Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஓய்வுநாளில் நன்மை செய்வது நியாயம்

    வீட்டிலும், சபையிலும் ஊழிய ஆவி காணப்படவேண்டும். இகத்துக்குரிய வேலைக்காக நமக்கு ஆறு நாட்களைக் கொடுத்த தேவன் ஏழாம் நாளை தமக்கென்று பிரத்தியேகப் படுத்தி, அதை ஆசீர்வதித்து, பரிசுத்தப்படுத்தினார். அவரது ஊழியத்திற்கென்று தங்களை, பிரதிஷ்டைச் செய்யும் அனைவருக்கும் அந்நாளில் அவர் விசேஷித்த ஆசீர்வாதம் அருளுவார்.CCh 98.3

    பரலோகமனைத்தும் ஓய்வுநாளை ஆசரிக்கிறது. ஆனால் பற்றில்லாத செயலற்ற முறையிலல்ல. அந்நாளில் நம் சக்திகளெல்லாம் புத்துயில் பெற வேண்டும். நாம் தேவனையும் நமது இரட்சகரான இயேசுவையும் சந்திக்க வேண்டுமல்லவா? நாம் அவரை விசுவாசக் கண்களால் காணலாம். அவர் ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் புத்துயில் அளித்து ஆசீர்வதிக்க வாஞ்சையோடிருக்கிறார். 6T. 361 - 362.CCh 99.1

    நோயும், துன்பமும் அடைந்தவர்கள் ஓய்வுநாளில் கவனிக்கப்படவேண்டுமென்று தெய்வீக இரக்கம் வழி காட்டுகிறது. அவர்கள் கஷ்டங்களை நிவிர்த்திப்பது ஓர் அவசியமான வேலை. அது ஓய்வுநாளை மீறுவது ஆகாது. ஆனால் அவசியமல்லாத வேலை யாவும் தவிர்க்கப்படவேண்டும். ஆயத்த நாளில் செய்திருக்கவேண்டிய சிறிய அலுவலகளை சில ஓய்வுநாள் ஆரம்பமாகும் வரை கடத்தி வைக்கின்றனர். இப்படிச் செய்யலாகாது. ஓய்வு ஆரம்பிக்கும்வரை செய்யாது விடப்பட்ட வேலை யாவும் ஓய்வு முடியும் வரை நிறுத்தப்படவேண்டும். ஓய்வுநாளில் சமைப்பது தவிர்க்கப்படவேண்டுமெனினும் குளிர்ந்த உணவு அருந்த அவசியமில்லை. குளிர் காலங்களில் தயார் செய்யப்பட்ட உணவை வெதுவெதுப்பாக்கிக் கொள்ளலாம். ஆகாரம் சாதாரணமானதும், ருசியுள்ளாதும், விரும்பப்படத்தக்கதாயும் இருக்கவேண்டும். அன்றாட ஆகாரத்தினின்றும் ஓய்வுநாள் ஆகாரம் சிறந்ததாக இருக்கவேண்டும். 2T.T. 184 - 185.CCh 99.2

    கீழ்ப்படிகிறவர்களுக்கு வாக்குதத்தம் பண்ணின ஆசீர்வாதத்தை நாம் பெறவிரும்பினால் ஓய்வுநாளை ஜாக்கிரதையாக ஆசரிக்கவேண்டும். தவிர்க்கப்படக்கூடிய தாயிருந்தும், நாம் அடிக்கடி ஓய்வுநாளில் பிரயாணஞ்செய்கிறோமென நான் அஞ்சுகிறேன். ஓய்வுநாளை ஆசரிப்பதில் தேவ் அன் கொடுத்திருக்கிற வெளிச்சத்தின்படி, படகிலோ, மோட்டார் வண்டியிலோ பிரயாணஞ் செய்வதைக் குறித்து கவனமாயிருக்கவேண்டும். இந்த விஷயத்தில் நம் பிள்ளைகளுக்கும் வாலிபருக்கும் நல்ல முன் மாதிரி காண்பிக்க வேண்டும். நம்முடைய உதவியும், சபைகளுக்குக் கடவுள் அருளும் தூதும் கொண்டு கொடுக்கும்படி இருந்தால் ஓய்வுநாளில் பிரயாணஞ் செய்வது அவசியமாகும். அதற்காக ஏற்கனவே டிக்கட்டுகளை வாங்கி ஆயத்தம் செய்து கொள்ளவேண்டும். ஏதாவது பிரயானம் துவங்கினால் நாம் சேருமிடத்தில் ஓய்வு நாளில் போய் சேராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.CCh 99.3

    ஓய்வுநாட் பிரயாணம் அவசியப்படுகையில் நம்மை லெளகீகத்தில் இழுக்கும் உடன் பிரயாணிகளை விட்டு விலக வேண்டும். நம் மனதைக் கடவுள் பேரில் வைத்து அவரோடு உறவாட வேண்டும். சமயம் வாய்க்கும்போதெல்லாம் சத்தியத்தைப்பற்றி பிறருடன் பேச வேண்டும். கஷ்டப்படுவோரை விடுவிக்கவும்க், தேவையுள்ளோருக்கு உதவவும் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்க வேண்டும். அச்சூழ் நிலைகளில் நமக்கு அருளப்பட்ட ஞானமும் அறிவும் தக்கவாறு உபயோகிக்கப்பட வேண்டும் என கடவுள் விரும்புகிறார். ஆனால் தொழில் துறைச் சம்பந்தமான சம்பாஷணைகளைத் தவிர்க்க வேண்டும். எக்காலத்திலும் எல்லா இடத்திலும் ஓய்வுநாளை ஆசரிப்பதின் மூலம் கடவுளுக்கு நாம் உண்மையுள்ளவர்களா யிருக்க வேண்டுமென அவர் எதிர்நோக்குகிறார்.CCh 100.1