Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்

    பரிசுத்த ஆவியானவர்-23

    நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையைத் துரிதப்படுத்துவதும், அதை எதிர் பார்த்திருப்பதும் ஒவ்வொரு கிறிஸ்தவனின் சிலாக்கியமாகும். அவரது நாமத்தை அறிக்கை பண்ணின அனைவரும் அவரது மகிமைக்கான கனி கொடுத்திருந்தால் அதிசீக்கிரம் இவ்வுலகம் முழுவதும் சுவிசேஷ விதை விதைக்கப்பட்டு முடிந்திருக்கும். சீக்கிரம் கடைசி அறுப்புக்காக கிறிஸ்து தானிய மணிகளைச் சேர்க்க வந்திருப்பார்.CCh 307.1

    என் சகோதர சகோதரிகளே, பரிசுத்த ஆவிக்காக மன்றாடுங்கள். தேவன் தாம் பண்ணின ஒவ்வொரு வாக்குத் தத்தத்தின் பிணையாக நிற்கிறார். வேதாகமத்தை உங்கள் கைகளில் வைத்துக் கொண்டு நீர் சொன்னபடியே செய்தேன். கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும் என்ற உமது வாக்குத்தத்தத்தை உமக்கு முன்பாக வைக்கிறேன் என்று சொல்லுங்கள். அப்போது கிறிஸ்து, நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ அவைகளை பெற்றுக் கொள்வோம், என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும். நீங்க என் நாமத்தினாலே எதை கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப் படும்படியாக, அதைச் செய்வேன் என்று கூறுவார். (மத். 7:7; மாற். 11:24, யோவா.14:13)CCh 307.2

    கிறிஸ்து தமது தூதர்களை அவருடைய ராஜ்யத்தின் எல்லையெங்கும் அனுப்பி தமது ஊழியக்காரர்களுக்கு தமது சித்தத்தை அறிவிக்கும்படிச் செய்கிறார். அவர் தமது சபையின் மத்தியில் உலாவுகிறார். தமது பின்னடியார்களை அவர் பரிசுத்தப் படுத்தி, மேன்மைப் படுத்திச் சிறப்பிக்க விரும்புகிறார். அவரை விசுவாசிக்கிறவர்களின் செல்வாக்கு உலகில் ஜீவசாரமாக இருக்கும் கிறிஸ்து தமது வலது கரத்தில் நட்சத்திரங்களை ஏந்திக் கொண்டிருக்கிறார். அவைகள் மூலமாக தமது வெளிச்சம் பிரகாசிக்கச் செய்வது அவருடைய நோக்கம், இவ்விதமாக பரலோக சபையில் அவர்கள் மேலான ஊழியம் செய்யும்படிக்கு அவர் தமது ஜனங்களை இங்கு ஆயத்தப்படுத்த விரும்புகிறார். நாம் செய்யும்படி அவர் நமக்கு ஒரு பெரிய வேலையைக் கொடுத்திருக்கிறார். அதை நாம் உண்மையாய்ச் செய்வோமாக. மனுக்குலத்திற்கு தெய்வீகக் கிருபை செய்யக் கூடியது என்ன என்பதை நமது ஜீவியங்களில் நாம் காண்பிக்க வேண்டும்.CCh 307.3

    8T. 22, 23.CCh 308.1