Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-49

    நாம் உண்ணும் உணவு

    நாம் உண்ணும் ஆகாரத்தின் மூலமாய் நமது சரீரங்கள் கட்டப்படுகின்றன. சரீரத்திலுள்ள தசை நார்களுக்கு இடைவிடாது தேய்வு ஏற்படுகின்றது; ஒவ்வொரு உறுப்பும் அசையும் போது தேய்வு ஏற்படுகின்றது. நாம் உண்ணும் உணவினால் தேய்வு பழுது பார்க்கப்படுகின்றது. சரீரத்திலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் அதற்குரிய ஆகாரம் தேவைபபடுகிறது. மூளைக்கு அதற்குரிய பாகம் அளிக்கப்பட வேண்டும்; எலும்புகள், தசை நார்கள், நரம்புகளூக்கு அவைகளுக்குரிய ஊட்டம் வேண்டும். ஆகாரம் இரத்தமாக மாற்றப்பட்டு, சரீரத்தின் பல பாகங்கள் கட்டப்பட அது உபயோகிக்கப்படும் வீதம் ஆச்சரியப்படத்தக்கது; ஆயினும், இப்படிப்பட்ட பழுது பாரிக்கும் வேலை, ஒவ்வொரு சவ்வு, தசை நார், நரம்புக்கு உயிரையும் சக்தியையும் கொடுக்க இடைவிடாது நடந்துகொண்டிருக்கிறது.CCh 576.1

    சரீர வளர்ச்சிக்கு அவசியப்படும் மூலப்பொருள்களைத் தரும் சிறந்த உணவுகள் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். இப்படித் தெரிந்து கொள்வதில் ஆகாரத் தேட்டம் வழி காட்டியல்ல. புசிப்பின் தவறான பழக்கங்கள் ஆகாரத்தேட்டத்தை கெடச் செய்கிறது. பலத்திற்குப் பதிலாக சுகத்தைக் கெடுத்து, பலவீனத்தை உண்டு பண்ணும் ஆகாரத்தையே அடிக்கடி அது நாடுகின்றது. சமுதாய பழக்கத்தினால் நாம் வழி நடத்தப்படக்கூடாது. எங்கும் பரவி வரும் வியாதிக்கும் வேதனைக்கும் பெரும்பாரும் காரணம் தப்பிதமான ஆகாரமே.CCh 576.2

    தன்னில் தானே பரிபூரணமான எல்லா ஆகாரமும் எல்லா சூழ்நிலைகளிலும் தம் தேவைக்கு ஏற்றவாறு பொருந்தாது. உணவைத் தெரிந்தெடுப்பதில் தக்க கவனம் செலுத்த வேண்டும். நாம் உண்ணும் உணவு, நாம் செய்யும் வேலைக்கும், நாம் வசிக்கின்ற சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். ஒரு பருவகாலத்துக்குப் பொருத்தமான சில ஆகாரம் இன்னொரு சீதோஷ்ண நிலைக்குப் பொருத்தமான தன்று. ஆகவே பற்பல தொழிலில் ஈடுபட்டோருக்கு வித்தியாமான உணவுகள் மிகவும் தகுதியானவை. கடினமான சரீர உழைப்பில் ஈடுப்பட்டோருக்கு உபயோகமான உணவுப் பொருள் உட்கார்ந்து உழைப்போருக்கும் அல்லது ஆழ்ந்த விஷயங்களில் மனதைச் செலுத்துவோருக்கும் தகுதியானவையல்ல. கடவுள் நமக்கு விதவிதமான ஏராளமான சுகத்துக்கேற்ற ஆகாரத்தை தந்திருக்கின்றார். ஒவ்வொருவரும் தங்களுக்கு மிக பொருத்தமென அனுபவமும், ஏற்ற நல்லறிவும் நிரூபிக்கும் பொருட்களிலுருந்து தங்கள் தேவைக்கானவைகளைத் தெரிந்தெடுக்க வேண்டும். MH 295-297.CCh 576.3