Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சோம்பலாகிய தீங்கு

    சோம்பலினால் மிகுதியான பாவம் உற்பத்தியாகிறதென்று எனக்குக் காண்பிக்கப்பட்டது. சாத்தான் எழுப்பும் ஒவ்வொரு சோதனையயும் கவனிப்பதற்கு சுறுசுறுப்பான கைகளுக்கும் மனதிற்கும் நேரம் இருப்பதில்லை. சோம்பலுள்ள கைகளும் முளையுமோ சாத்தானால் இயக்கப்படு வதற்கு தயாராகவிருக்கும். சரியான நினைவுகளினால் மனது நிரம்பியிராதபோது, தகாதவற்றைச் சிந்திக்கிறது. சோம்பல் பாவமென்று பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டும். 1T 395.CCh 514.2

    பிள்ளைகள் சுமக்கத்தக்கதாக எதையும் விட்டுவைக்காமல், பாரங்கள் அனைத்தையும் தாங்களே சுமந்து கொண்டு சோம்பலாக, நோக்கமில்லாமல், ஒன்றும் செய்யாமல், தங்கள் இஷ்டப்படி வாழப் பிள்ளைகளை விட்டு விடுவதைப் பாக்கிலும் நிச்சயமாக தீமைக்கேதுவாக வழி நடத்தக் கூடியது வேறொன்றுமில்லை. குழந்தைகள் மனது சுறுசுறுப்பாகவிருக்கின்றது. பிரயோஜனமான நற் கரியங்களினால் மனது நிரம்பியிராதபோது, தடையின்றி கெட்ட காரியங்களில் அது திரும்பும். அவர்கள் விளையாட வேண்டியதே ஆயுனும், சேலை செய்யவும் சரீர உழைப்பிற்கென்றும் கல்விப் பயிற்சிக்கும் வாசிப்பதற்கென்றும் ஒழுங்காக சில மணி நேரங்கள் செலவிடவும் கற்றிருக்க வேண்டுக்ம். வயதிற்குத் தக்கபடியே அவர்களுடைய அலுவல்கள் அமைந்திருக்கவும் பிரயோஜனமும் சுவையூட்டுகின்றதுமான புத்தகங்கள் அவர்களுக்கு கொடுக்கப்படவும் வேண்டும். AH 284.CCh 515.1

    ஒரு வேலையைப் பிள்ளைகள் எப்பொழுதும் உற்சாகத்துடனே ஆரம்பஞ் செய்வார்கள். அதினால் உண்டாகும் சோர்பினாலும், எப்படிச் செய்கிறதென்று அறியாததினாலும் அதை விட்டுப் புதியதான வேறொன்றை ஆரம்பஞ் செய்வர். இவ்வாறு அவர்கள் அனேக காரியங்களை ஆரம்பித்து, சிறிது அதைரியமடையும் பொழுது, அவற்றைக் கைவிட்டு, ஒரு அலுவலை விட்டு ஒன்றிற்கு மாறுவார்கள். ஒன்றிலும் பூரணமடையார்கள். இத்தகைய மாறுதலை நாடும் ஆசை பிள்ளைகளை ஆட்கொள்ளுவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது. முன்னேற்றமடைந்து வருகின்ற மனதைப் பொறுமையுடனே சிட்சை செய்வதற்கு நேரமே இராதபடிக்கு வேறு அனேக காரியங்களில் அவர்கள் கவனம் செலுத் தக் கூடாது. ஊக்கப்படுத்துகின்ற ஒரு சில வார்த்தைகளைப் பேசுவதாலும், ஏற்ற வேளையில் சிறிய உதவிகளாஇச் செய்வதாலும் பிள்ளைகளுக்கு இருக்கிற தொல்லையையும் அதைரியத்தையும் அவர்கள் பொருட்படுத்தாதிருக்குமாறு செய்யலாம். வேலை முடிந்ததென்ற திருப்தி அதிக உழைப்பு செய்வதற்கு அவர்களுக்குத் தூண்டுதல் அளிக்கும். 3T 147, 148.CCh 515.2

    செல்வம் கொடுக்கப்பட்டு, குற்றேவல்களைப் பிறரிடம் எதிர்பார்க்கும் பழக்கமுடைய பிள்ளைகள் எப்பொழுதும் அவ்வாறே காரியங்கள் நடைபெற வேண்டுமென்று எதிர் பார்ப்பர். அவர்கள் நினைத்தது போல யாவும் நடை பெறாவிடின், அதைரியமும் ஏமாற்றமும் கொள்ளுவர். அவர்களுடைய வாழ் நாள் முழுவதும் இத் தன்மை அவர்களிடம் காணப்படும். அவர்கள் சக்தியற்று, பிறர் மேல் சார்ந்து, அவர்கள் தங்களுக்குப் பட்சம் காண்பிக்க வேண்டுமென்றும், அல்லது விட்டுக் கொடுக்க வேண்டுமென்றும் எதிர் நோக்குவர். பிள்ளைப் பிராயம் கடந்து பெரியோரான பிறகும், தங்களுக்கு எதிர்ப்பு உண்டாகுமானால், தாங்கள் உதாசீனம் செய்யப்படுவதாக எண்ணுவர். இவ்வாறு தங்கள் பாரத்தை சுமக்க இயலாதவர்களாக முறுமுறுத்துக்கொண்டும் சிடுசிடுத்துக் கொண்டும் கவலைப்பட்டுக் கொண்டே உலகில் தங்கள் வழியில் செல்லுகின்றனர். ஏனெனில் யாவும் அவர்கள் விருப்பத்திற்கேற்ப இருப்பதில்லை. 1T 392, 393.CCh 516.1

    தான் நெருப்பிற்கு விறகும், குடிப்பதற்கு நீரும் கொண்டு வந்து, விறகைப் பிளப்பதற்கு கோடரியையும் கையில் எடுக்கும் பொழுது, அவளுடைய ஆண் பிள்ளைக?ளும் புருஷனும் நெருப்பைச் சூழ உட்கார்ந்து, ஒருவரோடொருவர் உறவாடி கஷ்டமில்லாமல் பொழுது போக்குமாறு ஒரு பெண்பிள்ளை தன்னுடைய வேலையைச் செய்து முடித்து, தன் குடும்பத்தாரின் வேலையையும் செய்து நிறைவேற்றும் பொழுது தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பெருந் தவறு இழைக்கின்றான். மனைவியரும் அன்னையருமானவர் தங்கள் குடும்பங்களுக்கு அடிமைப் பணி புரிவது கடவுளுடைய ஏற்பாடு அல்ல. தன் பிள்ளைகள் விட்டுப் பாரங்களை சுமப்பதில் பங்கு கொள்ளாதிருப்பதினிமித்தம் அனேக அன்னைமார் பெரும் பாரமடைந்திருக்கின்றனர். இதின் விளைவாக அவள் வயது முதிர்ந்து, காலத்திற்கு முன்பாக மரணமடைகின்றாள். அவர்களுடைய அப்பியாசமில்லாத பாதங்களை வழி நடத்துவதற்கு அன்னையானவள் இல்லாமல் தீராது என்று எண்ணும் பொழுது, அவள் பிள்ளைகளை விட்டுப் பிரிக்கப்படுகின்றான். யாரைக் குற்றஞ் சாட்டுவோம்? மனைவிக்கு இருக்கும் வேலைகளைக் குறைப்பதற்கு புருஷர்கள் செய்ய வேண்டிய அனைத்தும் செய்து, அவளுடைய ஆவியின் உற்சாகத்தைப் பாதுகாக்க வேண்டும். சோம்பேறித்தனத்தைப் பிள்ளைகளிடம் பேணவோ அனுமதிக்கவோகூடாது. ஏனெனில் சோம்பல் பழக்கமாகிவிடும். 5T. 180, 181.CCh 516.2