Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மனிதர் தேவ புத்திரராகும்படி கிறிஸ்து அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கிறார்

    தாம் சிலுவையிலடிக்கப்படுவதற்கு முந்திய இரவு மேல் வீட்டிலே கிறிஸ்துவானவர் கூறிய வார்த்தைகளை ஆராய்வோம். தாம் பாடுபட வேண்டிய வேளை வந்தது என்றறிந்து கடுமையான சோதனைக்கும் பரீட்சைக்கும் உட்பட இருந்த தமது சீஷர்களைத் தேற்றுவதற்கு அவர் முற்பட்டார்.CCh 260.1

    தெய்வத்திற்கும் கிறிஸ்துவுக்குமிருந்த உறவு இத்தகையதென்று சீஷர்கள் இன்னமும் அறியாதிருந்தனர். அவருடைய போதனைகளில் மிகுதியானவை அவர்களுக்கு இன்னமும் கருகலாயிருந்தன. கடவுள் தங்களோடும் தங்கள் தற்போதைய, பிற்கால காரியங்களோடும் கொண்டுள்ள சம்பந்தத்தை அவர்கள் அறியாதிருந்தார்களென அவர்கள் அவரிடம் கேட்ட அனேக கேள்விகள் வெளிப்படுத்தின. தெய்வத்தைக் குறித்து அவர்கள் அதிக தெளிவும் திட்டமுமான அறிவை அடைய வேண்டுமென கிறிஸ்து விரும்பினார்.CCh 260.2

    பெந்தேகோஸ்து நாளிலே பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டப்பொழுது, கிறிஸ்துவானவர் உவமைகளில் கூறிய சத்தியங்களை சீஷர்கள் அறிந்துகொண்டனர். மறை பொருட்களாகவிருந்த போதனைகள் தெளிவாயின. பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டு, போதனைகள் விளக்கமானபோது, மனக் கற்பனையான தங்கள் கோட்பாடுகளைக் குறித்து வெட்கமடைந்தனர். தாங்கள் இப்பொழுது பெற்றுக்கொண்ட பரம காரியங்களைப் பற்றிய அறிவின் முன் தங்கள் மனோ கற்பனைகளும் வியாக்கியானங்களும் பைத்தியமாகத் தோன்றின. பரிசுத்த ஆவியினால் அவர்கள் வழி நடத்தப் பெற்றனர். முன்னர் இரு ளடைந்திருந்த அவர்களுடைய மனது இப்பொழுது பிரகாசித்தது.CCh 260.3

    ஆயினும் கிறிஸ்துவானவரின் வாக்குத்தத்தங்களின் முழு நிறைவேறுதலையும் சீஷர்கள் அடையவில்லை. அவர்கள் பெறக்கூடிய அறிவனைத்தையும் அவர்கள் பெற்றனர். ஆயினும், கிறிஸ்துவானவர் யாவையும் எடுத்துக் கூறி பிதாவைப் பற்றி விளக்குவாரென்று அளிக்கப்பட்ட வாக்குத்தத்தின் முழு நிறைவேறுதல் இன்னமும் வரவேண்டியாதாயிருந்தது. நிலைமை இன்றும் அவ்வாறே கடவுளைப்பற்றிய நமது அறிவு ஒருதலைப்பட்சமானது; பூரணமற்றது. போராட்டமானது முடிவடைந்து, பாவ உலகில் தமக்குண்மையான சாட்சி பகர்ந்த ஊழியர்களைக் குறித்து மனுஷனாகிய கிறிஸ்து இயேசு பிதாவின் முன் அறிக்கை பண்ணுகிறபொழுது, இப்பொழுது மறைவாக இருக்கும் இரகசியங்கள் அவர்களுக்குப் புலப்படும்.CCh 261.1

    மகிமையடைந்த தமது மனுஷீகத்தை கிறிஸ்து தம்முடன் பரலோகங்கொண்டு சென்றார். தம்மை ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் தேவ புத்திரராகி, முடிவில் தெய்வத்தால் ஏற்கப்பெற்று, நித்திய காலமாக அவருடனே வாழுவதற்கு அவர் வல்லமை யளிக்கின்றார். இந்த ஜீவியத்திலே அவர்கள் தெய்வத்திற்கு உண்மையும் உத்தமமுமாயிருந்தால் முடிவிலே அவர்கள் அவருடைய சமுகத்தை தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். (வெளி.22:4) பரலோக இன்பம் கடவுளைத் தரிசிப்பதே அல்லாமல் வேறு யாது? கிறிஸ்துவானவரின் கிருபையினால் இரட்சிப்படைந்த பாவி தேவ சமுகத்தை தரிசித்து, கடவுளைப் பிதாவென்றறிவதைவிட வேறு பேரின்பம் யாதுளது?CCh 261.2