Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-43

    ஆடை பற்றிய ஆலோசனை

    நாம் செய்யும் யாவினாலும் நமது சிருஷ்டிகரை கனம் பண்ணுவது போலவே நமது ஆடையினாலும் அவரைக் கனம் பண்ணுவது, நமது சிலாக்கியமாகின்றது. நமது ஆடை சுத்தமும், ஆரோக்கியத்திற் கேற்றதாகவும் இருப்பதுடனே தகுதியும் பொருத்தமுமாக இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகின்றார். CCh 481.1

    நம்முடைய தோற்றம் மிகவும் நன்றாக இருக்குமாறு நாம் சிரத்தை கொள்ள வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்தில் ஆராதனையின் போது தமக்கு முன்பாக ஊழியஞ் செய்கிறவர்களின் ஆடையையும் அதின் வெவ்வேறு அமைப்பையும் கடவுள் திட்டஞ் செய்திருந்தார். அவரைச் சேவிக்கிறவர்கள் தாங்கள் ஆடை அணிந்துகொள்ளும் விதத்தினாலும் அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்று நாம் இதனால் கற்பிக்கப்படுகின்றோம். ஆரோதனுடைய ஆடையைத் தயாரிக்க வேண்டிய விதம் பற்றி திட்டவட்டமாக யாவும் கூறப்பட்டது. ஏனெனில் அவனுடைய ஆடை அர்த்தமுடையது. யாவிலும் நாம் அவருடைய பிரதிநிதிகளாக விளங்க வேண்டும். நம்முடைய தோற்றம் எல்லா விதத்திலும் சுத்தமும் மரியாதையும் கற்பும் உடையதாக விளங்க வேண்டும்.CCh 481.2

    இயற்கைப் பொருட்களாகிய மலர்கள், காட்டு லீலி புஷ்பங்கள் ஆகியவற்றின் மூலமாகப் பரலோகம் அழகை எவ்வாறு மதிப்பிடுகிறதென்று கிறிஸ்து காட்டுகின்றார். மரியாதையுடனே கூடிய அலங்காரமும் எளிய தன்மையும் சுத்தமும் பொருத்தமுடையதுமான நமது ஆடையே அவருக்குப் பிரியமுண்டாக்கும். C. G. 413.CCh 481.3