Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-7

    சபைப் பிரசுரங்கள்

    தேவனுடைய விசேஷ மேற்பார்வையிலும், அவருடைய ஏற்பாட்டின்படியும் நமது பிரசுர வேலை ஸ்தாபிக்கப்பட்டது. ஒரு திட்டமான நோக்கத்தை நிறைவேற்ற அது நியமிக்கப்பட்டது. ஏழாம் நாள் அட்வெந்திஸ்தர்கள் விசேஷித்த ஜனமாக உலகிலிருந்து தெரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றனர். சத்தியமாக்ய சம்மட்டியால் உலகமாகிய கன்மலை யிலிருந்து அவர்கள் உடைக்கப்பட்டு தம்மோடு ஐக்கியப் பட்டிருக்கும்படி அவர்களைத் தேவன் தெரிந்து கொண்டிருக்கிறார். இரட்சிப்பின் கடைசி வேலையில் அவர்கள் தம் பிரதிநிதிகளாகவும், ஸ்தானாதிபதிகளாகவுமிருக்க அழைத்திருக்கிறார். மனிதருக்கு ஒப்புவிக்கப்பட்ட மிகப் பெரிய ஐசுவரியமாகிய சத்தியம், மனிதனுக்குத் தேவனால் அனுப்பப்பட்ட மிக பக்தி வினயமான பயங்கர எச்சரிப்புகள் யாவும் உலகத்திற்குக் கொடுக்கும்படி அவர்களிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கின்றது; இவ் வூழிய முடிவிற்கு நமது பிரசுராலயங்கள் மிக முக்கியமானவை.CCh 136.1

    நமது பிரசுராலயங்களிலிருந்து அனுப்பப்படும் வெளியீடுகள் தேவனைச் சந்திக்க ஒரு ஜனத்தை ஆயத்தப்படுத்த வேண்டும். 7T. 138, 139.CCh 136.2

    முக்கியமான ஏதாவது ஒரு வேலை ஒன்றிருந்தால், அது நமது பிரசுரங்களை பொது மக்களிடையே பரப்பி, அவர்கள் வேதத்தை ஆராயச் செய்வதாகும். குடும்பங்களுக்கு நமது பத்திரிகைகளைக் கொடுத்து, சம்பாஷித்து, அவர்களோடு அவர்களுக்காக ஜெபிப்பது நல்ல வேலை. இதனால் ஆண் பெண் இருபாலாரையும் போதக ஊழியத்திர்குக் கற்பிப்பதாகும். 4T. 390.CCh 136.3

    நமது பிரசுரங்களை விற்பது மிக முக்கியமும் லாபகரமுமான சுவிசேஷ ஊழியமாகும். கூட்டங்கள் நடத்தப்பட முடியாத ஸ்தலங்களுக்கு நம் பிரசுரங்கள் செல்ல முடியும். அப்படிப்பட்ட இடங்களுக்கு பிரசங்கிமார்களின் ஸ்தானத்தில் நம் புத்தக ஊழியர்கள் செல்லுகிறார்கள். சத்தியத்தை ஒருக்காலும் கேட்கக் கூடாது ஆயிரக்கணக்கானவர்கள் புத்தக வேலை மூலம் அதைக் கேட்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.CCh 137.1

    நமது புத்தகங்களிலுள்ள வெளிச்சத்த ஜனங்களுக்குக் கொடுக்கும்படி புத்தக ஊழியம் நியமிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆவிக்குரிய கல்வியும் ஒளியும் அடங்கிய நூல்களை துரிதமாய் உலகத்திற்குக் கொடுக்கும் பொறுப்பு புத்தக ஊழியரைச் சார்ந்தது. தேவன் தமது ஜனங்களை இக்காலத்தில் செய்ய விரும்பும் வேலை இதுவே. இவ் வூழியத்திற்கென தங்களைத் தத்தஞ் செய்யும் யாவரும் உலகத்திற்குக் கொடுக்கும் கடைசி எச்சரிப்பின் தூதைக் கொண்டுபோக உதவுகின்றனர். இந்த ஊழியத்தில் மதிப்பை நாம் அளவிட முடியாது; ஏனெனில் புத்தகவூழியருடைய முயற்சியின்றி அநேகர் இந்த எச்சரிப்பைப் பெறுவது அரிது. 6T. 313.CCh 137.2

    நமது பிரசுரங்கள் எங்கும் செல்ல வேண்டும். அவைகள் அனேக பாஷைகளில் வெளியாகட்டும். இக்கருவி மூலமும், ஜீவனுள்ள பிரசங்கி மூலமும், மூன்றாம் தூது செல்லட்டும். இக்காலத்திற்குரிய சத்தியத்தை விசுவாசிக்கிற நீ எழுந்திரு. சத்தியத்தை விளங்கிக்கொள்ளுகிற நீ உன்னாலான எல்லாவற்றையும் செய்து விளம்பரம் செய்வது உன் கடமை. பிரசுரங்களால் வரும் ஆதாயத்தின் ஒரு பாகம் இன்னமும் அதிக வெளியீடுகளைப் பிரசுரிக்கும் கருவிகளுக்காக செலவிடப்பட வேண்டும். இப்பிரசுரங்கள் கண்களைத் திறந்து, இருதயமாகிய தரிசு நிலங்களைப் பண்படுத்தட்டும். 9T. 62.CCh 137.3

    போதகர்களிருந்தால், புத்தகவூழியரும் அவருடன் சேர்ந்து உழைக்கவேண்டுமென எனக்குச் சொல்லப்பட்டது; போதகர் மிக உண்மையும் உத்தமுமாய் சத்தியத்தைக் கூறியறிவித்த போதிலும், ஜனங்கள் அவைகளை யெல்லாம் தங்கள் மனதில் பேணிக் கொள்ள முடியாது. அச்சுப் பிரதிகள் இக்காலத்துக்குரிய சத்தியத்தை அறியும்படி அவர்களை ஊக்கி எழுப்புவதற்கு மட்டுமல்ல, ஏமாற்றும் தவறுகளிலிருந்து அவர்களை விலக்கி, சத்தியத்தில் வேரூன்றி நிலைபெறச் செய்யவும் உதவுகின்றன. பத்திரிகைகளும் புத்தகங்களும் ஜனங்களுக்கு முன் சதா அவருடைய தூதுகளை நினைப்பூட்டும் கருவிகள், சத்தியத்தில் ஆத்துமாக்களைப் பிரகாசிக்கச் செய்து, உறுதிப்படச் செய்வதற்கு தேவ வசனம் மட்டுமின்றி பிரசுரங்களும் பெருமிதமான வேலை செய்கின்றன. புத்தகவூழியர் மூலம் வீடுகளில் வைக்கப்பட்ட மெளா தூதர்கள் சுவிசேஷ வூழியத்தை சகல விதத்திலும் பலப்படுத்துகின்றனர்; ஏனெனில், பிரசங்கத்தின் மூலம் கேட்போர் உள்ளத்தில் கிரியை செய்வது போலவே, பிரசுரங்களாஇ வாசிப்போரின் உள்ளத்திலும் பரிசுத்த ஆவி கிரியை செய்கிறார். போதகருடைய ஊழியத்திற்கு உதவுகிற மாதிரியே தேவதூதர்கள் சத்தியமடங்கிய புத்தகங்களை வேலைக்கும் உதவுகிறார்கள். 6T. 315, 316.CCh 138.1

    தகுதிவாய்ந்த மாணவர்கள் விரும்பினால், ஞானமான திட்டத்தோடு புத்தக வூழியஞ் செய்து, பள்ளிக்கூட பீஸுக்கு உதவி பெறலாம். இந்த ஊழியத்தின் மூலம் நம் கலா சாலைக்குப் பயிற்சி பெறப்போக முடியுமானால், அவர்கள் ஊழியத்திற்குப் பேருதவியான அனுபவம் அடையவும், புதிய வெலைகளாஇ ஆரம்பிக்கவும் அவர்கள் தகுதி அடைவார்கள் 9T. 79,CCh 138.2

    நமது பிரசுரங்களாஇப் பரப்புவதின் முக்கியத்துவத்தை சபையார் உணரும்போது. அவர்கள் இவ்வூழியத்திற்கென அதிக நேரம் செலவிடுவர். C.M.7.CCh 139.1

    தவணையின் காலம் நீடிக்குமளவும் புத்தகவூழியர் உழைக்க வாய்ப்புகளிருக்கும். 6T. 478.CCh 139.2

    சகோதர சகோதரிகளே, உங்கள் ஜெபங்களாலும், பொருட்களாலும் பிரசுராலயங்களை நீங்கள் ஆதரிக்கும் போது கர்த்தர் உங்கள் பேரில் பிரியமாயிருக்கிறார். தேவனுடைய பெரிதான ஆசீர்வாதம் அந்த ஸ்தாபனங்கள் அடையுமாறு காலை மாலை தோறும் ஜெபியுங்கள். குறை கூறுவதையும், குற்றஞ் சாட்டுவதையும் ஆதரியாதிருங்கள்; உங்கள் வாயிலிருந்து யாதொரு முறுமுறுப்பும் குற்றஞ்சாட்டுதலும் வெளிப்படக் கூடாது; தூதர்கள் இவ்வார்த்தைகளைக் கேட்கிறார்கள் என்பது ஞாபகமிருக்கட்டும். இந்த ஸ்தாபனங்கள் கடவுளால் நியமிக்கப்பட்டவை என்பதை யாவரும் உணரவேண்டும். தங்கள் சுய நலங்களைக் கருதி இவைகளை ஏளனஞ் செய்வோர் தேவனுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். தமது வேலையோடு சம்பந்தப்பட்டயாவும் பரிசுத்தமாக கையாளப்பட வேண்டுமென்பது அவர் திட்டம். 7T. 182, 183.CCh 139.3