Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    எதிர்கால மனைவியிடம் எதிர்பார்க்க வேண்டிய நற்குணங்கள்

    வாலிபன் தன் பக்கத் துணையாய் நிற்கக் கூடிய பெண்ணைத் தனக்குத் தேடிக் கொள்ள வேண்டும். அவள் வாழ்க்கைச் சுமையில் தன் பங்கைச் சுமக்கத் தகுதியுள்ளவளாய் இருக்கவேண்டும். அவள் செல்வாக்கு அவனைப் பண்பு நலம் உடையவன் ஆக்க வேண்டும். அவள் தன் அன்பினால் அவனை மகிழ்விக்க வேண்டும்.CCh 345.1

    “புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு.” “அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும். அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல, நன்மையையே செய்கிறாள்.” “தன் வாயை ஞானம் விளாங்கத்திறக்கிறான். தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது. அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக் காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாய் இருக்கிறாள். அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள். அவள் புருஷனும் அவளைப் பார்த்து; அனேகம் பெண்கள் குணசாலிகளாய் இருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான்.” இத்தகைய மனைவியை அடைகிறவன் நன்மையான பொருளைக்கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக் கொள்ளுகிறான்.CCh 345.2

    இவை கவனிக்க வேண்டிய காரியங்கள்:--- நீ மணந்து கொள்ளப் போகிறவன் உன் இல்லத்திற்கு இன்பத்தைக் கொண்டு வருவாளோ? அவள் சிக்கனகாரியோ, அல்லது மணஞ்செய்தபின்பு தான் தேடுகின்ற பொருள் அனைத்தை யும் அன்றி, நீ தேடுகிரது எல்லாவற்றையும் சேர்த்து, வெளி அலங்காரத்தில் பற்று வைத்து, வீண் அழுக்காக செலவழித்து விடுவாளோ? இக்காரியத்தில் அவள் கொள்கைகள் திட்பநுட்பம் உடையவைகளோ? இப்பொழுது அவள் சார்ந்து கொண்டிருக்கிற பொருள் யாதாவது உண்டோ? காதலிலும், கலியாண நினைவிலும் மயங்கிக் கிடக்கின்ற ஆண்பிள்ளைக்கு, இந்தக் கேள்விகள் எல்லாம் அர்த்தமற்றதாகத் தோன்றும் என்று எனக்குக்தெரியும். ஆனாலும் இந்தக் காரியங்களைத் தகுதியான முறையில் கவனித்துப் பார்க்க வேண்டும். இவை உன் வருங்கால வாழ்க்கையின் சூழ்நிலைக்கு உரியவை.CCh 345.3

    நீ மனைவியைத் தெரிந்து கொள்வதில் அவள் குணநலத்தை ஆராய்ந்துபார். அவள் பொறுமைசாலியோ? வருந்து உழைக்கிறவளோ? உன் தாயும் தந்தையும் பலசாலியான தங்கள் மகனைச் சார்ந்து பிழைக்கவேண்டிய காலம்வரும் பொழுது, அவர்களைக்கவனிக்காமல் விட்டு விடக் கூடியவளோ? தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றுகிறதற்காகவும், தன் இன்ப வாழ்க்கைக்கு ஏற்ற முறைகளை அமைத்துக் கொள்ளுகிறதற்காகவும் அவர்கள் சகவாசத்தை விட்டு அவனைப்பிரிந்து, அவன் தாயும் தந்தையும் அன்பு நிறைந்த மகள் ஒருத்தியைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக தங்கள் மகனை இழந்து போகச் செய்வாளோ?CCh 346.1