Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-60

    சாத்தானின் பொய்யான அற்புதங்கள்

    தற்கால ஆவேச மார்க்கத்திற்கு பொருந்தும் என இந்த வேத வாக்கியத்தை கவனிக்குமாறு நடத்தப்பட்டேன். “லௌகீக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும் ஒருவனும் உங்களைக் கொள்ளை கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல..” கொலோ 2:8. ஆயிரக்கணக்கானோர் கபால சாமுத்திரிக ஞானத்தினாலும் (மனதிலுள்ளதை வாசித்தறிதல்), மிருக ஆகர்ஷண சக்தியினாலும் (ஹிப்னாடிசம்) வசீகரிக்கப்பட்டு சமுசய வாதிகளாக மாறிவிட்டனர். மனது இவைகளில் தொடங்கி ஓடுமானால், அது தன் சம நிலையை நிச்சயம் இழந்து, பிசாசின் ஆட்சிக்குட்பட்டு விடும். மாய தந்திரம் ஏழை மானிடரின் மனதை நிரப்புகிறது. பெரும் சக்தி கொண்டு பெரிய காரியங்களைச் செய்து முடிக்கிறோம் என்ற எண்ணம் அவர்கள் மேலான வல்லமையின் அவசியத்தை உணர விடுவதில்லை. அவர்களது இலட்சிய நம்பிக்கை “மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.”CCh 695.1

    இந்த்த் தத்துவ ஞானம் இயேசுவின் யோசனை அல்ல, அவரது உபதேசங்களில் இவ்வித யோசனைகள் ஒன்றும் காணப்படவில்லை. அவர்களில் இருக்கும் சக்திக்கு நேராக மானிடரின் மனதை அவர் திருப்பவில்லை. அவர் அவர்களுடைய மனதை எப்பொழுதும் தேவனண்டைக்கே திருப்பி னார். அண்ட சராசரங்களைப் படைத்தவர் அவர்களின் பெலன், ஞானம், இவற்றின் ஊற்று எனக் காட்டினார். 18-ம் வசனத்தில் விசேஷித்த எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது: “மாயமான தாழ்மையிலும், தேவ தூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே வீணாய் இறுமாப்புக் கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப் பொருளை நீங்கள் இழந்து போகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப் பாருங்கள்.”CCh 695.2

    ஆவேச மார்க்கப் போதகர்கள் உங்களை மோசம் போக்க மாய வித்தைக்காரனைப் போன்று கவர்ச்சிகரமாக உங்களிடம் வருவார்கள். நீங்கள் அவர்களின் கட்டுக் கதைகளுக்குச் செவி சாய்த்தால், நீதிக்குச் சத்துருவானவன் உங்களை வஞ்சிப்பான். நீங்கள் அவர்களின் கட்டுக் கதைகளுக்குச் செவி சாய்த்தால், நீதிக்குச் சத்துருவானவன் உங்களை வஞ்சிப்பான். நீங்கள் நிச்சயம் உங்கள் பலனை இழப்பீர்கள். ஒரு முறை மோசக்காரன் செல்வாக்கினால் மயங்கி விட்டால், அது உங்களுக்கு விஷ மூட்டி சாவுக்கேதுவான செல்வாக்கினால் தேவ குமாரனான கிறிஸ்துவிலுள்ள உங்கள் விசுவாசத்தை அசுசிப்படுத்தி, அதை அழித்துப் போடும். பின்பு அவரின் இரத்தத்தின் புண்ணியத்தினால் நீங்கள் சார்ந்து நிற்க மாட்டீர்கள். சாத்தானின் வஞ்சக தத்துவ ஞானத்தால் மோசம் போனவர்கள் தங்கள் பங்கை இழந்துவிடுவார்கள். அவர்கள் நண்பர் என்று கருதப்படும் மரித்தோரில் நம்பிக்கைக்கொண்டு, உதவாத மனக்கண்களை, ஏற்று அர்த்தமற்ற நம்பிக்கைக்கொண்டு, உதவாத மனக்கண்களை, ஏற்று அர்த்தமற்ற நம்பிக்கைகளுக்கு மனதை இணங்கச் செய்து, தங்களைக் கேடானவைகளுக்கு ஒப்புக்கொடுத்துத் தியாகம் செய்யவும் தயாராகி, தங்களையே கேவலப்படுத்திக்கொண்டு, தங்கள் சொந்தப் புண்ணியங்களில் சார்ந்து விடுவார்கள். சாத்தான் அவர்கள் கண்களைக் குருடாக்கி, நியாயத்தை மாறுபாடாக்கிவிட்டமையால், தீமையை அவர்கள் காண்பதில்லை. உயர்ந்த ஓர் இடத்தில் இப்பொழுது தூதர்களாகி விட்ட தங்கள் மரணமடைந்த நண்பர்களிடமிருந்து வல்லமை கிடைக்கப்படுகிறது என்ற போதனைகளைப் பின்பற்றுகிறார்கள். 1T 297, 298.CCh 696.1

    எப்பக்கத்திலும் நம்மைக் காவல் பண்ணி, சாத்தானின் தந்திரங்களையும், ஊன் உணர்ச்சிகளையும் விடாமுயற்சியுடன் தடுக்க வேண்டும் என எனக்குக் காட்டப்பட்டது. அவன் தன்னை ஓர் ஒளியின் தூதனாக மாற்றிக் காண்பித்து, ஆயிரக் கணக்கானவர்களை சிறை பிடித்து நட்த்துகின்றான். மானிட யுகத்தின் விஞ்ஞானத்தை அவன் சாத்தியமாகப் பயன்படுத்துவது எத்தனை அதிகம். சாஸ்திரங்கள் எனப்படும் கபால சாஸ்திரம், மனோ சாஸ்திரம் அல்லது ஹிப்னாடிசம் மூலமாக அவன் தற்கால சந்த்தியாரிடம் வந்து, தவணையின் காலத்தை நெருங்கும் இச் சமயம் தன் முயற்சிகளைக் குறிக்கும் இலட்சணமாக அற்புத வல்லமை கொண்டு கிரியை செய்கிறான். 1T 290.CCh 697.1