை விட்டு ஒருகாலும் அகலமாட்டா. அந் நூலில் 44-ஆம் பக்கம் முதல் 49-ஆம் பக்கம் வரை எழுதியுள்ள முதல் தரிசனம் அவைகளில் ஒன்று.CCh 27.3

    சில காட்சிகளில் அம்மையார் சபையிலாவது, வீடுகளிலாவது தொலை தூரங்களிலுள்ள மிஷன் ஸ்தாபனங்களிலாவது போயிருப்பதாகத் தோன்றும். அங்கு பேசிய வார்த்தைகளையும், பேசிய ஆட்களையும், நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் விவரமாய் எடுத்துப் பிறர்க்குச் சொல்லக் கூடிய அளவு, அவை தெளிவாக இருக்கும். ஒருதடவை தரிசனத்தில் அவர் ஒரு மருத்துவ நிலையத்துக்குச் சென்றதாகவும், அங்கு ஒவ்வொரு அறையிலும் நடந்தவைகளைக் கண்டதாகவும் தம்முடைய அனுபவத்தைப்பற்றி அம்மையார் எழுதுகிறார்:-CCh 27.4

    “அங்கு நடந்த அற்பத்தனமான பேச்சுகளும், மதிகெட்ட கேலியும், பொருளற்ற நகைப்புக்களும், எனக்கு வேதனை தந்தன. அப்பொறாமைப் பேச்சுகளையும், மதிகெட்ட சொற்களையும் கேட்டு, நாணம் அடைந்த தேவதூதர்களைக் கண்டு நான் பிரமித்தேன்.”CCh 28.1

    அந்த மருத்துவ நிலையத்தில் இன்பமயமாக விளங்கிய இன்னொரு பகுதியைக் கண்டார். அங்கு ஜெபம் நடந்து கொண்டிருந்தது. அங்கு வெளிப்பட்ட குரலொளி எவ்வளவு வரவேற்கத்தக்க குரலாம இருந்தது! தமக்குக் காட்டப் பெற்ற தரிசனத்தில் அவர்களை வெவ்வேறு காரியாலய அறைகளுக்கு அழைத்துச் சென்ற தூதன் கூறிய வார்த்தைகளை வைத்து அந்த ஸ்தாபனத்திலுள்ளவர்களுக்கு எச்சரிப்பி9ன் தூது ஒன்று எழுதினார்.CCh 28.2

    “உள்ளத்தில் பதியத்தக்க அறிகுறியான தோற்றங்களாலும் கடவுள் அடிக்கடி அவர்களுக்கு ஒளி நல்கினார். தலைவர் ஒருவர் பற்றிக் கண்ட காட்சி அது. காட்சி ஒன்று விளக்கம் பெறுகின்றது. அத்தலைவர் மிகவும் அபாயகரமான நிலைமையில் இருப்பதாகத் தெரிந்தது. அத்தலைவருக்கு அவர் எழுதியது:-CCh 28.3

    “மறுபடியும் நீர் ஒரு கொடி பிடித்துக்கொண்டு, படைத்தலைவர் போல் குதிரைமீது உட்கார்ந்திருக்கக் கண்டேன் அக்கொடியில் கடவுளுடைய கற்பனையும், இயேசுவைப்பற்றும் விசுவாசமும் என்று சொற்கள் பொறிந்திருந்தது. ஒருவன் ஓடிவந்து அக்கொடியை உம்மிடமிருந்து பிடுங்கி, தரையிலே போட்டு மிதித்தான். உலகப் பற்று கொண்ட மக்கள் உம்மைச் சூழ்ந்து கொண்டனர்.”CCh 28.4

    சில சமயங்களிலே நேர்மாறான பலனைத்தரும் கருத்துக்கள் அடங்கிய காட்சிகளும் காட்டப்பட்டன. அதாவது, ஒரு காரியத்திற்குச் சில திட்டங்கள் வகுத்து, அதன்படி செய்தால் நிகழ்வன இன்னவென்றும், வேறு திட்டம் வகுத்து அதன்படி செய்தார் நிகழ்வன இன்னவென்றும் காட்டப்பட்டது. இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் லோமலின்டாவில் ஓர் சுகாதார உணவு உற்பத்தி நிலையம் நிறுவ யோசனை நடந்தது. அதன் நிர்வாகியும், துணையாளரும் சேர்ந்து, அங்குள்ள ஆரோக்கிய நிலையத்தின் முக்கிய கட்டடத்திற்கு அருகில் அந்த நிலையம் கட்ட திட்டம் இட்டு, அதற்குரிய முயற்சிகளும் நடந்தன. அப்பொழுது நூற்றுக்கணக்கான மைல் தொலைவிற்கு அப்பால் இருந்த அம்மையார் இரு காட்சிகள் கண்டார். அக்காட்சியைப் பற்றி அம்மையார் எழுதுகிறார்:-CCh 29.1

    “உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் ஒரு பெரிய கட்டடம் எனக்குத் தோன்றியது. ஒரு ரொட்டிக் கிடங்கின் பக்கத்தில் சில சிறிய கட்டடங்களும் இருந்தன. நான் அவ்விடத்தில் நிற்பது போலவும் கட்டடத்தினுள் பலர் நடக்க வேண்டிய வேலையைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருப்பது போலவும் கண்டேன். அலுவலாளருக்குள் ஒற்றுமை இல்லை. மிகுந்த குழப்பம் ஏற்பட்டது.”CCh 29.2

    இதைக்குறித்து மனவேதனையடைந்த வேலைத் தலைவர் அலுவலாளர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட அரும் பாடு பட்டார். அவருக்கும் அலுவலாளருக்கும் நடந்த வாக்குவாதங்களைக் கேட்ட ஆரோக்கிய நிலையத்திலுள்ள நோயாளிகள் இந்த ஆரோக்கிய நிலையத்திற்கு அருகில் உணவுச் சாலையைக் கட்டினார்களே என்று சொல்லி வருந்துவதைக் கண்டார். அப்பொழுது அங்கு ஒருவர் தோன்றி, இந்தத் திட்டம் நிறைவேறினால், இப்படி நடக்கும் என்று உனக்குக் காட்டும் பொருட்பாடம் இது, என்று சொன்னார்.CCh 29.3

    உடனே காட்சி மாறியது. ஆரோக்கிய நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில், புகைவண்டி நிலையத்திற்குப் போகும் CCh 29.4

    சலையோரம், ஓர் உணவு உற்பத்தி நிலையம் கண்டேன். தெய்வத்திட்டத்தின்படி இங்கு வேலை அமைதியாய் நடந்தது. இக்காட்சி கண்ட சிலமணி நேரத்திற்குள், அம்மையார் லோமலிண்டாவிலிருந்த ஊழியக்காரர்களுக்கு இந்தக் காட்சியைப் பற்றி எழுதினார். அவர்கள் பிரச்சினை எளிதில் முடிந்தது. உணவு உற்பத்திசாலை எங்கு நிறுவ வேண்டும் என அறிந்தனர். அவர்களுடைய முதல் திட்டப்படி உணவு நிலையம் அமைந்திருப்பார்களானால், அது ஒரு பெரிய வர்த்தக நிலயமாகி, ஆரோக்கிய நிலையத்திற்கு எவ்வளவு தொந்தரது அளித்திருக்கும்!CCh 30.1

    இவ்வாறு தீர்க்கதரிசி அம்மையார் பரலோகத்திலிருந்து இரவும் பகலும் செய்திகளும், தூதுகளும், அறிவுரைகளும், பல வகைக் காட்சிகளும், தரிசனங்களும் பெற்றார். இவ்வாறு ஒளிபெற்று அவர் மக்களுக்கு பேச்சாலும் எழுத்தாலும் போதனைய்ம் செய்தியும் அருளினார். இதை நிறைவேற்றுவதில் அவருக்குத் தேவ ஆவியானவர் துணை செய்தார். ஆனால் அவர் இயந்திரம் போன்று இயங்கவில்லை. தூதைத் தெளிவாக விளக்கும் சொற்களை அவரே தெரிந்தெடுத்தார். அவர் திருத்தொண்டு ஆரம்பித்துக் காலத்தில் நம்முடைய சபைப் பத்திரிகையில் இதைப்பற்றி அடியிற் கண்டவாறு எழுதியிர்க்கிறார்:-CCh 30.2

    “நான் கண்டவகைகளையும், கடவுள் எனக்கு அளித்தவைகளையும் எழுதிகிறாதற்குத் தேவ ஆவியின் உதவியையே சார்ந்திருக்கிறேன். ஆயினும், அவைகளை விவரிக்கும் வார்த்தைகள் என் சொந்த வார்த்தைகளே. தேவதூதர் சொன்ன வார்த்தைகளை எழுதுகையில், அவைகளை மேற்கொள்குறி காண்பித்திருக்கிறேன்.”CCh 30.3