Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தாமதிப்பதின் ஆபத்து

    இராத் தரிசனத்தில் ஒரு அழுத்தமான காட்சி எனக்குக் காட்டப்பட்டது. ஒருபெரும் அக்கினி பிழம்பு அழகான மாளிகைகளுக் கிடையே விழுந்து, உடனே அவைகளை நாசப்படுத்தியதை நான் கண்டேன். நியாயத்தீர்ப்பு உலக மீது வருமென்று நாங்கள் அறிவோம், ஆயினும் இவ்வளவு துரிதமாக வருமென்று நாங்கள் உணரவில்லை என்று ஒருவர் சொல்லக் கேட்டேன். வேறு சிலர் வேதனை நிறைந்த குரலில்: நீங்கள் அதை அறிந்திருந்தீர்களே, பின்னே ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை? எங்களுக்குத் தெரியாமலிருந்ததே என்று சொன்னார்கள். எப்பக்கமும் இப்படிப்பட்ட வசைச் சொற்களைக் கேட்டேன்.CCh 126.1

    பெருங்கலக்கத்தோடு நான் எழுந்திருந்தேன். மறுபடியும் படுத்தேன், அப்பொழுது நான் ஒரு பெருங்கூட்டத்தின் மத்தியிலிருப்பதாகக் கண்டேன். ஒரு அதிகாடமுடையவர் அக்கூட்டதில் பேசினார். அவர் முன் உலகப் படமொன்று வைக்கப்பட்டிருந்தது. அவர் அந்த உலகப் படம், பன்படுத்தப்படவேண்டிய தேவ திராட்சத் தோட்டத்தைக் குறிக்கும் என்றார். யார் மேல் பரம ஒளி வீசுகிறதோ அவர்கள் CCh 126.2

    அவ்வொளியை பிறர் மீது வீசச் செய்யவேண்டும். அனேக இடங்களில் தீபங்கள் கொளுத்தப்பட வேண்டும். இவைகளிலிருந்து மற்ற தீபங்களும் கொளுத்தப்பட வேண்டும்.CCh 127.1

    “நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரம்ற்றுப் போனல், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே யொழிய வேறோன்றுக்கும், உதவாது; நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள். மலை மேலிருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளூத்தி மரக்காலால் மூடி வைக்காமல் விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சங்கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்துபடி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக் கடவது” (மத். 5:13-16.) என்ற வார்த்தைகள் சொல்லப்பட்டன.CCh 127.2

    கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், முடிவுக்கு நம்மை அழைத்துக்கொண்டு போகிறது. அது நம்மைத் தேவனிடமும் நெருங்கும்படிச் செய்கிறதா? நாம் விழித்திருந்து ஜெபிக்கிறோமா? நம்மோடு அனுதினமும் பழகுகிறவர்களுக்கு நம் உதவியும் வழிகாட்டுதலும் அவசியம். தகுந்த இடத்தில் அறையப்பட்ட ஆணியைப் போன்று, சமயத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் பரிசுத்த ஆவியால் அவர்கள் மனதுக்கு ஏற்ற உதவியாய் அருளப்படும். நாளைக்க்ய் இந்த ஆத்துமாக்களில் சிலர் நாம் எட்டக்கூடாத வேறிடத்தில் இருக்கலாம். இந்த உடன் பிரயாணிகள் மேல் நமது செல்வாக்கு எப்படி இருக்கிறாது? கிறிஸ்துவிடம் அவர்களை வழி நடத்த நாம் என்ன முயற்சி செய்கிறோம்? 9T.27,28.CCh 127.3

    தூதர்கள் நான்கு காற்றுகளையும் பிடித்துக்கொண்டிருக்கையில், நமது முழுத் திறமையோடும், உழைக்க வேண்டும். தாமதியாமல் தூதை விரைந்து கொடுக்கவேண்டும்.CCh 127.4

    கிறிஸ்துவை ஆக்கியோனும், அவரது வசனத்தை ஆதாரமுமாகக் கொண்ட நமது மார்க்கம் ஒருவிசுவாசமும், ஒரு வல்லமையுமாயிருக்கிறதென்று நாம் பரலோகத்திற்கும், இப்பொல்லாத சந்ததியின் மக்களுக்கும் சாட்சியாகக் கூறியறிவிக்க வேண்டும். தராசுத்தட்டில் மானிட ஆத்துமாக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று அவர்கள் தேவ ராஜ்ய பிரஜைகள் ஆகலாம்; அல்லது சாத்தானுடைய கொடுமைக்கு அடிமைகளாகலாம். சுவிசேஷத்தில் கூறப்பட்ட நம்பிக்கையை யடைய யாவருக்கும் சிலாக்கியம் உண்டு. பிரசங்கி இல்லாவிட்டால் அவர்கள் எப்படி கேள்விப் படுவார்கள்? மனுக்குலம் தேவ சமுகத்தி நிற்கத்தக்கதாக ஒருசன்மார்க்க சீர்திருத்தமும், குண ஆயத்தமும் அவசியம். சுவிசேஷ தூதுகளைப் புரட்டும் பல பிழையான கோட்பாடுகளால் ஆத்துமாக்கள் நாசத்திற்கு ஏதுவாயிருக்கின்றன. ஆதலால், தேவனோடு உழைக்க யார் தங்களைப் பூரணமாய் பிரதிஷ்டை செய்வார்கள்? 6T.21.CCh 128.1

    நமது சபையிலுள்ள பெரும்பான்மையோர் இன்று பாவத்திலும் அக்கிரமத்திலும் மரித்திருக்கிறார்கள். கதவு தன் கீல்களில் ஆடிக் கொண்டிருப்பது போல் அவர்கள் வந்து போகிறார்கள். பல ஆண்டுகளாக மிக பக்தி வினயமான, ஆத்தும எழுப்புதலடையும் சத்தியங்களைக் கேட்டும், அவைகளை அப்பியாசிக்காமலிருக்கிறார்கள். எனவே, அவர்கள் சத்தியத்தின் மகத்துவத்தைப் பற்றி வரவர உணர்ச்சி குன்றிப் போகிறார்கள். கலக்கக்கூடிய எச்சரிப்புகளும், கண்டிப்புகளும் அவர்களை மனந்திரும்பச் செய்வதில்லை. தேவன் தமது மனிதர்கள் மூலம் பேசும் இனிய சத்தியங்களாகிய விசுவாசத்தினால் நீதிமானாகுதல் -------கிறிஸ்துவின் நீதி என்பவைகளை அவர்கள் அன்போடும் நன்றியோடும் ஏற்றுக் கொள்வதில்லை. பரம வியாபாரி அவர்களுக்கு விசுவாசமும், அன்புமாகிய விலையேறப்பெற்ற ரத்தினங்களைக் காட்டி நெருப்பினால் புடமிடப்பட்ட பொன்னையும் தாங்கள் CCh 128.2

    உடுத்திக்கொள்ள வெண் வஸ்திரத்தையும் தாங்கள் பார்க்கும்படி கலிக்கத்தையும் வாங்கும்படி அழைத்தாலும், அவர்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி, அன்புக்கும் பக்தி வைராக்கியத்திற்கும் தங்கள் வெது வெதுப்பை மாற்றிக்கொள்ளத் தவற்ப்போகின்றனர். கிறிஸ்தவர்களென சொல்லிக்கொண்டபோதிலும் தேவ பக்தியின் வல்லமையை மறுதலிக்கின்றனர். இந்நிலைமையில் நிலைத்திருப்பார்களாகில், தேவன் அவர்களைப் புறக் கணிப்பார். அவருடைய குடும்ப அங்கத்தினராவதற்குத் தங்களை அபாத்திரராக்கிக்கொள்ளுகிறார்கள். 6T. 426,427CCh 129.1

    சபை டாப்பில் தங்கள் பெயர்கள் பதியப்பட்டிருப்பதினால், தங்கள் இரட்சிப்பு உறுதியென சபை அங்கத்தினர் எவரும் கருதக்கூடாது. அவர்கள் வெட்கப்படாத ஊழியக்காரராக இருந்து தேவனால் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். கிறிஸ்துவின் திட்டப்படி தங்கள் குணத்தை அவர்கள் தினமும் கட்டவேண்டும். அவரை இடைவிடாது விசுவாசித்து, அவரில் நிலைத்திருக்க வேண்டும். இவ்விதமாக பூரணமும், மகிழ்ச்சியும், நன்றியும் நிறைந்தவர்களாய் நடந்து, தேவனால் மென்மேலும் ஒளியில் நடத்தப்பட்டு கிறிஸ்துவுக்குள் பூரண புருஷராயும் ஸ்திரீகளாயும் வளருவார்கள். இது அவர்கள் அனுபவமாயிராவிடில், ஒரு நாளில் பின் வருமாறு மனங்கசந்து புலம்புவார்கள்; அது: அறுப்புக்காலம் சென்றது; கோடைகாலம் முடிந்தது; என் ஆத்துமாவோ இரட்சிக்கப்படவில்லை; அடைக்கலத்துகாக நான் ஏன் அரணுக்குள் போகாதிருந்தேன்; நான் ஏன் என் ஆத்தும இரட்சிப்பை அலட்சியஞ் செய்தேன்? கிருபையின் ஆவியை நான் ஏன் அசட்டை செய்தேன். 9T. 48.CCh 129.2

    நெடுங்காலமாக விசுவாசிகளாக இருக்கிறோம் என்று சொல்லும் என் சகோதர சகோதரிகளே, நான் உங்களைத் தனித்தனியாக கேட்பது என்னவெனில், பரலோகத் தால் உங்களுக்கு அருளப்பட்ட ஒளி, சிலாக்கியங்கள், வாய்ப்புகள் ஆகியவைகளைச் சரியாக பயன்படுத்திருக்கிறீர்களா? இது மிகவும் பயபக்திக்குரிய கேள்வி. நீதியின் சூரியன் சபை மீது உதயமாகியிருக்கிறது; எழுந்து பிரகாசிப்பது சபையின் கடமை. ஒவ்வொரு ஆத்துமாவும் முன்னேறக்கடமைபட்டிருக்கிறது. கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்ட ஆண்கள் பெண்கள் யாவரும் தேவ குமாரனைப் பற்றும் அறிவிலும் கிருபையிலும் பூரணமாய் வளருவார்கள். சத்தியத்தை விசுவாசிப்பதாகக் கூறும் யாவரும் தங்களுக்குரிய திறமைகளையும் வாய்ப்புகளையும் கற்பதிலும், ஊழியத்திலும் பயன்படுத்தியிருந்தால், அவர்கள் சமுசாரிகளாயினும், இயந்திரத் தொழிலாளிகளாயினும், ஆசிரியர்களாயினும், போதகர்களாயினும் சரி, அவர்கள் முழுவதும் தங்களைத் தேவனுக்குத் தத்தஞ் செய்திருப்பார்களாயின் பரம எஜமானுக்கு அவர்கள் திறமை வாய்ந்த ஊழியர்களாயிருக்கலாம். 6T.423.CCh 129.3