Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தசமபாகம் தேவ ஏற்பாடு

    சுவிசேஷ ஆதரவுக்காக மனப்பூர்வமான காணிக்கைகளும், தசமபாகமும் ஏற்படுத்தப்பட்டன. மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட பொருட்களில் தசமபாகத்தை தமக்கென தேவ் அன் உரிமைபாராட்டிக் கேட்கிறார். 5T. 149.CCh 144.1

    தேவ உரிமைகள் மற்ற எல்லா உரிமைகளுக்கும் அடிப்படையானதென்பதை யாவரும் நினைக்க வேண்டும். தமக்குப்பத்திலொன்றைத் திருப்பிக்கொடுக்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தின் மேல் அவர் நமக்குத் தாராளமாய் கொடுக்கிறார். பரலோக பொக்கிஷத்தைக் கர்த்தர் கிருபையாகத் தம் உக்கிராணக்காரரிடம் ஒப்புவித்து, தசமபாகம் என்னுடையது என்கிறார். அவர் எவ்வளவாய் தமது சம்பத்தை மனிதனுக்குக் கொடுத்திருக்கிறாரோ அவ்வளவாய் மனிதன் அவருக்குரியதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இந்தத் திட்டமான ஏற்பாட்டை இயேசு கிறிஸ்து தாமே செய்திருக்கிறார். 6T. 384.CCh 144.2

    இக்காலச் சத்தியம் உலகின் இருண்ட பாகங்களுக்குக் கொண்டு போகப்பட வேண்டும், இந்த வேலை குடும்பத்தில் ஆரம்பமாக வேண்டும்ஜ். கிறிஸ்துவின் பின்னடியார்கள் தன்னலமாய் ஜீவிக்கக் கூடாது; ஆனால் கிறிஸ்துவின் ஆவி நிறைந்தவர்களாய், அவரோடு ஒத்துழைக்க வேண்டும். 3T. 381.CCh 144.3

    தாம்செய்ய வந்ததாக இயேசு அறிவித்த அதே வேலையை அவர் தம் பின்னடியார்களுக்கு ஒப்புவித்திருக்கிறார். ஊழியத்தைச் சுயாதரவுடன் நடத்தும்படி பொருள் சேகரிக்கும் திட்டத்தையும் அவர் அருளியிருக்கிறார். தசமபாக ஒழுங்கு மிக சாதாரணமும் சமநிலைப்படுத்துவதுமான மிக அழகிய தேவ திட்டம். யாவரும் விசுவாசத்தோடும் தைரியத்தோடும் இதைக் கடைப்பிடிக்கலாம்; ஏனெனில், அது கடவுளால் உற்பத்தியானது. இதில் எளிமையும் பிரயோஜமுடங்கியிருக்கிறது; இதைச் செய்வதர்கு ஆழ்ந்த கல்வியும், விவேகமும் தேவையில்லை. மதிப்பிடவொன்ணாத இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்ற யாவருக்கும் இப்படி வாய்ப்பு அருளப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண், பெண், வாலிபர் ஆகிய யாவரும் பொக்கிஷத்தைப் பேணும் கர்த்தருடைய பொக்கிஷதாரிகளாகலாம் உங்களில் அவனவன் ... தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்து வைக்கக்கடவன் --- என்று அப்போச்தலன் கூறுகிறார். (1 கொரி. 16:2).CCh 145.1

    இந்த ஒழுங்கினால் பெருங் காரியங்கள் ந்றைவேற்றப்படுகின்றன. இதை ஒப்புக் கொண்டால், தேவனுக்கென யாவரும் விழிப்பும் உண்மையுமுள்ள பொக்கிஷத்தாரிகளா யிருக்கலாம். உலகத்திற்குக் கடைசி காலத் தூதுகள் கொண்டு போக பணக் கஷ்டமும் ஏற்படாது. இத் திட்டத்தை யாவரும் கைக்கொண்டால், பொக்கிஷமும் நிரம்பி இருக்கும், கொடுப்பவர்களுக்கும் வறுமை வராது. இப்படிக் கொடுப்பதினால் அவர்கள் தேவ ஊழியத்த்தோடு நெருக்கிப் பிணைக்கப்படுவார்கள். அவர்கள் நித்திய ஜீவனைப்பற்றிக் கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கிறார்கள். 1 தீமோத் 6:19.CCh 145.2

    விடா முயற்சியும், திட்டங்களுமுடைய ஊழியர்கள் தங்கள் உதார குணத்தால் தேவனிடம் அன்பு பாராட்டி, உடன் மனிதரைப் பேணுவதினால், தங்கள் முயற்சிகளில் பயனடைந்து, கிறிஸ்துவோடு தங்களை உடன் ஊழியராக்கும் பாக்கியம் பெறுவதையும் காண்பர். கிறிஸ்துவ சபை, பொதுவாக, தேவன் உரிமையுடன் கேட்கும் தான தருமங்கள் செய்வதை விட்டு விட்டு, உலகில் பெருகி வரும் தீய இருளுக்கு விரோதமான போரில் ஈடுபடாமல் போகிறது. தேவனுடைய பிள்ளைகள் சுறுசுறுப்புடன் வைராக்கியமாக உழைக்காவிடில், தேவனுடைய வேலை முன்னேற முடியாது. 3T. 388, 389.CCh 146.1