Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கோபமாயிருக்கையில் சிட்சிக்காதீர்கள்

    உங்கள் பிள்ளைகள் கீழ்ப்படியாதவர்களாயிருப்பார்களாகில், அவர்களைச் சிட்சிக்க வேண்டும். அவர்களைச் சிட்சிப்பதற்கு முன்பாக நீங்கள் கர்த்தரிடம் தனித்துப் போய் அவர் பிள்ளைகளின் இருதயங்களை இலகுவாக்கி கீழ்ப்படுத்தும்படியாகவும், அவர்கள் காரியத்தில் உங்களுக்கு ஞானம் அளிக்கும்படியாக கேளுங்கள். ஒரு சந்தர்ப்பத்திலாவது இந்த முறை பலன் அளிக்காமற் போனதை நான் கண்டதில்லை. பெற்றோரின் இருதயத்தில் கோபதாபம் குடி கொண்டிருக்கும் பொழுது, ஆவிக்குரிய காரியங்களைக் குழந்தையானவன் அறிந்து கொள்ளும்படி செய்வதற்கு அவர்களால் கூடாது.CCh 522.1

    உங்கள் பிள்ளைகள் நீங்கள் அன்புடன் சிட்சை செய்தல் வேண்டும். நீங்கள் கோபமடைந்து அவர்களைத் தண்டிக்கும் வரைக்கும் அவர்கள் தங்கள் இஷ்டப்படியே செய்ய இடமளிக்காதேயுங்கள். அத்தகைய சிட்சை தீமையை விலக்காமல் சேர்க்கின்றது.CCh 523.1

    தவறு செய்கின்ற பிள்ளையின் மேல் கோபதாபத்தை வெளிப்படுத்துவது தீமையை அதிகரிக்கச் செய்கிறது. பிள்ளையின் கெட்ட சுபாவங்களை எழும்பச் செய்து, உங்களுக்கு அவன் மீது அக்கரை இல்லை என்று அவனை உணரச்செய்கின்றது. அவனில் அக்கரை கொண்டிருந்தால் நீங்கள் அவனை இப்படி நடத்த மாட்டீர்களென்று அவன் தனக்கே நியாயம் சொல்லிக்கொள்ளுகின்றான்.CCh 523.2

    இந்தப் பிள்ளைகள் இரட்சிக்கப்படுகிற விதத்தைக் குறித்து கடவுள் அறியவில்லை என்று நீங்கள் எண்னுகிறீர்களோ? அவர் அதை அறிந்திருப்பதுடனே, வெறுப்பு உண்டாகும் விதமாக சிட்சை அளிக்கப்படுவதைப் பார்க்கிலும் ஆதாயம் பண்ணதக்க முறையில் சிட்சை அளிக்கப்படும்பொழுது ஆசீர்வாதமான பலன்கள் உண்டாகக் கூடுமென்றும் அறிகிறார். CG 244, 245.CCh 523.3