Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரிசுத்தமாக்கப்பட்டதின் அத்தாட்சி

    நமது இரட்சகர் உலகத்துக்கு ஒளி, உலகமோ அவரை அறிந்துகொள்ளவில்லை. இரக்கத்தின் கிரியைகளைச் செய்து, எல்லாருடைய பாதையிலும் ஒளி வீசச் செய்தார்; என்றாலும் அவர் தம்மிடம் வெளிப்படையாகக் காணப்படாமல் விளங்கிய தம் தற்தியாகம், சுய வெறுப்பு, தயை ஆகிய சிறந்த இலட்சணங்களைப் பார்க்கும்படி எவரையும் அழைக்கவில்லை. யூதர்களோ அப்படிப்பட்ட ஜீவியத்தை விரும்பவில்லை. அவருடைய போக்கு உதவாததென அவர்கள் எண்ணினார்கள், ஏனெனில் அது அவர்கள் திட்டத்துக் கொத்த பக்தியல்ல. கிறிஸ்து ஆவியிலும் குணத்திலும் மார்க்கப் பற்றுடையவரல்ல என அவர்கள் முடிவு கட்டினார்கள்; ஏனெனில் வெளி ஆசாரங்களிலும், சந்திகளில் ஜெபிப்பதிலும், பிரதிபலனடையும்படி தருமங்களை செய்வதிலுமே அவர்கள் மார்க்கம் அடங்கியிருந்தது.CCh 180.3

    பரிசுத்தமாக்கப்படுதலின் விலையேறப்பெற்ற கன் சாந்தம். சாந்தம் இருதயத்தில் உறைந்தால் அதன் செல்வாக்கால் மனம் புனிதமடைகிறது. சதா தேவனுக்குக் காத்திருந்து, அவர் சித்தத்துக்குக் கீழ்ப்படுகிறது. சுய வெறுப்பு, தற்தியாகம், தாராள சிந்தை, பட்சம், அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, கிறிஸ்துவ நம்பிக்கை ஆசிய கனிகள் தேவனோடு இணைக்கப்பட்டவர்களில் காணப்படும். அவர்கள் நடவடிக்கைகள் உலகமறிய பறைசாட்டப்படாமலிருக்கலாம்; ஆனால் அவர்கள் தினமும் தீமையோடு போராடி, சோதனைகள் மேலும், தவறுகள் மேலும் மதிப்பிடக்கக்கூடாத வெற்றியடைகிறார்கள். பக்தி வினயமான பிரதிக்கினைகள் புதுப்பிக்கப்பட்டு, ஊக்கமான ஜெபத்தோடும், இடையறா விழிப்போடும் பெற்ற பலத்தினால் அவைகளைக் கைக்கொண்டு வருகிறார்கள். இந்த அமைதியான ஊழியர்களின் போராட்டங்களை ஆர்வமுள்ள மத வைராக்கியன் அறிந்து கொள்வதில்லை; ஆனால் இருதயங்களின் இரகசியங்களை அறிந்து கொள்ளுகிறவருடைய கண் இப்படி மனத்தாழ்மையோடும் சாந்தத்தோடும் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் காண்கிறது. குணத்தில் காணப்படும் சுத்தப் பொன்னாகிய அன்பு, விசுவாசம் சோதனை காலத்தில் வெளிப்படும். கஷ்டங்களும் கலக்கங்களும் சபைக்கு வரும்போது, கிறிஸ்துவின் மெய்த் தொண்டர்களின் உறுதி வைராக்கியமும், அனலுள்ள பாசங்களும் விருத்தியடைகின்றன.CCh 181.1

    உண்மைப் பக்தியுள்ள ஒருவனுடைய செல்வாக்குக்குட்படும் எவரும் அவனுடைய கிறிஸ்துவ ஜீவியத்தின் அழுகையும், வாசனையையும், கண்டு கொள்வர். அவனோ அதை அறியாமலிருக்கலாம்; ஏனெனில் அது அவனுடைய பழக்கங்களிலும் இயற்கை சுபாவங்களிலு அமைந்து உருவாகியிருக்கிறது. அவன் தெய்வீக ஒளிக்காக ஜெபித்து, அந்த ஒளியில் நடக்க ஆசிக்கிறான். பரம பிதாவின் சித்தப்படிச் செய்வதே அவனுக்குப் போஜன பானமாயிருக்கிறது. தேவனுக்குள் கிறிஸ்துவுடனே கூட அவன் ஜீவன் மறைந்திருக்கிறது; என்றாலும் இதைக் குறித்து அவன் தற்புகழ்ச்சியாகப் பேசுவதுமில்லை, அல்லது அப்படி தான் இருப்பதாக உணர்வதுமில்லை. தாழ்மையோடும் பணிவோடும் ஆண்டவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறவர்களைப் பார்த்து தேவன் புன்முறுவல் செய்கிறார். தூதர்கள் அவர்களிடம் இழுக்கப்பட்டு, அவர்கள் அண்டை தாமதித்து நிற்கிறார்கள். தங்கள் நற் கிரியைகளைப் பறைசாற்றுகிறவர்களாலும், பெரும்பேறுகளைப் பெற்றவர்களாகத் தங்களை மதித்துக்கொள்ளுகிறவர்களாலும் அவர்கள் கவனிக்கப் படாமல் ஆகாதவர்கள் வீடப்படலாம். ஆனால் பரம தூதர்கள் இவர்களைச் சூழ அக்கினி மதில்கள் போல இறங்கி நிற்கலாம்.CCh 182.1