Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சபைக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரம்

    கிறிஸ்து சபைக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறார். “பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” மத். 18.18. இப்படிச் செய்வதில் ஒரு மனிதன் தன் சொந்தப் பொறுப்பினாலோ, தான் தெரிந்துகொள்ளும் கருத்துப்படியோ, சபையின் விருப்பபத்துக்கு மாறாக எதையும் செய்ய முடியாது. வானத்தின் கீழ் தேவன் மகா உன்னத வல்லமையைச் சபைக்கு வழங்கியிருக்கிறார். சபையின் ஐக்கியத்தால் தேவ சத்தமாக வெளிவரும் கட்டளை மதிக்கப்படவேண்டும். 3T. 450, 451.CCh 197.1

    சபையின் தீர்ப்புகளுக்கு மாறாக ஒருவன் தன் முடிவை நிறைவேற்றவோ, சபையின் அபிப்பிராயங்களுக்கு மேலாக தன் அபிப்ராயங்களைத் திணிக்கவோ தேவ வசனம் எவருக்கும் அதிகாரம் வழங்கவில்லை. சபைச் சிட்சைகளும், ஆளுகையும் இல்லாவிட்டால் சபை சின்னபின்னமாகப் போகக்கூடும், ஒரே அங்கமாக இணைந்திருக்க முடியாது. தங்களைத் தேவன் கற்பித்து, ஏவி, வழி நடத்திவருவதாகச் சொல்லி, தாங்கள் செய்வதெல்லாம் சரியென பாராட்டிக் கொள்ளும் சுயபோக்கு மனப்பான்மையுடையோர் இருப்ப துண்டு. தங்கள் சொந்த கோட்பாடுகளையும், தங்களுக்கே சரியாகத் தோன்றும் அபிப்பிராய்களையும் தேவ வசனத்திற்குப் பொருந்தியிருப்பதாக அவர்கள் சாதிக்கிறார்கள். தங்கள் விசுவாசத்திற்கேற்றவாறு விதவிதமான கோட்பாடுகளை வைத்துக்கொண்டு, தங்களிடமிருப்பதே தேவனிடமிருந்து வந்து விசேஷ ஒளியெனச் சாதிக்கிறார்கள். இவர்கள் சரீரத்திலிருந்து விலகி தனித்தனியாக தங்களைச் சபையாக்கிக் கொள்ளுகிறார்கள். இவை யாவும் சரியாக இருக்க முடியாது, ஆயினும் இவர்கள் எல்லாரும் கர்த்தரால் நடத்தப்படுவதாகச் சாதிக்கிறார்கள்.CCh 197.2

    இருவர் மூவர் ஒருமனப்பட்டு தேவனிடம் எதைக் கேட்கிறார்களோ, அது அவர்களுக்கு அருளப்படுமென்பது இரட்சகர் அருளிய வாக்கு, கேட்கும் எந்த ஒரு விஷயத்தைக் குறித்தும், ஒருமனப்பாடு அவசியமென்று கிறிஸ்து இங்கு காட்டுகிறார். ஒரே நோக்கத்துடன் ஒருமனப்பட்டு விண்ணப்பஞ் செய்வது மிக முக்கியமாகும். தனி ஆளுடைய ஜெபங்கள் கேட்கப்படுக்கின்றன, ஆனால் பூமியில் புதிதாக நியமிக்கப்பட்ட சபைக்கு ஒருமனப்பட்ட ஜெபம் அந்தியந்த அவசியமென உணர்த்தப்பட்டது. தங்கள் தேவையைப்பற்றியும், தாங்கள் ஜெபிப்பது பற்றியும் யாவரும் ஒருமனப்பட்டிருப்பது அவசியம். வஞ்சிக்கப்படக்கூடிய ஒருவனின் எண்ணங்களும், செயல்களுமல்ல, பலருடைய விருப்பங்கள் ஒரே நோக்கமாய் ஒன்றுபட்டு ஊக்கமாய் ஜெபிக்கப்படுதலே காரியம். 3T.428,429.CCh 198.1

    மனித இரட்சிப்புக்கென தேவனால் ஏறபடுத்தப்பட்ட ஸ்தாபனம் தேவ சபையே. அது உலகத்திற்கு சுவிசேஷத்தைக் கொண்டு செல்லவும் ஊழியஞ் செய்யவும் ஏற்படுத்தப்பட்டது. ஆதி காலத்திருந்தே சபை மூலம் தேவ நிறைவும் பூரணமும் உலகத்திற்குப் பிரதிபலிக்க வேண்டுமென்பது தேவ திட்டம். சபையார், தங்களை இருளிலிருந்து ஆச்சரிய மான ஒளியினிடத்திற்கு வழி நடத்தியவருடைய மகிமையைக் காட்ட வேண்டும். சபை கிறிஸ்துவின் கிருபா ஐசுவரிய பொக்கிஷ சாலை, கடைசியாக, வானமண்டலங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் தேவ அன்பின் முடிவான பூரண வெளிப்படுத்தல் சபையின் மூலமே விள்ககப்படும். A.A.9.CCh 198.2